பாரம்பரிய வேளாண்மை :: பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு

 

Operationalwise

மண் மற்றும் நீர் மேலாண்மை

  •  தூத்துக்குடி மாவட்டத்தின் ‘தேரை’ பகுதியில் மண்ணை வளப்படுத்த 200 டன் குளத்து மண்ணை ஒரு ஏக்கருக்கு இடலாம். மேலும் பின் சில வருடங்களுக்கு 50 டன் குளத்து மண்ணை இட்டால்போதும்.
  • ஒரு ஏக்கருக்கு உரமாக தெளிக்க, 10 கிலோ வேப்பம் புண்ணாக்குயை 10 லிட்டர் கோமியத்தில் அரை கிலோ கழிவு பெருங்காயத்தோடு இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் உபயோகிக்கவேண்டும்.
  • புளிப்பொட்டை வயலில் இட்டால் கோரைப்புல் வராது.
  • 1 லிட்டர் வேப்ப எண்ணெயில், 3 கிலோ நுண்மணல் மற்றும் 3 கிலோ சாணியை 3 நாட்கள் ஈரம் காயாமல், ஈர சாக்கு கொண்டு போர்த்தி குவியலாக வைத்து, பின் 4ஆம் நாள் அதை 150 லிட்டர் நீரில் கலந்து தெளித்தால் அனைத்து வித சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.
  • 10 கிலோ காய்ந்த சாணத்தை தூளாக்கி அத்துடன் செங்கல் சூளை சாம்பல்  சேர்த்து, அதிகாலை வேளையில் தூவினால் பூச்சி நோய்களைக் கட்டுப்படுத்த முடியும்.
  • பூண்டானது எல்லாவித செடிகளில் ஏற்படும் பாக்டீரியா, பூஞ்சாணம் மற்றும் நூற்புழுவை எதிர்த்து திறமாக செயல்படக்கூடியது. அதை தனியாகவோ அல்லது வேம்பு பொருட்கள், மிளகாய், பெருங்காயம் மற்றவையோடு கலந்து பயன்படுத்தலாம்.
  • கரையான் தாக்கப்பட்ட பகுதிகளின் எருக்களை இலைச்சாற்றை பயன்படுத்தலாம்.
  • வளமற்ற மண்ணாக இருந்தால் அப்பகுதி நிலங்களை எல்லாம் கூட்டாக செய்தால் நல்ல விளைச்சல் கிடைக்கும்.
  • ஆறுக்கு அருகில் உள்ள நிலப்பகுதியில் குறைந்த மகசூலே கிடைக்கும்.
  • வாய்க்கால் ஓரத்தில் இருக்கும் நன்செய் நிலத்திலும், மலை அடிவாரத்தில் இருக்கும் வறண்ட நிலத்தில் அதிக மகசூல் கிடைக்கும்.
  • சரிவின் குறுக்கே வயல்களில் கல்தூண் அமைத்தால், மண் சரிவையும் ஈரப்பதத்தையும் காக்கலாம்.
  • ‘வெட்டிவேர்’ புல்லை மண் சரிவுக்கு குறுக்காகவோ அல்லது வயலைச்சுற்றி நட்டால் மண் அரிப்பை தடுக்கலாம்.
  • வயல் வரப்புகளில் நிரந்தரமாக ஏதாவது தாவரங்களை வளர்த்து வந்தால் அதிக மண் அரிப்பைக் குறைக்கலாம்.
  • புதிய தோட்டாக்கால்கள் பழைய நிலம் அதிக மகசூல் கிடைக்கும்.
  • தோட்டக்காலப் பயிரைக்காட்டிலும் பயிருக்கு அதிகக் கவனம் தேவை.
  • தண்ணீர் தேங்கக்கூடிய வறண்ட பகுதி சாகுபடிக்கு ஏற்றதல்ல.
  • மண் வகையே, சாகுபடி பயிரை தீர்மானம் செய்யும்.
  • செம்மண் தொடர்ந்து பயிர் செய்ய ஏற்றது.
  • செம்மண்ணை விட கரும்மண் அதிகமாக நீர் பிடித்து வைத்திருக்கும் திறன் உள்ளது.
  • மணல் கலந்து மண் அநேக பயிர்கள் சாகுபடி செய்ய உகந்ததல்ல.
  • அதிகமாக தொழு உரம் இட்டால் மண் நயம் கூடும்.
  • குளத்து மண் இட்டால் மண் நயம் கூடும்.
  • அங்கக உரம், அனங்கக உரம் இடுவது, மண் தன்மையைச் சார்ந்தது.
