| | |  | | Eco Tourism | | |

வனவியல் தொழில்நுட்பங்கள்

   

நாற்றங்கால் தொழில்
நுட்பங்கள்

ஒப்பந்த பயிர்ச் செய்கை
திட்டங்கள்
உழவர் திறன் மேம்பாட்டு
பயிற்ச்சிகள்

வன விரிவாக்க மையங்கள்
வங்கி கடன் உதவி
வெட்டு மர போக்குவரத்து
விதிமுறைகள்

வனவயில் பத்திரிகைகள்
புதிய தொழில்நுட்பங்கள்
வன கொள்கைகள்

தைலமரம்

பொதுப்பெயர்  : தைலமரம், யூகலிப்டஸ்(பதிமரம்)
தாவரவியல் பெயர்  : யூகலிப்டஸ்டெட்ரிகார்னிஸ்

சாகுபடி செய்ய ஏற்ற நிலம்
அனைத்து மண் வகைகளிலும், தரிசு நிலங்களிலும் வளரக்கூடிய மரமாகும். கடல் மட்டத்திலிருந்து 1000 மீட்டர்வரை வளரக்கூடியது

நடவுப்பருவம் : ஆடி முதல் கார்த்திகை வரை(ஜீன் முதல் நவம்பர் வரை)
இடைவெளி : வரிசைக்கு வரிசை 9 அடி, செடிக்கு செடி 4 1/2 அடி
நாற்றுக்களின் எண்ணிக்கை : ஏக்கருக்கு 1000
குழிஅளவு      : நீளம் 1 அடி, அகலம் 1 அடி, ஆழம் 1 அடி

நிலம் தயார் செய்தல்
            தேர்பு செய்யப்பட்ட நிலத்தில் உள்ள முட்புதர்களை நீக்கி கண்டிப்பாக சட்டி கலப்பை கொண்டு உழவு செய்ய வேண்டும். 9 அடி இடைவெளியில் வரிசை வரிசையாக 1 அடி ஆழ சால் உழவு செய்ய வேண்டும். ஒவ்வொரு சால் வரிசையிலும் 41/2 அடி இடைவெளியில் 1 கன அடி குழிகள் எடுக்க வேண்டும்.

நடவு செய்தல்
மக்கிய தொழுஉரத்துடன் உயிர் உரத்தை கலந்து அடி உரமாக இட்டு பாலிதீன் பைகளில் உண்டாக்கப்பட்ட நல்ல தரமான நாற்றுக்களை பாலிதீன் பையை பிளேடு மூலம் நீக்கி வேரைச்சுற்றி உள்ள மண் கட்டிகள் உடையாமல் நடவேண்டும்.

பராமரிப்பு
நட்டபின் மழை இல்லையெனில் வாரம் ஒருமுறை செடிகள் உயிர் பிடித்து தழையும் வரை தண்ணீர் ஊற்ற வேண்டும். முதல் ஆண்டிலேயே பழுதான நாற்றுக்களை மறுநடவு செய்தல் வேண்டும். டிசம்பர் மாதத்தில் செடிகளின் இடையில் உள்ள களைகளை அகற்றி நன்கு கொத்தி மண் அணைக்க வேண்டும். ஒவ்வொரு வரிசைக்கும் இடையில் டிராக்டர் மூலம் வருடம் 2 முறை உழவு செய்ய வேண்டும். ஆடு மாடுகளினால் சேதம் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும்.

கவாத்து
அ. ஒரு வருடத்திற்குப் பின் செய்தல்
ஆ. முதன்மைய தண்டோடு இணைத்து இலைகளில் கவாத்து செய்தல்
இ. 2.2 செ.மீ. உயரத்தில் கவாத்து செய்தல்
ஈ. கவாத்து செய்யும் போது முதன்மை தண்டுப்பகுதி பாதிக்காத வகையில் செய்ய வேண்டும்
உ. கவாத்து செய்த கிளைகளை அகற்றுதல்
ஊ. கவாத்து கிளைகள் நிலப்போர்வையாகவும், எரிபொருளாகவும் பயன்படுகிறது

3.வெட்டுதல்
அ. தரையுடன் சேர்த்து ஒட்டி வெட்ட வேண்டும்
ஆ. சாய்வாக வெட்ட வேண்டும்
இ. கூர்மையான முறையில் வெட்டவேண்டும்
ஈ. வெட்டும் போது மரம் விழும் திசையை முன்கூட்டியே கணித்து வெட்ட வேண்டும்

தனிமைப்படுத்துதல்
அ. 2-4 மறுதாம்புகள் வரை உள்ள நன்றாக வளர்ந்த மறுதாம்புகளை தேர்வு செய்ய வேண்டும்
ஆ. தேர்ந்தெடுக்கும் மறுதாம்பு, தண்டின் மையப்பகுதியில் இருத்தல் அவசியம்
இ. தனிமைப்படுத்துதல் செய்முறை முதலில் ஒரங்களில் ஆரம்பித்து மையத்தில் முடிய வேண்டும்

மகசூல்
ஐந்து வருடங்களில் தைல மரம் செய்யப்படும். நல்ல மண் வாகு, நீர் வசதியுள்ள இடங்களில் ஏக்கருக்கு சராசரியாக 40 டன் கிடைக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் 1 ஏக்கரில் 4 முதல் 5 ஆண்டு கால இடைவெளியில் ரூ.50,000/- வரை வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.

பூச்சிகளை கண்டறிதல்
இலை முடிச்சு
அ. இலையின் மையப்பகுதி, காம்பு மற்றும் நுனிக்கிளைகளில் காணப்படும
ஆ. 1 மி.மீ. சுற்றளவுள்ள உப்பிய வீக்கங்களாக இலையின் இருபக்கமும் தென்படும்
இ. தொடர்ந்த பூச்சி தாக்குதல் மரத்தின் வளர்ச்சியை குன்றிப் போக செய்யும்
ஈ. நாள் பட்ட தாக்குதல் இலைகளில் துளைகளை ஏற்படுத்தும
உ. இலைமுடிச்சின் தாக்குதலினால் இளம் மரக்கன்றுகளின் கிளைகள் தொங்கிக் காணப்படும்
ஊ. இதன் தாக்குதலால் அதிகமாக இலை உதிரும்

தண்டு வீக்கம்
அ. தண்டு பகுதி பருத்து காணப்படும்
ஆ. பிறகு பட்டையில் பிளவு ஏற்படுதல்
இ. கருமைநிறத்தில் ஒழுகுதல்
ஈ. அதனுடைய அறிகுறி பக்கக் கிளைகளிலும் தென்பட்டு தண்டு பகுதி வெடித்து காணப்படும்

 
 

| | |  |  | Eco Tourism | | |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008