எலிக்கட்டுப்பாடு 
                  
                    
                      - எங்கெல்லாம்       ஆட்டுக்கிடை அமர்த்துகிறோமோ, அந்த வயலில் எலி வாழாது.
 
                     
                    
                      - நொச்சி       மற்றும் எருக்கலை செடியை வயல் சுற்றி வேலிப்பயிராக நட்டால், எலித் தொல்லை வராது.
 
                     
                    
                      - தங்கரளி       கிளைகளை வயல்சுற்றி போட்டால் எலி வராது.
 
                     
                    
                      - நெல் வயலில்       எலியைக் கட்டுப்படுத்த ‘சணப்பு’ பூவை சிறிய துண்டுகளாக்கி, அதைப் பரவலாக அங்கு       அங்கே வயலில் இட்டால், அதிலிருந்து கிளம்பு வாடையினால் எலிகள் ஓடி விடும்.
 
                     
                    
                      - பனை ஓலைகளை       அருகில் ஆந்தை உட்கார குச்சியில் கட்டி வைத்தால் அதிலிருந்து கிளம்பும் ஓசையினால்       ‘எலிகள்’ ஓடிவிடும்.
 
                     
                    
                      - எலி வலைக்கு       அருகில் ஆந்தை உட்கார குச்சி வைத்தால் அது எலித் தொல்லையை குறைக்க உதவும்.
 
                     
                    
                      - எலி எண்ணிக்கையை       குறைக்க ஒவ்வொரு பயிர் அறுவடைக்குப்பின்பு, எலி வலைத்தோண்டி எலிகளை அழிக்கவேண்டும்.
 
                     
                    
                      - எலிகளைக்       கட்டுப்படுத்த, மூங்கில் கழிகளின் மீது வயர் சுற்றி பிடிக்க ஒரு பொறி செய்து       பயன்படுத்தலாம்.
 
                     
                    
                      - எலியை       அழிக்க, ஒரு பெரிய வட்ட வடிவமான மண் பானையை வயலில் தரைமட்டத்திற்கு புதைக்கவேண்டும்.       அதில் பாதியளவு களிமண் சாந்தை நிரப்பிவிடவேண்டும். ஒரு தேங்காய் தொட்டியில் எலி       உணவு வைத்து அதைப் பானையின் உள்ளே வைத்தால், எலியை கவரும், கவரப்பட்ட எலியானது       மண் சாந்தில் விழுந்து மேல் எழ முடியாமல் இறந்துவிடும்.
 
                     
                    
                      - ஊறவைத்த       அரிசியை எலி கவரும் பொறியாக வைத்தால், நிறைய எலிகளைக் கவரும்.
 
                     
                    
                      - பசும்       சாணத்தை வயலிலும், வரப்பிலும் வைத்தால், எலித்தொல்லைக் குறையும்.
 
                     
                   
                  பறவை  விரட்டுதல் 
                  
                    
                      - கவன் கல்       எறிந்து பறவையை விரட்டலாம்.
 
                      - கவட்டை       வைத்து கல் எறிந்து பறவையை விரட்டலாம்.
 
                      - வயலின்       நடுவில் இறந்த காக்கையின் உடலை நீண்ட குச்சியில் கட்டி வைத்தல்.
 
                      - கறுப்புத்துணியை       நீண்ட குச்சியில் இட்டு, வயலின் நடுவே வைத்தால் காக்கையை விரட்டும்.
 
                      - தேவைப்படாத       கேசட்லிருந்து, ‘டேப்’ சுருளை எடுத்து, வயலில் குறுக்கும் நெடுக்குமாக கட்டினால்,       பறவைகள் ஏதோ ஒரு வலை என்று நினைத்து ஓடிவிடும்.
 
                     
                   
                  தண்ணீர்  இருப்பை அறிதல் 
                  
                    
                      - ஆலமரம்  இருந்தால், நிலத்தடி நீர் அதிகமாக இருக்கும்.
 
                     
                    
                      - வேப்பமரத்தில்  முடிச்சுகள் அதிகமாக காணப்பட்டால் அங்கு நிலத்தடி நீர் அதிகமாக இருக்கும்.
 
                     
                    
                      - எங்கு  கரையான் புற்று உள்ளதோ, அந்த இடத்தில் நிலத்தடி நீர் அதிகமாக இருக்கும்.
 
