தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேளாண் இணைய தளம்
த.வே.ப.க வேளாண் இணைய தளம் :: உழவர்களின் கண்டுபிடிப்பு 

உழவர்களின் சாகுபடி முறைகள்

சின்ன வெங்காயம் அபிவிருத்திக்கான சாகுபடி முறைகள்

நிலம் தயாரித்தல் :

முதலில் நடவு வயலை ஆழமான தலைகீழ் கலப்பை கொண்டு உழ வேண்டும். பின்னர் வளைந்த கலப்பை அல்லது 5 கொத்து கலப்பை கொண்டு உழவு செய்ய வேண்டும். மண்ணில் உள்ள கட்டிகள் உடையும் வரை நன்கு தூளாக உழவு செய்ய வேண்டும். கடைசி உழவின் பொழுது டை –அம்மோனியம் பாஸ்பேட் -150 கிலோ, ம்யூரேட் ஆப் பொட்டாஷ் -150 கிலோ, மெக்னீசியம் சல்பேட் -100 கிலோ, டெராபேஸ் -10 கிலோ, ரூட் ஸ்டிம் -1 கிலோ மற்றும் ஜிப்சம் 2 டன் இட்டு வயலை நன்கு உழவு செய்ய வேண்டும். சீரான வயல் மேற்பரப்பைப் பெற ஒரு சுழல் உழவு கடைசியாக செய்ய வேண்டும்.

நீர்ப்பாசனம்:

விதைக்கும் சமயத்தில் வயல் நனையுமாறு நுண்துளி தெளிப்பு நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். மூடு பனியைக் குறைக்க காலை அரை மணி நேரம், தாவர மற்றும் மண் வெப்பநிலையைக் குறைக்க மாலை அரை மணி நேரம் நுண்துளி தெளிப்பு நீர்ப்பாசனம் செய்ய வேண்டும்.


Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player


தெளிப்பு நீர்ப்பாசனம்

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player


நிலம் தயாரித்தல் & தெளிப்பு நீர் கருவி அமைப்பு

தெளிப்பு நீர் கருவி அமைப்பு :

பிரதான குழாய் 2 ½ அங்குல அகலம், துணை பிரதான குழாய் 2 அங்குல அகலம் கொண்டு வடிவமைக்கப்பட்டு மண்ணில் புதைக்கப்பட்டது. ஆதரவு குழாய் அரை அங்குல அளவில் உயர்த்தப்பட்டு நடப்பட்டுள்ளது. பக்கவாட்டு குழாய் 16 மி.மீ. அளவு கொண்டு வடிவமைக்கப்பட்டது. ஒரு நுண்துளி தெளிப்பு நீர் கருவிக்கும், மற்றொரு கருவிக்கும் இடையேயான இடைவெளி 16 அடி ஆகும். நுண்துளி தெளிப்பு நீர் கருவியின் கவர் எல்லை 8 அடி ஆகும். நீர் துளிகள் ஒன்றுடன் ஒன்று கலப்பதைத் தவிர்த்து வயல் முழுவதும் சீராக நனைய இது வழிவகுக்கிறது.

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player


தெளிப்பு நீர்ப் பாசனத்தின் நன்மைகள் மற்றும் வெங்காயம் விதைப்பு

Updated on : Aug 2015

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2009-15

Agritech Portal - Tamil Agritech Portal- English