  • மழை பெய்தவுடன் களை அதிகமாக முளைத்தால், அது நல்ல மண் வளத்தைக் கொண்டு உள்ளதையே காட்டும்.
  • ஆடு தின்னாப்பாலை நிலத்தில் வளர்த்தால், அது குறைந்த மண் வளத்தையே காட்டும்.
  • செம்மண்ணை கரும்மண் நிலத்திலோ இல்லை மாற்றியோ இட்டால் மண் வளம் அதிகரிக்கும்.
  • கோடைக்காலத்தில் ஆடுகிடையோ, மாட்டுக்கிடையோ அமர்த்தினால் மண் வளம் கூடும்.
  • மழையில்லா வறண்ட பகுதிகளின் மண் வளத்தைக் காக்க, பயிறு வகைப் பயிர்களை கலப்பு பயிராகவோ, ஊடுபயிராகவோ பயிரிட வேண்டும்.
  • மண் அரிப்பு தடுக்கவும் மண்வளத்தை மேம்படுத்தவும், மண் சரிவுப் பகுதியில் பழ மரங்களுக்கு இடையே கொழிஞ்சியை பயிரிடவேண்டும்.
  •  ‘நுணா’ மரம் இருந்தால், அதிக ஈரப்பதம் அம்மண்ணில் உள்ளதை அறியலாம்.
  • கோடைக்காலத்தில், ஆழ உழவு செய்தால் மண் ஈரப்பதத்தை காக்கலாம்.
  • மண்ணை நன்கு உழவு செய்து தூள் தூளாக்கினால், அதிக ஈரப்பதத்தை தக்க வைக்கலாம்.
  • செம்மண் நிலத்தில் கரும்மண் குளத்து மண்ணை இட்டால் நீர்ப்பிடிப்பு தன்மையை செம்மண் பகுதியில் அதிகரிக்கலாம்.
  • சணப்பு மற்றும் தக்கைப்பூண்டு செடியைப் பயிரிட்டு, பூப்பதற்கு முன் மடக்கி உழுதால் மண்ணில் நீர் பிடிப்பு தன்மை அதிகரிக்கும்.
  • எந்தவொரு நிலத்திற்கும், நாம் நடந்தால் நம் கால் தடம் பதியாமல் இருந்த அந்த சமயத்தில் நீர்ப்பாசனம் செய்தால் போதும்.
  • கிணற்றுக்கு அருகில் பூவரசு மரத்தை வளர்த்தால், நீரானது ஆவியாக மாறி வீணாவது தடுக்கப்படும்.
  • நன்செய் நிலத்தில், ‘ஆரை’ கீரைக் கிளையும், தோட்டக்கால் நிலத்தில் ‘அருகு’ புல்லும் இருந்தால் நல்ல மகசூல் கொடுக்கும்.
  • செம்மண் நிலத்தில் ‘அருகு’, ‘கரும்மண்’ நிலத்தில் ‘கோரையும்’ இருந்தால் அந்நிலம் நல்ல நிலம்.
  • களர் நிலத்தை சரி செய்ய சணப்புப் பயிரை விதைத்து அதை பூக்கும் பருவத்தில் மடக்கி உழுதால் போதும்.
  • களர் நிலத்தை மேம்படுத்த தக்கைப்பூண்டை பயிரிட்டு, அது பூப்பதற்கு முன் மடக்கி உழவு செய்யவேண்டும்.
  • களர் நிலத்தை சரிசெய்ய பிரண்டையை இடலாம்.
  • களர்நிலத்தில் வேப்பந்தழை இட்டால் சரியாகும்.
  • உப்புநிலத்தை சரிசெய்ய வேப்பங்கொட்டை மேல் தோலை இடலாம்.
  • வேப்பம் புண்ணாக்கு இட்டால் உவர் தன்மை சரியாகும்.
  • பனை மரத்தின் ஓலையை சிறிய துண்டுகளாக நறுக்கி அதை அதிகளவு நிலத்தில் இட்டால் களர் தன்மை சரியாகிவிடும்.
  • புங்கம் இலையையோ, புளியம்பழத்தின் மேற்தோலையோ இட்டால் களர் நிலம் நல்ல நிலமாக மாறும்.
  • மட்கு உரத்துடன் தென்னை நார்க்கழிவை கலந்து இட்டால் களர் தன்மை மாறும்.
  •  கரும்பாலை கழிவு, நாட்டுச் சர்க்கரை தயாரிக்கும் போது கிடைக்கும் கழிவு ஆகியவற்றை நிலத்தில் போட்டால் களர் தன்மை மாறும்.
  • அரை நெல்லிக்காய் கிளைகளை கிணற்றில் இட்டால் உப்புத் தன்மையான நீர் நல்ல நீராக மாறும்.