                     
                    
                      - விவசாயிகள்,  வேப்பக்குச்சி, உலோகம் போன்றவற்றை வைத்து பழைய முறைப்படி நீர் உள்ளதை அறிந்து, அங்கு  கிணறு தோண்டுவார்கள். அத்தகைய குச்சியை கையில் வைத்து நடக்கும்போது, குச்சியானது  தானாக சுழல ஆரம்பிக்கும் அதை வைத்து அந்தக் குறிப்பிட்ட இடத்தில் அதிகமான அளவு நிலத்தடி  நீர் உள்ளதை அறியலாம்.
 
                     
                    
                      - சில  விவசாயிகள் காந்தக்கல்லை வைத்து நீர் உள்ளதை அறிய பயன்படுத்துவார்கள். காந்த துண்டை  ஒரு நூலில் வைத்து கட்டிக் (அதை பெண்டுலம் போல்) கொண்டு, வயலில் நடந்தால் அந்தக்  காந்தமானது தானாகவே அந்த இடத்தில் சுற்ற ஆரம்பிக்குதோ, அந்த இடத்தில் நிலத்தடி நீர்  அதிகமாக உள்ளது என அறிந்து அவ்விடத்தில் கிணறு தோண்டுவார்கள்.
 
                     
                   
                  மழை  வருவதை அறிதல் 
                  
                    
                      - மழைப்  பறவையானது தரைமட்டத்தில் முட்டையிட்டால் குறைந்த மழை வரும். அதுவே மிகுந்த உயரத்தில்  எனில் அதிக மழை வரும். முட்டையின் கூர்முனை நிலத்தை நோக்கி இருந்தால் அது பருவம் முழுவதும்  மழை வருவதற்கான அறிகுறி.
 
                     
                    
                      - ஆலமரத்தின்  விழுதுகள் முளைக்க ஆரம்பித்தால், 2-4 நாட்களில் மழை வரும் என்று உள்ளூர் மக்கள் சொல்வார்கள்.
 
                     
                    
                      - ஆமணக்கு  மற்றும் இலந்தை பழம் மரத்தில் மொட்டுகள் முளைக்க ஆரம்பித்தால் 10-15 நாட்களுக்குள்  மழை வரும்.
 
                     
                    
                      - கருவேல  மரம் பூக்க ஆரம்பித்தால் 10-15 நாட்கள் கழித்து மழை வரும்.
 
                     
                    
                      - வேப்பம்பழம்  பழுத்து கீழே விழ தொடங்கினால் 10-15 நாட்கள் கழித்து மழை வருவதை எதிர்பார்க்கலாம்.
 
                     
                    
                      - ஊசி  தட்டான் தரைத்தளத்தில் பறந்தாலும், தவளை சத்தத்தினாலும் எறும்பு வரிசையாக ஊர்ந்து போனாலும்  மழை வரும்.
 
                     
                    
                      - காற்று  வரும் திசை / மேக மூட்டத்தின் திசை வைத்து விவசாயிகள் மழை வருவதே முன்னரே அறிவார்கள்.  மேற்கு காற்று / மேகமூட்டம் இருந்தால் நல்ல மழையும், வடமேற்கு மூலையில் மேகமூட்டம்  இருப்பின் அது புயல் காற்றை கொடுக்கும் என்பார்கள்.
 
                     
                   
                  கால்நடை  மேலாண்மை 
                  
                    
                      - மூச்சு       தொந்தரவு கால்நடைகளுக்கு இருந்தால், நன்கு காய்ச்சிய இரும்பு கம்பியைக் கொண்டு       கழுத்துப் பகுதியில் சூடுப்போடவேண்டும்.
 
                     
                    
                      - கால்நடைகளில்       ஆண்மை நீக்கம், ஆண் உறுப்பை கல் வைத்து, சுத்தியில் வைத்து சேதப்படுத்தி, அதன்       மூலம்  சாணி / கரன்ஞ்சி எண்ணெய்யை கிருமிநாசினியாக       தடவி செய்யலாம்.
 
                     
                    
                      - மடி வீக்கம்       (Bloat) நோய்க்கு, கீழ்க்கண்ட ஏதாவதொரு கலவையில் மடிகாம்புகளை முக்கி எடுக்கவேண்டும்.
 
                     
                    
                      
                        - 500 மிலி        மோர் + 100 கிராம் கடுகு எண்ணெய் +100 கிராம் தூளாக்கிய பேய் எள்.
 
                        - †ரு        (Heru) மரப்பட்டையை தூளாக்கி நீரில் ஊறவைத்திருத்தல்.
 
