அரசு திட்டங்கள் & சேவைகள் :: தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டங்கள் - 2011-12

த.நா.வே.ப செயல்படுத்தப்படும் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டங்கள்

2011-12

 வ.எண் திட்டங்கள் நிதி ஒதுக்கீடு
(ரூ. இலட்சத்தில்)  
1.

தமிழ்நாட்டின் காவிரி டெல்டா பகுதியில் உள்ள களர், உவர் தன்மை பாதிப்பு கொண்ட ஐந்து மாவட்டங்களில் நெல் உற்பத்தியை மேம்படுத்துதல்

40.30
2.

பண்ணைத் தொழில் நுட்பங்களில் “அறிவுசார் மேம்பாடு அடைதல்”

56.25
3.

பருத்தி சார் பயிர் திட்டத்தில் (பருத்தி – உளுந்து- மக்காச்சோளம்), சொட்டுநீர் உரப்பாசனம் செயல்முறை விளக்கப்பயிற்சி

15.00
4.

இராமநாதபுரம் மாவட்டம், கடலோர மணல்சாரி மண் பகுதிகளில், மண் மற்றும் நீர் மேலாண்மை செயல்திட்டங்களை பிரபலப்படுத்துதல்

9.00
5.

தமிழ்நாட்டில் வேளாண் சந்தை தகவல் பரப்பும் திட்ட்த்தினை விரிவுபடுத்துதல்

24.00
6.

நூற்புழு தாக்குதலை கண்டறிதல் மற்றும் கட்டுப்படுத்துவதற்கான பயிற்சிகள், வயல்வெளிப் பள்ளிகளை ஏற்படுத்துதல்

24.00
7.

தமிழ்நாட்டில் தரமான பட்டு உற்பத்தியை மேம்படுத்த, இரட்டை கலப்பின கூடு வகைகளை அறிமுகம் செய்து பிரபலப்படுத்துதல்

30.00
8.

தமிழ்நாட்டின் பல்வேறு வேளாண் மண்டலங்களுக்குரிய நிலத்தை ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டம்

54.21
9.

உழவர்கள் பங்கேற்புத் திட்ட்த்தின் கீழ் வீரிய ஆமணக்கு பயிருடன் வெங்காயம் ஊடுபயிர் சாகுபடியில் சொட்டுநீர் உரப்பாசனம்

8.88
10.

பண்ணை மண் வள சத்துக்கள் இருப்பு மற்றும் பரவல் அடிப்படையில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகம் மூலம் பயிர் உற்பத்தி தடைகளை நீக்குதல்

24.00
11.

த.வே. ப. கழக ‘வேளாண் இணையதளம்’ மூலம் இ- வேளாண் விரிவாக்க சேவைகளை செம்மைபடுத்துதல்

90.00
12.

தமிழ்நாட்டில் முக்கிய பயிர்களை தாக்கும் பப்பாளி மாவுப் பூச்சியை கட்டுப்படுத்த, ஒட்டுண்ணிகளை பெரிய அளவில் உற்பத்தி செய்து பண்ணைகளில் விடுதல்

45.00
13.

மரவள்ளி பயிரில் தேமல் நச்சுயிரி நோய் தாக்காத விதைக்குச்சிகளை உற்பத்தி செய்து விநியோகித்தல்

12.00
14.

தமிழ்நாட்டில் பயறுவகை பயிர்கள் உற்பத்தியை பெருக்க த.வே.ப.கழகம் மூலம் ஆதார விதைகளை உற்பத்தி செய்து விநியோகித்தல்

83.04
15.

தமிழ்நாட்டில் பூச்சிக்கொல்லி எஞ்சிய நஞ்சு கழிவுகளை கட்டுப்படுத்த நச்சுக்கழிவு சோதனை ஆய்வகங்களை நிறுவுதல்

117.00
16.

தமிழ்நாட்டில் 88 வட்டாரங்களில் தானியங்கி வானிலை ஆய்வு மையங்களை விரிவுபடுத்தி ஒருங்கிணைத்தல்

717.60
17.

தீவிர தீவனப்பயிர் சாகுபடித்திட்டம் – உயர் விளைச்சல் தீவனப்பயிர் ரகங்களில் வல்லுநர் மற்றும் ஆதார விதைகள், நடவு பொருட்களை உற்பத்தி செய்தல் மற்றும் தீவனப்பயிர் உற்பத்தி நுட்பங்களில் செயல்விளக்கப் பயிற்சிகளை நடத்துதல்

50.00
18.

தீவிர தானிய உற்பத்தி பெருக்கம் மூலம் ஊட்டச்சத்தில் தன்னிறைவு அடைவதற்கான முனைப்பு (INSIMAP)

168.50

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2013