பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு
அறிவியல் மற்றும் பழங்காலத்திலிருந்து பின்பற்றப்படும் செயல்களை ஒருங்கிணைத்து அதை தொழில்நுட்பங்களாக உருவாக்கி, கிராமப்புற பெருகுடிமக்களின் அடிப்படைத்தேவை, கஷ்டங்களை நன்கு களைய அங்கு கிடைக்கும் பொருள்களை வைத்தே, ஏற்றுக்கொள்ள கூடிய பணம் அதிகம் செலவில்லாத, பயனளிக்கக்கூடியதாக வழங்குதல்.
பழங்கால செயல் வகைகள்
செய்தி
- மரங்கள் மற்றும் செடிகள் ஒன்றாக நன்கு வளரக்கூடியது.
- அறிகுறிகளைக் காண்பிக்கும் செடிகள் (மண் உப்புத்தன்மை அல்லது மழை வருவதை பூத்தல் காட்டும் செடிகள்)
செயல்கள் மற்றும் தொழில்நுட்பங்கள்
- விதை நேர்த்தி மற்றும் சேமிப்பு முறைகள்
- விதை - விதைப்பு முறைகள்
- நோய் நிவர்த்தி முறைகள்
நம்பிக்கைகள்
- நம்பிக்கைகள், மனித உயிர் உள்ளவர்களாக நடமாட அடிப்படைப் பங்காகவும், அவர்கள் நோயில்லாமலும், சுற்றுப்புறத்தை நன்கு வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.
- வனங்கள் சில மத காரணங்களுக்காகப் பாதுகாக்கப்படுவதால், அவைகள் பெரிய நீர் வளங்களை வழங்க முடிகிறது.
- மத விழாக்களே குறைவாக உணவு உண்ணும் நல்ல உணவுக்குக் காரணமாகிறது.
சிறிய கருவிகள்
- நடவுக்கும் அறுவடைக்கு பயன்படுத்தும் கருவிகள்
- உணவு சமைக்கும் பாண்டங்கள் மற்றும் சாதனங்கள்
பொருள்கள்
- வீடு கட்டப் பயன்படும் பொருள்கள்
- கூடைகள் மற்றும் இதர கைவினைப் பொருட்கள் தயாரிக்க உதவும் பொருட்கள்
உயிர் மூலங்கள்
கால்நடை
- அருகில் கிடைக்கும் தாவரங்கள் மற்றும் மரவகைகள்
மனித மூலங்கள்
- வைத்தியர்கள் மற்றும் பொற்கொல்லர்கள்
- கிராமப்புற மக்கள் குழுக்கள் - முதியவர்கள் குழு, இளைஞர் குழு - தொழிலாளர்களை தங்களுக்குள் பகிர்ந்தும் கருத்து பரிமாறிக் கொள்ளும் குழு.
கல்வி
- பழங்கால கல்வி முறைகள்
- வேலைக்கு முன் வழங்கப்படும் பயிற்சிகள்
- கவனிப்பதால்
பயிர்ப்பாதுகாப்பு
- மக்காச்சோளத்தை 10-12 மணி நேரம், விதைப்பிற்கு முன்பு கோமியத்தில் ஊற வைத்து பின் விதைத்தால், பூச்சிகளுக்கு எதிராக எதிர்ப்பு கிடைக்கும்.
- நெல்லில் 4 லிட்டர் கோமியம், 10 கிராம் பெருங்காயம் இவற்றை 10 லிட்டர் தண்ணீர் கலந்து தெளித்தால், சாறு உறிஞ்சும் பூச்சிகளை விரட்டும்.
- மா மரத்தில் தண்டு துளைப்பான் மற்றும் மரப்பட்டை உண்ணும் பூச்சிகளை துளை உண்டாக்கி இருந்தால், அந்த துளையில் சிறிது வெல்லம் வைத்தால் பூச்சி உண்ணும் பூச்சிகளை கவர்ந்து, அவைகள் துளையிலுள்ள பூச்சிகளையும் சேர்த்து உண்டுவிடும்.
- கரும்பு கட்டை முளைக்க ஆரம்பிக்கும்போது, வாய்க்காலில் எருக்கலை கிளைகளை போட்டால், அதன் மூலம், கரையான், கூன் வண்டு மற்றும் துளைப்பானை கட்டுப்படுத்தலாம்.
- எருக்கிளைகளை 100-125 கிலோ கரும்புக்குள் ஏதும் வேலை செய்யும் போது போட்டால், கரையான் தொல்லையை இலகுவாக கட்டுப்படுத்தும்.
|