                        - 200 கிராம்        தூளாக்கிய பழம் மரத்தின் வேர், கலந்த நீர்
 
                        - 5-10,        சீத்தாப்பழம் இலை (அரைத்தது), 50 கிராம் கருஞ்சீரகம் இவற்றை மோரில் கலந்த கரைசல்.
 
                        - 25 கிராம்        பேய் எள் (தூளாக்கியது) + 1 சின்ன வெங்காயம் + 50 கிராம் கடுகு எண்ணெய் + 25        கிராம் சாதாரண உப்பு + மிளகு.
 
                       
                     
                    
                      - கோமாரி       நோய்க்கு, சிறிய மீனை ரொட்டித்துண்டுக்குள் வைத்து தின்ன வைக்கவேண்டும். அப்படியே       கால்நடைக்கு சரியாகும் வரை செய்யலாம்.
 
                     
                    
                    
                      - 25 கிராம்       காப்பர் சல்பேட்டை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து கொடுக்கவேண்டும்.
 
                     
                    
                      - எள் இலையை       நசுக்கி, தண்ணீரில் கலந்து, அந்த நீரை கால்நடைக்கு கொடுக்கவேண்டும்.
 
                     
                    
                      -  கால்நடையின் மீது படியும் ஒட்டுண்ணிகள், மண்ணெண்ணெயை       பருத்தி துணியின் நனைத்து உடலின் மேல் தடவவேண்டும்.
 
                     
                    
                      - கன்றுப்       போடுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே, எருமை மாடுகளுக்கு நசுக்கிய கோதுமை கலந்த       நீருடன் சர்க்கரை, நெய் எண்ணெயை கொடுத்தல், சுகப்பிரசவம் நடக்கும்.
 
                     
                    
                      - நிமோனியா       தாக்கப்பட்ட கால்நடைகளை, கேக்டஸ் எனப்படும் கள்ளிச் செடியை எரித்து, அந்தச் சாம்பலை       கலந்த தண்ணீரில் 2 முறை மூழ்கி எடுக்கவேண்டும்.
 
                     
                    
                      - எருமை       மாடுகளுக்கு ஏற்படும் அனேஸ்ட்ரஸ் (Anestrous) நோய்க்கு, கீழ்க்கண்ட முறையைப்       பயன்படுத்தி சரி செய்யலாம்.
 
                     
                    
                      - தீக்குச்சியை  ரொட்டித் துண்டில் வைத்து கொடுத்தல்.
 
                      - ஊமத்தை விதையைக்  கொடுத்தல்.
 
                      - 250 கிராம்  காய்ந்த மருகுவாப்பூவை / லிட்டர் தண்ணீரில் கலந்து 5 நாட்கள் கொடுத்தல்.
 
                      - 2-3 நாட்களுக்கு  2 கிலோ சோளத்தை இடித்து தண்ணீரில் கலந்து கொடுத்தல்.
 
                      - கோழி எருவை  ரொட்டியில் கலந்து கொடுத்தல்.
 
                     
                    
                      - எலும்பு       முறிவுக்கு ‘காக்ரா’ இலையை பாதிக்கப்பட்ட இடத்தில் வைத்து அதன் மீது மூங்கில்       குச்சி / தப்பை வைத்து கட்டுதல், நாட்டுக்கோழி முட்டையை கொடுத்தல்.
 
                     
                    
                      - கோமாரி       நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளில், வாய்களில் அதிகமாக நீர் வடிந்தால், ‘சூரன்’       கிழங்கை இடித்து, அதைத்தண்ணீரில் கலந்து கொடுக்கவேண்டும்.
 
                     
                    
                      - பால்       உற்பத்தியைப் பெருக்க.
 
                     
                    
                      - ஒரு மாதத்திற்கு  பசுவிற்கு அரை கிலோவும் எருமைக்கு 1 கிலோ வேகவைத்த நசுக்கிய / இடித்த மக்காச்சோளத்தை  கொடுத்தல்.
 
                     
                    
                      - மொச்சை இலை  மற்றும் சின்ன இலந்தை இலையைக் கொடுத்தல்.
 
                     
                    
                      - கன்று போட்ட  15-20 நாட்களுக்கு, கன்று குட்டி பால் குடித்தபின், மீதமுள்ள பாலைப் பசு / எருமைக்கு  கொடுத்தல்.
 
