நன்னெறி மேலாண்மை முறைகள் :: பூச்சிக்கொல்லி உபயோகம்

வேளாண் பூச்சிக்கொல்லி உபயோகத்திற்கான நன்னெறி மேலாண்மை முறைகள்

பூச்சி, களை மற்றும் நோயிலிருந்து பயிரையும் கால்நடைகளையும் பாதுகாக்க, பூச்சிக்கொல்லிகள் பெரும்பாலும் உபயோகிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சக, கணக்கெடுப்பின்படி, 70 சதவிகிதம் பூச்சிக்கொல்லி, வேளாண்மையிலும் மீதமுள்ள 30 சதவிகிதம் நகர்ப்புறம், தொழில்சாலை, காடுகள் மற்றும் பொதுத் துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இப்பூச்சிக் கொல்லிகள், வேளாண் விளைப்பொருள் உற்பத்தியை அதிகரிக்கவும், வேலையாட்களை  குறைக்கவும் உபயோகிக்கப்படுகிறது. ஆயினும், தவறான வழிமுறையினால், மனித உடல் நலக் கேடும், வனவிலங்கு இழப்பும், தண்ணீரின் தரமும் பாதிக்கப்பட்டுள்ளது. இரசாயனத்தில் (முக்கிய குழுக்களான) பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி மற்றும் பூஞ்சாணக்கொள்ளி ஆகியவை கருதப்படுகிறது. களைக்கொல்லிகளே வேளாண்மையில் அதிகமாக உபயோகிக்கப்படும் இரசாயனப் பொருளாகும், அதே சமயத்தில் நிலத்தடி நீரிலும் அதிகம் காணப்படும் நச்சுப் பொருளாகும். இருந்த போதிலும் மிகவும் துல்லியமாகக் கண்டறியும் முறைகள் மூலம் மிகக் குறைந்த அளவு நச்சுக்களே நிலத்தடி மற்றும் மேற்பரப்பு நீரில் காணப்படுவதற்கு வாய்ப்புள்ளது. நகர்ப்புற வாசிகள்  இந்நீரை பயன்படுத்துவதால், வேளாண் தொழில் செய்பவர்கள், நச்சுக் கலக்காத வண்ணம் தொழில் செயல்முறையை அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும்.
பண்ணை செயல்முறைக்கு பூச்சிக்கொல்லிகள் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆகையால் மாசுபட்ட நிலத்தடி நீரை சுத்தம் செய்வது மிகக்கடினம், உற்பத்தியாளர் பூச்சிக்கொல்லி உபயோக முறையினை மதிப்பறிந்து நன்னெறி மேலாண்மை முறையைக் கையாளவேண்டும்.

பூசிக்கொல்லி உபயோக முறைகள்
வேளாண் செயல்முறைகள் பூச்சிக்கொல்லி உபயோகிப்பது ஒரு இன்றியமையாததாக இருந்த போதிலும், அநேக விவசாயிகள் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மையை கையாளுகின்றனர். ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை பூச்சிக்கொல்லி உபயோகத்தை வெகுவாக குறைத்து தரமான உணவுப் பொருள் உற்பத்தி செய்யவும், அதே சமயத்தில் அதிக இலாபமும் பெறலாம்.

ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை என்பது இராசயன பூச்சிக்கொல்லியுடன் கைவினை முறையும் உயிரி முறை கட்டுப்பாட்டையும் ஒருங்கிணைத்து பூச்சி மேலாண்மை செய்வதாகும். இம்முறையில் பொருளாதார சேதநிலையின் கீழ் பூச்சிகளை கட்டுப்பாட்டுக்குள் வைக்க, குறைந்த அளவு பூச்சிக்கொல்லியை உபயோகிக்க வலியுறுத்தப்படுகிறது. சரியான பூச்சிக்கொல்லியினை பூச்சித் தாக்குதல் அதிகம் காணப்படும் சமயத்தில் உபயோகிப்பதே சிறந்த ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மையாகும்.

ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மையே நன்னெறி மேலாண்மை முறையின் முக்கியப் பூச்சி மேலாண்மை முறையாகும். அம்முறையின் சில செயல்முறைகள்

  1. பூச்சி மற்றும் பூச்சி தின்னிகளின் தொகையை கண்காணித்தல்.
  2. பூச்சித்தாக்குதலை தாங்கி வளரக்கூடிய பயிர் மற்றும் இரகங்களை தேர்ந்தெடுத்தல்.
  3. நடவு மற்றும் அறுவடை தேதிகளை பூச்சித் தாக்காத வண்ணம் நியமித்தல்,
  4. பயிர் சுழற்சி செய்தல்.
  5. நன்மை தரும் பூச்சிகளையும், உயிரி கட்டுப்பாட்டு முறையையும் உபயோகித்தல்.

பூச்சிக் கட்டுப்பாட்டு முறையை மாற்றி ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மையை செய்வதற்கு, பண்ணை வழிமுறைகளில் குறிப்பாக, உழவு முறை உரமிடுதல், பயிர்சுழற்சி முறை மற்றும் சுத்திகரிப்பு முறை ஆகியவற்றில் மாற்றம் தேவை. இவ்வாறு நடைமுறைப்படுத்த சில பரிசோதனைகளும், ஆராய்ச்சியாளர்களின் ஒத்துழைப்பும் தேவைப்படும்.

பூச்சிக்கொல்லி பயன்படுத்தும் முறைகள்
பூச்சிக் கட்டுப்பாடு செய்ய பூச்சிக்கொல்லி உபயோகிக்கும் போது, நீரின் தரம் பாதிப்படையாமல் பயன்படுத்தும் முறையைக் கையாளுவது மிகவும் முக்கியமாகும். பூச்சி மேலாண்மையில் சான்றிதழ்
பெற்றவராகவும், புதிய யுத்திகளை அறிந்தவராகவும் இருக்கவேண்டும். பூச்சிக்கொல்லிகளை தகுந்த நேரத்தில் சிறந்த கட்டுப்பாட்டு திறன் கிடைக்கும் சமயத்தில் உபயோகிக்க வேண்டும். பூச்சியின் பருவ சுழற்சி வெப்பத்தினாலும், ஈரப்பதத்திலும் பெரிதும் பாதிக்கப்படுகிறது. அநேக  நேரங்களில், பூச்சிகள் நடமாட்டமில்லாத / செயலற்ற நிலையில் இருக்கும் போது பூச்சிக்கொல்லி உபயோகம் நல்ல பலன் தராது.
நச்சுத்தன்மை குறைவாக உள்ள பூச்சிக்கொல்லிகளை பூச்சிக்கட்டுப்பாடு ஏற்படும் வகையில் உபயோகிக்க வேண்டும். இவ்வகை பூச்சிக்கொல்லிகள், சுற்றுச்சூழலில் சேரும் நச்சுத் தன்மையின் அளவு குறைகிறது. பூச்சிகளில் எதிர்ப்புத் தன்மை அதிகரிக்காமலிருக்க ஒரே வகுப்பைச் சார்ந்த பூச்சிக்கொல்லியின் உபயோகத்தை தவிர்க்கவேண்டும். ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை ஒரே வகுப்பு அல்லது ஒரே வகை பூச்சிக்கொல்லியை சார்ந்திராது. எதிர் மறையான கால சூழ்நிலைகளில் அதாவது வேகமான காற்று, ஈரப்பதம் அதிகமுள்ள சமயத்தில் பூச்சிக்கொல்லி உபயோகிப்பதைத் தவிர்க்கவேண்டும். எளிதில் ஆவியாகக்கூடிய இரசயானப் பொருட்களான, 2, 4-டி எஸ்டர், மெதைல் பாரத்தியான் ஆகியவற்றை அதிக வெப்பமுள் சமயத்தில் உபயோகிக்கக்கூடாது.

