தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேளாண் இணைய தளம்
த.வே.ப.க வேளாண் இணைய தளம் :: உழவர்களின் கண்டுபிடிப்பு 

உழவர்களின் சாகுபடி முறைகள்

சின்ன வெங்காயம் அபிவிருத்திக்கான சாகுபடி முறைகள்

களை எடுப்பதற்கு முன் வெங்காய வயலின் தோற்றம்

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player


களை மேலாண்மை & உரப் பயன்பாடு

களை மேலாண்மை :

களைகளைக் கட்டுப்படுத்த இரண்டு கைக்களை வெங்காயம் நடவு செய்த 20 மற்றும் 35ம் நாட்களில் செய்யப்பட்டது.

பயிர்ப்பாதுகாப்பு :

பூஞ்சாண நோய்களைக் கட்டுப்படுத்த, அவதார் 40 கிராம்/ டேங்க், விசைத்தெளிப்பான் கொண்டு நடவு செய்த 25ம் நாளில் தெளித்தார். மேலும் இலைப்பேனைக் கட்டுப்படுத்த, பிப்ரோனில் @ 20 மில்லி/  டேங்க் மற்றும் நிம்பிசிடின் @ 10 மில்லி/டேங்க்  நடவு செய்த 45ம் நாட்களில் விசைத்தெளிப்பான் கொண்டு தெளித்தார்.

அறுவடை மற்றும் மகசூல் :

வெங்காயத்தாள் மடங்கி, பச்சையத்துடன் காணப்படும் பொழுது, வெங்காயத்தாளைக் கையால் பிடுங்குவதன் மூலம் அறுவடை செய்யப்படுகிறது. இரண்டு ஏக்கரின் மகசூல்: 9240 கிலோ ஆகும்.

குறிப்பு:

1. ஃபோல்ஜெல்: துத்தநாகம், ஜிங்க், போரான், தாமிரம், மாங்கனீசு மற்றும் இரும்பு சத்துக்கள் அடங்கியுள்ளன.

2. மைக்ரோஜெட் 23: ஃபோல்ஜெல் போன்றே இதிலும் பல நுண்ணூட்ட சத்துகள் உள்ளன.

3. கால்ஜெட்: இது கால்சியம், மெக்னீசியம், சல்ஃபர் மற்றும் அமினோ அமிலங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது.

4. ஆர்கானிக்ஸ் புரோ: அமினோ அமிலங்களின் தெளிப்பு. இதில் தாவரங்களில் இருந்து எடுக்கப்பட்ட 1 சதவிகிதம் ஹியூமிக் அமிலம் உள்ளது.

5. ஃபோர்டிரஸ்: திரவ சிலிகா சார்ந்த நுண்ணூட்டச்சத்து.

வரவு செலவு விகிதம்:

  • மொத்த சாகுபடி செலவு (2 ஏக்கர்) : ரூ.78,000/-
  • மொத்த வருமானம்(2 ஏக்கர்): ரூ.2,77,200/-
  • நிகர வருமானம்(2 ஏக்கர்): ரூ.1,99,200/-

வரவு-செலவு விகிதம்=மொத்த வருமானம்(எக்டர்-1) / மொத்த சாகுபடி செலவு (எக்டர்-1)
                                 =ரூ.2,77,200/ 78,000
                                 =3.55

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player


வெங்காயம் சாகுபடி பொருளாதாரம்

Updated on : Aug 2015

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2009-15

Agritech Portal - Tamil Agritech Portal- English