பருவநிலை

  • விதை நல்ல தரமானதாக இருந்தாலும் அதை சரியான பருவத்தில் விதைக்கவேண்டும்.
  • சரியான பருவத்தில் விதைத்தால் தான் தரம் குறைந்த நிலத்திலும் நல்ல மகசூல் தரும்.
  • ஆடிப்பெருக்கு அன்றோ, ஆடி அமாவாசை அன்றோ பயிர் விதைத்தால் நல்ல மகசூல் கிடைக்கும்.
  • அமாவாசை அன்றோ அல்லது அமாவாசைக்கு 48 மணி நேரத்திற்கு முன்போ விதைப்பதோ, நடுவதோ, மரம் வெட்டுவதோ நல்லது.
  • கீழ் நோக்கு நாளில், நிலத்திற்கு கீழே மகசூல் தரும் செடிகளை விதைப்பதோ, நடுவதோ, அறுவடை செய்வதோ நல்லது. மேலும் மட்கு உரம் தயாரிக்க ஆரம்பிப்பது, மட்கு உரம் நிலத்தில் இடுவது, மரத்தை கவாத்து மற்றும் வெட்டுவது, மரம் நடுவதும், நாற்று நடவு செய்வது நிலத்தை உழவு செய்வதும் போன்ற வேலைகளை கீழ் நோக்கு நாளில் செய்தால் நல்லது.
  • மேல்நோக்கி நாளில், மொட்டு கட்டுதல், பதியம் மற்றும் பூமிக்கு மேலே மகசூல் தரும் செடிகள் விதைப்பு / நடவு / அறுவடை செய்வது நல்லது.
  • பெளர்ணமிக்கு 48 மணி நேரம் முன்பாக விதைக்கும் விதைகள் விரைவாக முளைப்பதோடு வேகமாக வளரும்.
  • செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் விதைப்பு செய்யலாம்.
  • பெளர்ணமி அன்று விதைக்கும் பயிர்கள் பூச்சி மற்றும் நோய் தாக்குதலிலிருந்து தப்பும்.
  • பெளர்ணமிக்கு, அமாவாசைக்கு பின் வரும் அஸ்தமி (8 ஆம் நாள்) மற்றும் நவமி (9 ஆம் நாள்) விதைப்பு செய்வதைத் தவிர்க்கவேண்டும்.
  • புளி மகசூல் அதிகம் வந்தால் விவசாயத்திற்கு ஏற்ற பருவமும், மா மகசூல் அதிகம் வந்தால் விவசாயத்திற்கு ஏற்றதல்லதாகும்.

