தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேளாண் இணைய தளம்
த.வே.ப.க வேளாண் இணைய தளம் :: உழவர்களின் கண்டுபிடிப்பு 

உழவர்களின் சாகுபடி முறைகள்

மஞ்சளில் நுண் துளி தெளிப்பு நீர் பாசனம் - வீடியோ... (கிளிக் செய்யவும்)

மஞ்சள் சாகுபடி வழிமுறைகள்

விதை மஞ்சள் இருப்பு

: BSR1, BSR2, ஈரோடு, சேலம், சுவர்னா

பருவம்

: மே முதல் ஜீன் வரை நடவுக்கு ஏற்ற பருவமாகும்.

சிறப்புப் பண்புகள்

இரகங்கள் சிறப்புப் பண்புகள்

BSR1

ஒரிஸ்ஸா மாநிலத்திலிருந்து வந்த இரகமான இது நோய் எதிர்ப்பு            தன்மை கொண்டது. அதிக மகசுர் தரக்கூடியது.

ஈரோடு

ஈரோடு வகை மஞ்சள் சிறியது மற்றும் குறைந்த அளவே மகசூல் தரக்கூடியது.

சேலம்

சேலம் பகுதிகளில் இருந்து வந்த இந்த இரகம் பெரியது மற்றும் அதிக மகசூல் தரக்கூடியது.

மேல்குறிப்பிட்ட காரணங்களால் BSR1 இரகம் பயிரிடுவதற்கு பயன்படுத்தப்படுகின்றது.

turmeric

பயிர் மேலாண்மை

நிலம் தயாரித்தல்

மஞ்சள் சாகுபடிக்கு, மண்ணின் கார அமிலத்தன்மையாது 6-7 இருக்க வேண்டும். அதனுடன் செம்மண் நிலங்கள் நன்றாக உழவுப்பட்டு இருப்பது மஞ்சள் சாகுபடிக்கு இன்றியமையாததாகும். சூப்பர் பாஸ்பேட், பொட்டாஷ் மற்றும் டெரா சேர் போன்றவை அடியுரமாக கடைசி உழவில் அளிக்கப்பட வேண்டும். அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபாக்டீரியா ஒவ்வொன்றும் 10 கிலோ எடுத்துக்கொண்டு அதனுடன் 100 கிலோ மாட்டுச்சான மக்கிய குப்பை எடுத்துக் கொண்டு 80 கிலோ வேப்பம் புண்ணாக்குடன் ஒவ்வொரு வரிசையிலும் இட வேண்டும். அதனுடன் பெரஸ்சல்பேட் 12 கிகி மற்றும் காப்பர் சல்பேட் 6 கிலோ ஆகியவையும் இடவேண்டும். நடவுக்கான மேட்டுப் பாத்தி நான்கு அடி அகலமும், ஒரு அடி உயரமும் இருக்கும் படி அமைக்கப்பட வேண்டும்.
ஒரு ஏக்கருக்கு 800 கிலோ மஞ்சள் கரணைகள் நடவுக்கு தேவைப்படுகின்றது. நடவுக்கு முன், 4 கிலோ அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா கலவையில் கரணைகளை நன்றாக 2 மணி நேரத்திற்கு உரவைக்கப்பட வேண்டும். நடவுக்கு 12 மணி நேரத்திற்கு முன்பு பாத்தியில்  நன்கு நீர்ப்பாய்ச்சிட வேண்டும். அதில் கரணைகள் மூன்று வரிசைகளில் 60 × 45 ×15  செ.மீ. என்ற இடைவெளியில் 4 செ.மீ. ஆழத்தில் ஊன்ற வேண்டும். நடவிலிருந்து அறுவடை வரை 100:60:120 என்ற விகிதத்தில் தலைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து அளிக்கப்பட வேண்டும். உரப்பாசனம் ஒருநாள் விட்டு ஒரு நாள் செய்வதன் மூலம் மகசூலை அதிகரிக்கலாம். எப்பொழுதும் மண்ணை மஞ்சள் செடியைச் சுற்றி 30, 70 மற்றும் 100 ஆவது நாட்களில் கூட்டி வைப்பதன் மூலம் களைகளைக் கட்டுப்படுத்தலாம். மாதம் ஒரு முறை மூன்று மாதங்களுக்கு 150 கி பெரஸ் சல்பேட், 150 கி ஜிங்க், 150 கி போரான் மற்றும் 150 கி யூரியா போன்றவை 250 லிட்டர் கரைசலில் தெளிக்கப்பட வேண்டும். நான்கு மாதத்திற்கு பின் போதிய அளவு வளர்ந்தும் களைகள் நிழலினால் கட்டுப்படுத்தப்படுகின்றது. ஒன்பது மாதத்திற்கு பிறகு மக்களின் இலைகள் காய்ந்து தொங்க ஆரம்பிப்பதன் மூலம் அவை அறுவடைக்குத் தயாரானது உறுதி செய்யப்படுகின்றது. சராசரியாக 4500 கிலோ காயவைக்கப்பட்ட மஞ்சள் மகசூல் பெறலாம். நீர்ப்பாய்ச்சலில் காய்ச்சு நீர்ப்பாசனம் செய்யும் முறை கடைப்பிடிக்கப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் பாத்தியில் நீர்தேக்கம் இருக்கக்கூடாது.