வழிமுறை கொள்கைகள்

  1. தேவையான சமயத்தில் பூச்சிக்கொல்லியினை சரியானப் பகுதிகளில் மட்டும் உபயோகிக்கவேண்டும்.
  2. உபயோகிக்கும் முன்பு நல்ல பயிற்சி பெறவேண்டும்.
  3. இராசயனக் கலவை செய்யும முன்பு பரிந்துரை / விதிமுறைத் தகவல்களை படித்து அறியவேண்டும்.
  4. சரியான பூச்சிக்கொல்லியை பரிந்துரை செய்யப்பட்ட பயிறுக்கு மட்டும் உபயோகிக்கவேண்டும்.
  5. பூச்சிக்கொல்லி உபயோகத்தை பதிவேட்டில் பதிவு செய்யவேண்டும்.
  6. இரசாயன பூச்சிக்கொல்லி உபயோகிப்போர், அதை பயன்படுத்தும் முன், அந்நிலத்தின், பண்புகளை அதாவது மண்ணின் தன்மை, அங்ககப் பொருட்கள், நிலச்சரிவு மற்றும் நிலத்தடி நீர் போன்றவற்றின் தகவல் அறியவேண்டும்.

பூச்சிக்கொல்லி உபயோகத்தில் நன்னெறி மேலாண்மை முறைகள்

  • பூச்சிக்கொல்லி பிரயோகிக்கும் கருவிகளை தயார் நிலையில் வைக்கவேண்டும். பழுதான பாகங்களை அவ்வப்போது பழுது பார்த்து மாற்றவேண்டும்.
  • பூச்சிக்கொல்லி தெளிப்பவர்கள், முன்னரே தெளிக்கப்பட்ட இடங்களை அடையாளமிடவேண்டும்.
  • குறைந்த அளவு இரசாயனத்தைப் பயன்படுத்தி அதிகக் கட்டுப்பாட்டுத் திறனை தரும் முறைகளைக் கையாளவேண்டும்.
  • குறிப்பிட்ட / தேவையான இடத்தில் மட்டும் தெளிப்பதினால் சுற்றுச்சூழல் மாசுப்படுவதைத் தவிர்க்கலாம்.
  • தேவையற்ற நேரங்களில் உபயோகிப்பதை தவிர்க்கவும், மட்டுமல்லாது சரியான அளவை சரியான நேரத்தில், சரியான இடத்தில் தெளிக்கும் போது, மறுபடியும் உபயோகிக்க வேண்டிய அவசியமாகிறது.
  • மேற்பரப்பில் நீர் உள்ள இடங்களில், உபயோகிக்கும் போது, அதிக அளவும் காற்று அடித்துச் செல்லும் வகையிலும் இல்லாமல் கவனமாக உபயோகிக்க வேண்டும்.
  • இரசாயனப் பொருட்கள் உபயோகிக்கும் நேரத்தை சரியாக தெரிவு செய்யவேண்டும். மழைக்காலங்களிலோ, நீர்க்கசிவு ஏற்படும் போதோ, நீர் வழிந்தோடல் சமயத்திலோ தெளித்தல் நிலத்தடி நீரில் / தேவையற்ற பகுதிகளில் நச்சுத் தன்மை கலக்க வாய்ப்பு அதிகமாகும்.
  • பாதுகாப்பு வளையம் கிணறுகள், மேற்பரப்பில் உள்ள நீர் நிலைகளிலிருந்து 50 -100 அடி இடைவெளி விட்டு, இராசயனங்களை உபயோகிக்கவேண்டும்.
  • பாசன வாய்க்கால்களில் பின் நோக்கி பாய்வதைத் தடுக்கும் சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளதா என உறுதி செய்யவேண்டும்.

இரசாயனப் பொருட்களை பாதுகாக்க நன்னெறி வேளாண் முறைகள்

  • இராசயனப் பொருட்களில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை சரியாகப் படித்து அதைக் கடைப்பிடிக்கவேண்டும்.
  • வேலையாட்களின் உடல் பாகத்தில் படாதவாறு பாதுகாப்பு கவசங்கள் அணியவேண்டும்.
  • தற்செயலாக வேலையாட்களில் கைகளிலோ, கண்ணிலோ இரசாயனங்கள் பட்டால் உடனடியாக அதைக் கழுவவும். அவசர சிகிச்சை அளிக்கும் தகவல் மற்றும் பொருட்களை தயார் நிலையில் வைக்கவேண்டும்.
  • எதிர்பாராத விதமாக பூச்சிக்கொல்லி குடித்துவிட்டால், அவசர சிகிச்சை அளிக்க அருகில் உள்ள சிகிச்சை மையங்களில் தகவல்களை அறிதல் அவசியமாகும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2013