ஜெயம் உணவு நிறுவனம்

பெயர் : திருமதி.சுகந்தி  
முகவரி : ஜெயம் உணவுப் பொருட்கள்,
101, தங்கம் நகர், காந்தி நகர் (அஞ்சல்),
வடக்குத்து, நெய்வெலி, கடலூர் மாவட்டம்
அலைபேசி எண் :94860 89781
குறு /சிறு/ பெரு விவசாயிகள் : சிறு தொழில் முனைவோர்  

வெற்றி கதையின் காரணங்கள் மற்றும் அவைகளின் பங்கு கடலூர் மாவட்டத்தில் பண்ணை மகளிர் மற்றும் இல்லத்தரசிகளுக்கு மாற்று வருமான திட்டங்களோ அதற்கான வழிமுறைகளோ பெரிய அளவில் இல்லை
 • ஆனால் வேளாண் விளை பொருட்களிலிருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பானது இவர்களுக்கு லாபம் தரககூடிய நல்ல தொழிலாக அமையும் என்று எமது நிலைய தொழில்நுட்பவல்லுநர்கள் உணர்ந்திருந்தனர்.
 • திருமதி.சுகந்தி மற்றும் அவரோடிருந்த குழுவினருக்கு காய்கறி மற்றும் சிறுதானியப் பொருட்களிலிருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பில் 21 நாட்கள் தொடர்பயிற்சி இந்நிலைய வளாகத்தில் 2009ம் வருட இறுதியில் வழங்கப்பட்டது.
 • பயிற்சியில் ஊறுகாய் ஜாம்  வகைகள் மசாலா வகைகள் போன்றவற்றை வணிக ரீதியில் தயாரித்து விற்பனை செய்வதற்கு திறம்பட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டன.
 • தரமான உணவுவகைகள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் கண்டுனர் சுற்றுலக்களுக்க திருமதி.சுகந்தி மற்றும் அவர்  சார்ந்த குழுவினர் அழைத்துச் செல்லப்பட்டு பயிற்றுவிக்கப்பட்டனர்.
 • முதலில் ஒரு நாளைக்கு 10-20 கிலோ என்ற அளவிற்கு ஊறுகாய் மற்றும் மசாலாப் பொருட்களை தயாரித்து அக்கம்பக்கத்தில் விற்று மாதம் ரூ.1500 என்று அளவில் லாபம் ஈட்டி வந்தார்.
 • நிலைய தொழில்நுட்ப வல்லுநர்களின் தொடர்பயிற்சி மற்றும் விளக்கம் ஆகியவற்றின் காரணமாக, இதனை சிறுதொழிலாக நெய்வேலியில் தொடங்கினர்.
 • தற்போது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் “ஜெயம் ஊறுகாய்” “ஜெயம் மசாலா வகைகள்” என்ற பெயரில் தமது உணவுகளை அனுப்பி பெரிய அளவில் லாபம் ஈட்டி வருகின்றார்.
வருமானம் /மாதத்திற்கு: மாதத்திற்கு தோரயமாக ரூ.20,000/- வேலை வாய்ப்புகள்: இவருடைய நிறுவனத்தில் மொத்தம் 8 தொழிலாளர்கள் வேலைவாய்ப்பினைப் பெற்று தொடர்ந்து பணிபுரிந்து வருகின்றனர். தொழில்நுட்பத்தின் மூலம் பெறப்பட்ட வருமானம்: தோரயமாக மாதத்திற்கு ரூ.20,000/- பண்ணை விரிவாக்கம் பற்றிய எதிர்கால திட்டம்:
 • தற்போது மா, எலுமிச்சை, இஞ்சி, பூண்டு, நார்த்தங்காய் வகைகளில் ஊறுகாய் தயாரித்து வரும் இவர் எதிர்காலத்தில் பல்வேறு வகைகளிலும் ஊறுகாய் தயாரிப்பினை விஸ்தரிக்க திட்டமிட்டு வருகின்றார்.
 • காய்கறி தவிர சிறுதானிய வகைகளிலும் மதிப்பூட்டம் செய்யப்பட்ட உணவு வகைகளை தயாரிக்கவும் திட்டமிட்டு வருகின்றார்.
 • தொழிலாளர் வேலைவாய்ப்பினை 10-20 என்று எண்ணிக்கையில் உயர்த்தியும் அதற்கேற்ப தமது மாத வருமானத்தை தற்போதைய ரூ.20,000 த்திலிருந்து ரூ.50,000 வரையிலும் அதிகரித்திடும் வகையிலும் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றார்.
பிற உழவர்களுக்கு எடுத்துக் கூறும் எண்ணம்
 • ஒரு சாதாரண ஒரு இல்லத்தரசி மாதம் ரூ.20,000 வரை லாபம் ஈட்டும் போது அனைவரும் இத்தொழில் மூலம் சிறந்த வருவாய் பெற இயலும்.
 • மதிப்பூட்டப்பட்ட வேளாண் விளைபொருட்களின் தேவையானது தற்போதைய  கால கட்டத்தில் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. எனவே அனைவரும் இத்தொழில் மூலம் சிறந்த வருவாய் பெற இயலும்.
 • மதிப்பூட்டப்பட்ட உணவுவகைகள் மூலம் விவசாயம் செய்யாதவர்களும், சிறந்த பயிற்சியின் மூலம் சிறந்த தொழிலதிபராக முடியும்.
மாண்புமிகு துணைவேந்தர், த.வே.ப.க அவர்கள் ஜெயம் உணவு நிறுவனத்தின் உணவு வகைளைப் பார்வையிடுகிறார் திருமதி.என்.சுகந்தி வேளாண்மை செம்மல் விருதை மாண்புமிகு வேளாண்மைத் துறை அமைச்சர் அவர்களிடமிருந்து 11.01. 15 அன்று பெறுகிறார்.
Updated on Feb , 2015
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015