மஞ்சளுக்கான உரப்பாசன அட்டவணை

மஞ்சளுக்கான /பயிர் பருவம் /ஏக்கர் பரிந்துரைக்கப்படும் உரங்கள் 100 60 120      

 

பயன்படுத்தப்படும் உரங்கள்

கி.கி

6.5 ஏக்கருக்கான மொத்த அளவு கி.கி

ஒரு ஏக்கருக்கான சுழற்சி முறையில் வழங்கப்படும் அளவு கி.கி

தழை

மணி

சாம்பல்

கால்சியம்

மக்னீசியம்

சல்பர்

அடியுரம்

டை அமோனியம் பாஸ்பேட்

75

487.5

 

13.5

34.5

0

0

0

0

அடியுரம்

மோனோ ஆஃப் பொட்டாஷ்

50

325

 

0

0

30

0

0

0

அடியுரம்

டெர்ராகேர்

100

650

 

0

0

0

6

6

6

15-45

12-61-0

2.5

162.5

1.67

3

15.25

0

0

0

0

15-45

யூரியா

50

325

3.33

23

0

0

0

0

0

15-45

கால்சியம் நைட்ரேட்

25

162.5

1.67

3.75

0

0

4.75

0

0

15-45

டெர்ராபேஸ்

10

65

0.67

0

0

0

0

0

0

15-45

அமோனியம் சல்பேட்

50

325

3.33

10.5

0

0

0

0

12

15-45

மக்னீசியம் சல்பேட்

25

22162.5

1.67

0

0

0

0

2.4

3.5

45-90

12-61-0

20

130

0.91

2.4

12.2

0

0

0

0

45-90

13-0-45

50

325

2.27

6.5

0

22.5

0

0

0

45-90

யூரியா

50

325

2.27

23

0

0

0

0

0

45-90

டெர்ராபேஸ்

10

65

0.45

0

0

0

0

0

0

45-90

மக்னீசியம் சல்பேட்

25

162.5

1.14

0

0

0

0

2.4

3.5

45-90

கால்சியம் நைட்ரேட்

25

162.5

1.14

3.75

0

0

4.75

0

0

90+

13-0-45

100

650

1.67

13

0

45

0

0

0

90+

0-0-50

60

390

1.00

0

0

30

0

0

9.6

90+

கால்சியம் நைட்ரேட்

25

162.5

0.42

3.75

0

0

4.75

0

0

90+

மக்னீசியம் சல்பேட்

25

162.5

0.42

0

0

0

0

2.4

3.5

90+

0 உரம்

0

0

 

0

0

0

0

0

0

 

 

 

 

 

106.15

61.95

127.5

20.25

13.2

38.1

குறிப்பு : மேற்குறிப்பிட்ட உரங்கள் தனித்தனியே அளிக்கப்பட வேண்டும்.

பூச்சிகள் மற்றும் நோய்கள் மேலாண்மை

மஞ்சளில் கரணை அழுகல் நோயின் அறிகுறிகள் செடியின் நுனியிலிருந்து வேர் வரை காய்வது ஆகும். இலையின் நுனிகளில் மஞ்சள் நிறமாற்றங்கள் பொதுவான ஒன்றாகும். இதைக் கட்டுப்படுத்த மஞ்சள் கரணைகள் 0.2% மீத்தைலாக்சில் கரைசலில் நடவுக்கு முன் 30 நிமிடங்களுக்கு ஊர வைக்கப்பட வேண்டும்.

மஞ்சளில் இலைப் புள்ளி நோய்

ஆரம்பத்தில் சின்ன மஞ்சள் நிற புள்ளிகள் வந்து பின்னர் அவை பெரிய வட்டமான புள்ளிகளாக மாறுகின்றன. பின்னர் இலைகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு தொங்க ஆரம்பிக்கின்றன. இதைக் கட்டுப்படுத்த கார்பென்டசிம் மற்றும் மான்கோசெப் போன்றவற்றை 2% ஒட்டுவானுடன் கலந்து தெளிக்கலாம்.

மகசூல்: 4500 கிலோ காய்ந்த மஞ்சள் /ஏக்கர்

Updated on : March 2015

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2009-15

Agritech Portal - Tamil Agritech Portal- English