பயிர் சாகுபடிக்கு செய்யும் வேலைகள்

  • நிலத்தை நன்கு புழுதிபட உழவு செய்வது, உரம் இடுவதைவிட நல்லது.
  • அகல உழுவதைவிட ஆழ உழுதால் நல்ல பயிர் வளர்ச்சி கிடைக்கும்.
  • மேலோட்டமாக உழுவதைவிட ஆழ உழவு செய்தால் பயிர் நன்கு வளரும்.
  • தோட்டாக்கால் நிலத்தை 4 முறையும், மற்ற நிலத்தை 7 முறையும் உழவு செய்யவேண்டும்.
  • கோடை உழவு செய்தால் பின்பு நல்ல பயிர் கிடைக்கும்.
  • அகல பாத்தி மற்றும் குழி அமைக்கும்போது, நாட்டு கலப்பையில் வைக்கோலைச் சுற்றினால் அகலமான வாய்க்கால் கிடைக்கும்.
  • தோட்டக்கலை ஆழமாக உழவு செய்தால், நிறைய ஈரப்பதத்தை காக்கலாம்.

விதை மற்றும் விதைப்பு

  • விளைச்சலானது விதையின் தரத்தைப் பொறுத்தது.
  • நல்ல தரமான விதையாக இருந்தாலும், அதை காயவைத்து பயன்படுத்தவேண்டும். நல்ல காய்ந்த விதை, அதிக வாழ்நாளையும் அதிக தரத்துடன் இருக்கும்.
  • இரண்டு வருடத்திற்கு ஒரு முறையானது விதையை மாற்றவேண்டும்.
  • விதைப்பையோ நடவையோ மாலை வேளைகளில் செய்யவேண்டும்.
  • அதிக மகசூல் பெற விதைப்பை சனி மூலையிலிருந்து (வடகிழக்கு) ஆரம்பிக்கவேண்டும்.
  • புன்செய் நிலத்தில் விதைத்த விதையை மூடுவதற்கு முள் கிளையை அப்படியே நிலத்தில் இழுக்கவேண்டும்.
  • புன்செய் நிலத்தில் விதை விதைக்க வேண்டும் எனில் மணல் கலந்து விதைக்கவேண்டும்.
  • புன்செய் நிலத்தில் மேல் விதைப்பு செய்யவேண்டும்.
  • 6 மாதப் பயிருக்கு 6 வார வயது வரை நாற்றாங்கால் இருந்தால் போதும்.
  • வேம்பு, புங்கம், நொச்சி, துளசி இலைகளோடு விதையை சேமித்து வைக்கவேண்டும்.
  • விதை மூளைத் திறனையும், வெளி சேதாரத்தையும் காக்க விதையின் மேற்புற கூட்டை தனியாக பிரிக்கக்கூடாது.