                     
                   
                  கால்நடைகள் சீதபேதிக்கு 
                  
                    
                      - 100-150       கிராம் நன்னாரி இலைகளை இடித்து, சாறு எடுத்து தேனோடு கலந்து கொடுத்தல்.
 
                     
                    
                      - மிளகு,       திப்பிலி, சுக்கில் மூன்று துண்டுகள் எடுத்து 2 தேக்கரண்டி  நெய்யுடனும் 50 கிராம் ‘ஜஸ்டிமது’ கலந்து       250 மிலி குளிர்ந்த நீரில் கரைத்து கொடுத்தல்.
 
                     
                    
                      - வல்லாரை,       பதர்குச்சி (கோலியஸ்), அருகம்புல் இவற்றை இடித்து 100 மிலி எடுத்து 2-3 நாட்களுக்கு       கொடுத்தல்.
 
                     
                    
                      - மிளகு,       திப்பிலி, சுக்கு இவற்றில் 3 துண்டுகள் எடுத்து, 5 கிராம் ஓமம், 5 கிராம் சித்தரத்தைக்       கலந்து தூளாக்கி 3-4 நாட்களுக்கு கொடுத்தல்.
 
                     
                    
                      - இலவம்       பஞ்சு மரத்தின் பட்டையை 100 கிராம் எடுத்து 500 மிலி தண்ணீரால் கலந்து கொதிக்க       வைத்து பின் கொடுத்தல்.
 
                     
                    
                      - ‘பால’       மரத்தின் பால் எடுத்து மிளகுடன் 3:2 என்ற விகிதத்தில் கலந்து கொடுத்தல்.
 
                     
                    
                      - பூவரசமரத்தின்       பட்டையை 250 மிலி தண்ணீரில் இட்டு கொதிக்க வைத்து 3-4 நாட்களுக்கு கொடுத்தல்.
 
                     
                    
                      - 200       கிராம் சிறுநங்கை இலை 100 கிராம் வல்லாரை இலை இவைகளை அரைத்து மாவு போல் கொடுத்தல்.
 
                     
                    
                      - 2-3       நாட்களுக்கு 100 மிலி வேப்பிலை இலைச்சாற்றை கொடுத்தல்.
 
                     
                    
                      - கருவேல்       மரத்தின் வேரிலிருந்து வடிநீர் எடுத்து அத்துடன் கடுகு எண்ணெய்யை 1:3 விகிதத்தில்       கலந்து கொடுத்தல்.
 
                     
                   
                  கால்நடை ஆர்த்ரிடிஸ்க்கு 
                  
                    
                      - கருவேல       மரத்தின் வேரை இடித்து சாறு எடுத்து கடுகு எண்ணெயுடன் 1:3 விகிதத்தில் கலந்து       கொடுத்தல்.
 
                     
                    
                      - ஊமத்தை,       மகிழம் வேர்களை பூண்டுடன் சேர்த்து மாவு பதமாக்கி, பாதிக்கப்பட்ட பகுதியில் தடவுதல்.
 
                     
                    
                      - எருக்கலை       இலையை நெய்யில் முக்கி, சூடுப்படுத்தி பாதிக்கப்பட்ட பகுதியில் வைத்தல்.
 
                     
                    
                      - பூண்டு,       நெய் இவற்றை கைத் தாங்கும் சூட்டிற்குள் சூடுபடுத்தி தடவுதல். 
 
                     
                    
                      - சிலர்,       காய்ச்சிய கம்பியை அந்த இடத்தில் வைப்பார்கள். 
 
                     
                   
                  கால்நடையை நாய்க்கடித்தல் 
                  
                    
                      - ‘போன்சன்’       மரத்தின் வேரை 21 மிளகுடன் கலந்து, அரைத்து, கெட்டியாக கொடுத்தல்.
 
                     
                   
                  கால்நடை - இருமல் சளிக்கு 
                  
                    
                      - 100       கிராம் துளசி இலை, 100 கிராம் ஆடாதொடா இலைகளைத் தண்ணீரில் இட்டு கொதிக்க வைத்து,       சாறு எடுத்து, தேக்கரண்டி தேன் கலந்து கொடுத்தல்.
 
                     
                    
                      - 3-4       துண்டு பட்டை 50 கிராம் இஞ்சி, அரசமரம் இலை - இவற்றிலிருந்து சாறு எடுத்து கொடுத்தல்.
 
