நன்னெறி வேளாண் முறைகள் :: அடிப்படை கோட்பாடுகள்


நன்னெறி வேளாண் முறைகளின் அடிப்படை கோட்பாடுகள்

  1. தூய்மையான மண்வளம் : உரம் மற்றும் கால்நடை மூலம் மண்ணில் நுண்ணுயிர் வராமல் கட்டுப்படுத்துதல் மற்றும் நன்கு மக்கிய உரங்கள் பயன்படுத்துவதன் மூலம் தூய்மையான மண்வளம் பாதுகாக்க முடியும்.
  2. தூய்மையான தண்ணீர் நிலத்தடி நீர் மற்றும் மழைநீர் ஆகியவற்றை நீர் வழிந்தோட்டம் அல்லது கால்நடைகள் மாசுபடுத்தாமல் பாதுகாக்க வேண்டும். பாசன நீரை மனித நோய்க் கிருமிகள் இல்லாமல் பாதுகாக்க வேண்டும். நீர் பரிசோதனை மூலம் நிலத்தடி மற்றும் மேல்மட்ட நீரை குறிப்பிட்ட காலங்களில் அடிக்கடி பரிசோதனை செய்யவேண்டும்.
  3. தூய்மையான கரங்கள்: பண்ணை தொழிலாளர்கள் சுத்தமான பழக்க வழக்கங்கள் கடைப்பிடிக்க வேண்டும்.
  4. தூய்மையான சூழ்நிலை : பண்ணை கருவிகள், சேமிப்பு கிடங்கு மற்றும் வாகனங்களை நன்றாக கழுவி தூய்மையாக பயன்படுத்துதல். நன்னெறி வேளாண் முறையில் முக்கியமாக பண்ணைப் பதிவேடு பராமரிக்க வேண்டும். இதன் மூலம் பண்ணையின் சுற்றுப்புறச் சூழல் மாசுபடாமல் பாதுகாக்க முடியும்.

நன்னெறி வேளாண்முறையின் நன்மைகள்

  1. நன்னெறி வேளாண் முறைகளை சரியான முறையில் கடைபிடித்து கண்காணிக்கும்போது உணவு மற்றும் வேளாண் விலைப் பொருளின் பாதுகாப்பு மற்றும் தரத்தினை மேம்படுத்தப்படுகிறது.

  2. சர்வதேச மற்றும் தேசிய தரக்கட்டுப்பாடு, விதிமுறைகள் கடைப்பிடிக்கும் போது உணவு பொருளில் நச்சுத் தன்மை மற்றம் எஞ்சிய  பொருளில் நச்சு இல்லாமல் பொருளை உற்பத்தி செய்யலாம்.

  3. நன்னெறி வேளாண்முறையை கடைப்பிடிக்கும் போது நீடித்து நிலைத்த வேளாண்மை ஊக்குவிக்கப்படுகிறது.

நன்னெறி வேளாண்முறையின் சவால்கள்:

  1. நன்னெறி வேளாண்முறையை கடைபிடிக்கும் போது தகவல் கையேடு மற்றும் தரச் சான்றிதழ் பெருவது உற்பத்தி விலையை அதிகரிக்கும். ஆகையால்

  2. சிறு விவசாயிகள் சர்வதேச சந்தை வாய்பினை பெறுவதற்கான தகவல்கள் மற்றும் பயிற்சிகளை பெறுவது கடினம். அவ்வாறு பயிற்சிகளை பெறுவதுடன் அரசு மற்றும் பொது முகாமை நிலையங்களின் தரநிலையை அடைவதற்கான தகவல்கள் அறிவது கடினம்.

நன்னெறி வேளாண் முறையின் தரநிர்ணயம் :

எல்லா கால மற்றும் சமுதாய சூழ்நிலைகளின் நன்மைக்கு ஏற்புடையதாக இல்லாததால் அதிக தற்கங்கள் ஏற்படுத்துகிறது. வேளாண் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதன் மூலம் விளைச்சல் மற்றும் உற்பத்தி திறனை அதிகரிப்பதோடு மற்றும் அல்லாமல் அவர்களின் சுற்றுப்புற சூழல் மற்றும உடல்நலத்தை பாதுகாக்கலாம்.

நன்னெறி வேளாண் முறைகளில் கடைபிடிக்க வேண்டியவை:

அங்கீகரிக்கப்பட்ட நன்னெறி வேளாண் சான்றிதழ் வழங்கும் நிறுவனத்துடன் தொடர்பை நன்னெறி வேளாண் முறைகள் மற்றும நன்னெறி கையாளும் முறைகளை பழம் மற்றும் காய்கறி உற்பத்தியாளர்கள், பதனிடுபவர்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். நன்னெறி வேளாண் முறையை அறுவடைக்கு முன் (வயலின்) கடைபிடிக்க வேண்டும் ஆனால் நன்னெறி கையாளும் முறை அறுவடைக்கு பின் பின்பற்றப்பட வேண்டிய முறையாகும்.

நீர்: 

நீர் ஒரு இன்றியமையாத வளமாகும். பண்ணை வேளாண் உற்பத்தி பாதுகாப்பில் சுத்தமான நீரே முக்கிய ஆதாரமாகும். வேதி மற்றும் உயிரின இடையூறுகள் பரவுவதற்கு நீர் முக்கிய பங்கு வகிக்கிறது. நீர்பாசனம், நாற்று நடவு, பூச்சிக்கொல்லி மற்றும் உரமிடுதல், விளைப்பொருட்கள் சுத்தப்படுத்துதல், பதனிடுதல், குளிர்சாதனத்தில் சேமித்தல் ஆகிய எல்லா நிலைகளிலும் நீர் பயன்படுத்தப்படுகிறது. மாசுபட்ட நீரை உபயோகிக்கும் போது, நஞ்சு மற்றும் உயிர் கிருமிகள் உணவு சங்கிலியில் நுழைந்து மனிதனின் உடல் நிலையை பாதிக்கிறது. உயிர்கிருமிகளான,  இ. கோவை, சால்மோனெல்லா, ஷிகெல்லா, கிரிப்டோஸ்போராய்டியம், சைக்ளோஸ்போரா மற்றும் இப்பாடிடிஸ்-ஏ. நீரில் மூலம் பரவக்கூடியவைகள்.

உழவர் அறிய வேண்டியவை

பாசன நீர்,போதிய அளவு மக்காத மற்றும் பசும் உரங்கள், நாட்டு மிருகங்கள் மூலம் நோய் கிருமிகள் பயிரை தாக்காமலிருக்க உழவர்கள் கடைபிடிக்க வேண்டிய நன்னெறி வேளாண் முறைகள்

பாசனம் மற்றும் தெளிப்பான்களுக்கு பயன்படுத்தப்படும் நீரின் தரம்

  1. நோய் கிருமி காரணிகள் நன்றாக மூடப்பட்ட கிணறுகளில் காணப்பட்டால் உடனடியாக அழித்துவிட வேண்டும்.
  2. தண்ணீரை குறிப்பிட்ட காலநிலைகளில் சோதனை செய்ய வேண்டும்

நன்னெறி வேளாண் முறைகள்
நமது நாட்டிலும் இந்த நன்னெறி வேளாண் முறைகளை கடைப்பிடிப்பதற்காக இந்தியா (GAP) என்ற திட்டத்தை வேளாண் உணவுப் பொருட்களைப் பதப்படுத்தும் மற்றும் ஏற்றுமதி நிறுவனம் (APEDA). அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டம், சர்வதேச உத்திகளைப் பின்பற்றி இந்திய விவசாயிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2013