இயற்கை உரங்கள்

  • அங்கக உரங்கள் இடுவதால் எப்போதும் நல்ல பயிர் வளர்ச்சி கிடைக்கும்.
  • பொதுவாக, பயன்படுத்தும் பசுந்தாள் உர இலைத் தழைகள் கொழுஞ்சி, எருக்களை, நுணா, புங்கம், வேம்பு, பூசரவு மற்றும் ஆடாதொடா ஆகும்.
  • பசுந்தாள் உரச்செடிகளாக சணப்பை, கொழுஞ்சி, தக்கைப்பூண்டு போன்றவற்றை சாகுபடி செய்து அதை அவைகள் பூப்பதற்கு முன் மட்கி மண்ணில் உழுதுவிடவேண்டும்.
  • துவரைப் பயிரை பசுந்தாள் உரமாக உபயோகித்தால், மண்வளம் மேம்படும்.
  • ஆகாய தாமரைச் செடியை அப்படியே மட்கு உரமாகவோ, அதை எரித்து சாம்பலாகவோ நிலத்தில் இட்டால், சாம்பல் சத்து நிலத்திற்கு கொடுக்கும்.
  • செம்மறி ஆட்டுக்கிடை அமர்த்தினால் பயிர் விளைச்சல் அதிகமாகும்.
  • வெள்ளாட்டு புழுக்கையை இட்டால், அந்தப் பருவத்தில் வளரும் பயிருக்கு நன்கு உதவும்.
  • வெள்ளாட்டு எரு அப்பருவத்திற்கும், மாட்டு எரு மற்றும் பசுந்தாள் உரம் அடுத்த பருவத்திற்கும் ஏற்றது.
  • பசுமாட்டு கோமியம், பசுமாட்டு எருவை விட அதிகச் சத்து கொண்டது.
  • கோழி எரு, பயிருக்கு தேவையான சத்துக்களை கொடுக்கக் கூடிய நல்ல எருவாகும்.
  • மண் வளத்தை அதிகப்படுத்த, பசுமாட்டு எரு, ஆட்டு எரு / கழிவுகளை விட பன்றி எரு உபயோகிக்கலாம்.
  • தோட்டக்கால் மற்றும் வறண்ட நிலத்தில் மாட்டு எருவையும், நன்செய் நிலத்தில் பசுந்தாள் உரத்தையும் இடவேண்டும்.
  • கரையான் புற்று நல்ல உரமாக செயல்படும்.
  • குளத்து மண்ணை ஒவ்வொரு வருடமும் வறண்ட நிலத்தில் இட்டால் நல்ல மகசூல் கிடைக்கும்.
  • நீர்ப்பாசன வாய்க்கால் அருகில், ஒரு குழித்தோண்டி, அதில் பசுமாட்டுச்சாணம், எருக்களை தழை, வேப்பம் புண்ணாக்குத்தூள், கோமியத்தைச் ஊற்றி மட்க வைக்கவேண்டும், அதை பாசனத் தண்ணீருடன் கலந்து விட்டால், பயிருக்கு தேவையான சத்துக்களை வழங்கவும், பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்த செய்யும்.
  • எறும்பு புற்று மணலை வயலில் இட்டால் நல்ல மகசூல் கிடைக்கும்.
  • பெளர்ணமி அன்று, உரம் தெளித்தல் நல்ல விளைச்சல் கிடைக்கும்.

களை மேலாண்மை

  • களை எடுக்காவிட்டால் மகசூல் நான்கில் 3 பங்கு குறையும் (களை எடுக்கா பயிர் கால் பயிர்).
  • வறண்ட நிலத்திற்கு களை எடுப்பு தேவையில்லை. களை எடுக்கா நிலத்தில் களைப் பயிர் வளர்ச்சியானது, இயற்கையாகக் குறைந்து, அது மண் ஈரத்தை காக்க உதவும்.
  • அடிக்கடி உழவுச் செய்தால், களை எண்ணிக்கை குறையும்.
  • அருகம்புல் வயலில் இருந்தால் பயிர் மகசூல் குறையும்.
  • கரும்மண் நிலத்தில் அருகம்புல் இருந்தால், அதைக் கட்டுப்படுத்த 3 வருடங்கள் வரை நிலத்தை அப்படியே போட்டுவிடவேண்டும்.
  • பசுந்தாள் உரச்செடிகளான சணப்பு, கொழிஞ்சியும் சாகுபடி செய்து அது பூப்பதற்கு முன்பு மடக்கி உழுதால், களை குறையும்.
  • ஆரை களையை கட்டுப்படுத்த எருக்களை செடியை பசுந்தாள் உரச்செடியாகச் சாகுபடி செய்யவேண்டும்.
  • கோரைப்புல்லை கட்டுப்படுத்த கொள்ளுப்பயிரைச் சாகுபடி செய்யவேண்டும்.
  • கோரையை அழிக்க, அன்னப்பறவையை வயலில் விடலாம்.
  • வேப்பமரத்தினால் செய்யப்பட்ட கலப்பையை அடிக்கடி வயலில் உழவு செய்வதாலும், வேப்பம் புண்ணாக்கை அடிக்கடி வயலில் இட்டாலும் கோரையைக் கட்டுப்படுத்தலாம்.
  • 1 கிலோ உப்புடன் 100 கிராம் சர்வோதய சோப் சேர்த்து, அதை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்தால், கோரையைத் தவிர அனைத்துவிதக் களைகளையும் கட்டுப்படுத்தலாம்.
  • கோரையைக் கட்டுப்படுத்த உழவுச் செய்யும் போதும், விதைப்பு செய்யும் போதும் வயலில் 50 கிலோ வேப்பம்புண்ணாக்கை இடவேண்டும்.
  • பார்த்தீனியம் களையை அழிக்க 200 கிராம் உப்பை தண்ணீருக்கு 1 லிட்டர் என்ற அளவில் கலந்துத் தெளிக்கலாம்.
  • வயலில் தொடர்ந்து நீர் நிற்கும்மாறு நீர்க்கட்டினால், சிலசமயம் பல களைக்களை கட்டுப்படுத்தலாம்.