                     
                    
                      - துளசி,       ஆடாதொடா இலையிலிருந்து சாறு எடுத்து, நெய், இஞ்சி சாறு, கரும்பு ஆலைப் பாகு கழிவு       கலந்து கொடுத்தல்.
 
                     
                    
                      - 50       மிலி புளியந்தழைச்சாறு, 50 மிலி இஞ்சிச்சாறு, 3 மிளகுத் தூள் கலந்து கொடுத்தல்.
 
                     
                    
                      - நெய்,       மிளகு, இஞ்சி, பூண்டு இவற்றை அரைத்து, கெட்டியாக ஒரு பங்கு வாயில் கொடுக்கவும்,       ஒரு பங்கை கழுத்து, தலைப் பகுதியில் தடவவும் செய்யலாம்.
 
                     
                   
                  கால்நடை ‘அனோஸ்ட்ரஸ்’  (Anoesrous) நோய்க்கு 
                  
                    
                      - ஒரு       நாளுக்கு 7 கோழி முட்டை வீதம் 7 நாட்களுக்கு கொடுத்தல்.
 
                     
                    
                      - 12       வாழைப்பழத்தை 400 கிராம் சர்க்கரையுடன் கலந்து 2 நாட்களுக்கு கொடுத்தல்.
 
                     
                    
                      - செம்பருத்தி       பூ மொட்டுகள் பழைய சர்க்கரை கட்டி அரைத்து விழுதாக்கி 100 கிராம் 15 நாட்களுக்கு       கொடுத்தல்.
 
                     
                    
                      - அசோக       மரத்தின் பட்டை 100 கிராம் என்ற அளவில் எடுத்து அரைத்துக் கொடுத்தல்.
 
                     
                    
                      - 200       கிராம் அசோகா மரத்தின் பட்டையை எடுத்து / லிட்டர் பாலில் கொதிக்க வைத்து தொடர்ந்து       15-20 நாட்களுக்கு கொடுத்தல்.
 
                     
                    
                      - அரசமர       பட்டைச்சாற்றில், கஞ்சியில் கலந்து 10-15 நாட்களுக்கு கொடுத்தல். 
 
                     
                   
                  கால்நடை காயங்களுக்கு 
                  
                    
                      - ‘கேசுர்டா’       வின் இலை, தண்டிலிருந்து சாறு எடுத்து பூண்டுடன் கலந்து காயத்தின் மீது தடவுதல்.
 
                     
                    
                      - மஞ்சளைத்       தூளாக்கி காயத்தில் பூசுதல்.
 
                     
                    
                      - செண்டுமல்லி       இலைச்சாற்றை மேல் பூசுதல்.
 
                     
                    
                      - சித்தாப்பழக்       கொட்டையை அரைத்து, புழு கடித்த பகுதியில் பூசுதல்.
 
                     
                    
                      - நாவல்       மரத்தின் வேர், பட்டையை அரைத்து களிம்புபோல் புண் மேல் பூசவேண்டும்.
 
                     
                    
                      - ‘விசால்யகரனி’       (visalyakarani) இலைச்சாற்றை பூசுதல்.
 
                     
                    
                      - ‘ஜிஜேடி’       செடியை எரித்து அதன் சாம்பலை தேங்காய் எண்ணெய் உடன் கலந்து பூசுதல்.
 
                     
                    
                      - எருக்கலை       பாலை புண் மீது பூசுதல்.
 
                     
                    
                      - எட்டி       மர வேர், சூரியகாந்தி வேர், பூவரச மர பூ, கடுகு எண்ணெய் கலந்து புண் மேல் பூசுதல்.
 
                     
                   
                  கால்நடைக்கு ஏற்படும் மடிவீக்க  நோய்க்கு 
                  
                    
                      - 50       கிராம் வீதம் நெல்லிக்காய், கடுக்காய், தாண்ரிக்காய் எடுத்து கலந்து 7 நாட்களுக்கு       கொடுத்தல்.
 
                     
                    
                      - 10       கிராம் ஆலமரப்பட்டை, 10 கிராம், இஞ்சி, 10 கிராம் உப்பு கலந்து ஒரு தடவை வீதம்       7 நாட்களுக்கு கொடுத்தல்.
 
                     
                    
                      - பனை       பூ, புளியம்பூ, ‘லாடா’ பழம், ‘சோனாரி’ மரப்பட்டை ‘பனகடா’ மரப்பட்டை இவற்றை கால்நடைக்கு       கொடுத்தல்.
 
                     
                    
                      - கடம்ப       மர இலைச்சாறு, 100 மிலி எடுத்து 2-3 நாட்களுக்கு கொடுத்தல்.
 
                     
                    
                      - புகையிலை,       மக்காச்சோளம், கரப்பான்பூச்சி கழிவு கலந்து மடிப்பகுதியில் தடவுதல்.
 
                     
                    
                      - 250       கிராம் பாக்கு (சோம்ராஜ்), 250 கிராம் வெற்றிலை தின்னக் கொடுத்தல்.
 
                     
                    
                      - பிட்லாபன்,       சல்பர், சர்க்கரை ஆலைக்கழிவு, மிளகு இவற்றை பசைப் போல் கலந்து 250 கிராம் கொடுத்தல்.
 
                     
                   
                  கால்நடை கழிச்சலுக்கு 
                  
                    
                      - 100       கிராம் பழைய புளியை 2-3 நாட்களுக்கு உண்ண கொடுத்தல்.
 
                     
                    
                      - 50       மிலி கொய்யா இலைச்சாற்றை (குறிப்பாக வெள்ளாட்டுக்கு) கொடுத்தல்.
 
                     
                    
                      - ‘வாலுக்சாய்ரி’       (valukchairi) மரப்பட்டை, தொட்டால் சுருங்கி வேர், நாயுருவி பூ, ‘சகுன்டா’       (chakunda), எல்லாம் கலந்து அரைத்து அத்துடன் 100 மிளகு (40 மிளகு கன்றுக்குட்டி       எனில்) 2 தேக்கரண்டி நெய்விட்டு கலந்து 100 கிராம் வீதம் கொடுத்தல்.
 
                     
                    
                      - 50       மிலி ‘சால்’ மரப்பட்டைச் சாற்றை கொடுத்தல்.
 
                     
                    
                      - 100       மிலி வேப்பிலை இலைச்சாற்றை 2-3 நாட்களுக்கு கொடுத்தல்.
 
                     
                    
                      - 50       மிலி புளியந்தழை சோனல் இலை சேர்ந்த சாறுடன் மிளகு சேர்த்து 3-4 நாட்களுக்கு கொடுத்தல்.
 
                     
                    
                      - தாணி       மரப்பட்டை, பழத்தை அரைத்து, நீரில் இட்டு கொதிக்க வைத்து 50 மிலி வீதம் 4-5 நாட்களுக்கு       கொடுத்தல்.
 
                     
                    
                      - 250       மிலி வாழை இலைச்சாறு 100 மிலி மூங்கில் இலைச்சாறு இவற்றை 250 கிராம் சர்க்கரையுடன்       கலந்து 2-3 நாட்களுக்கு கொடுத்தல்.
 
                     
                    
                      - சிவப்பு       அல்லித்தாமரை இலையை சோடாவில் கலந்து 2-3 நாட்களுக்கு 50 மிலி வீதம் இரத்தத்தோடு       கழிச்சல் ஏற்படும் கால்நடைக்கு கொடுக்கவேண்டும்.
 
                     
                    
                      - 6       இலவம்பஞ்சு காய் விதையை எடுத்து அரைத்து 250 மிலி மோரில் கலந்து வடிகட்டி, வெள்ளாடு       புழுக்கையோடு கலந்து 3-4 தடவை கொடுக்கவேண்டும்.
 
                     
                    
                      - வேப்பிலை,       ‘டாகா’ மரப்பட்டை, ‘டானியா’ மரப்பட்டை கலந்து, சாறு எடுத்து, 100 மிலி வீதம்       3-4 நாட்களுக்கு கொடுத்தல்.
 
                     
                    
                      - அன்னாசிப்       பழச்செடி இலைச்சாற்றை தண்ணீரில் கலந்து 100 மிலி வீதம் 2-3 நாட்களுக்கு கொடுக்கவேண்டும்.
 
                     
                    
                      - பென்குட்டி       இலை (Bonkutti), கிர்கிச்சி (kirkichi) மரவேர் எடுத்து மண்பானையில் இட்டு 2 லிட்டர்       தண்ணீர் விட்டு, கொதிக்க வைத்து அது 200 மிலி பின் வற்ற வைத்து அதில் 125 மிலி       கொடுத்தல்.
 
                     
                    
                      - கருங்காலி       மரத் தண்டுப்பட்டை சாறு 50-60 மிலி நாள் ஒன்றிற்கு 2 முறை 2-3 நாட்களுக்கு கொடுத்தல்.
 
                     
                   
                    
                 |