பூச்சி மற்றும் நோய் மேலாண்மை

  • இடைவிடாது மழை தூறிக்கொண்டே இருந்தால். அதிக எண்ணிக்கையில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் ஏற்படும்.
  • டிசம்பர் மாதத்தின் கடைசியில் காற்று அடித்தால், அதிக பூச்சியைக் கொண்டு வரும்.
  • காரத்தன்மையுள்ள நிலத்தில் சாகுபடி செய்த பயிரில் நோய் தாக்குதல் அதிகமாக இருக்கும்.
  • விவசாயின் வீட்டின் நுழைவு வாயிலின் இருப்புறமும், சிறிய விளக்கை ஏற்றி வைத்தால், அது விளக்கும் பொறியாக செயல்பட்டு, அதிலிருந்து எந்த பூச்சியில் சேதாரம் தோன்றும் என்று அறியலாம்.
  • வயல்களைச் சுற்றி, சோளம் அல்லது கம்பு பயிரை அடர்வாக 4 வரிசை சாகுபடி செய்தால், அது அசுவினி, சிலந்திபேன் பூச்சிகள் வயலின் உள்ளே போகமுடியா வண்ணம் அதன் தாக்குதலைத் தடுக்கலாம்.
  • தங்க அரளி மற்றும் செவ்வரளி செடியை வரப்புப் பயிராகப் பயிரிட்டால் அது கவர் செடியாக செயல்பட்டு அது பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்தும்.
  • திருநீற்றை செடியின் மீது தூவினால், அது பூச்சித் தாக்குதலைக் குறைக்கும்.
  • அடுப்புச் சாம்பலை இட்டால் அசுவினி கட்டுப்படும்.
  • 5 கிலோ புகையிலைத் தூளை 10 லிட்டர் கோமியத்தில் மற்றும் 10 லிட்டர் தண்ணீர் கலந்த கலவையில் 5 நாட்கள் ஊறவைத்து சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.
  • கோமியம், வேப்ப எண்ணெய் மற்றும் புகையிலை வடிநீரையைக் கலந்து,  தெளித்தல் சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.
  • எருக்களை இலை மற்றும் வேப்பம் புண்ணாக்கு இவற்றை மண் கலத்தில் இட்டு, நீர் ஊற்றி வயலில் வைத்தால் அந்துப்பூச்சிகள் அதன் வாடையால் கவரப்பட்டு மண் கலத்தில் விழுந்து இறக்கும்.
  • 10 லிட்டர் கோமியம், 5 லிட்டர் நீர் கலந்து கலவையில் 5 கிலோ எருக்களை இலையை 5 நாட்கள் ஊற வைத்து, பின் வடிகட்டி அத்துடன் 80 லிட்டர் நீர் கலந்து தெளித்தால் பயிரை உண்ணும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.
  • சர்வோதய சோப் கட்டி கரைசலை தெளித்தால், மாசுப்பூச்சி கட்டுப்படும்.
  • நூற்புழுவைக் கட்டுப்படுத்த புங்கம் அல்லது இலுப்பை புண்ணாக்கை இடவேண்டும்.
  • நீர்ப்பாசன வாய்க்கால் அருகில் சாணி, கோமியம், எருக்களை இலை வேப்பம்புண்ணாக்கை குழிகளில் இட்டுபின் அவைகள் மட்கியவடன் தண்ணீருடன் கலந்து விடவேண்டும்.
  • ஊமத்தை காயோடு, எருக்களை இலையை அரைத்து 15 நாட்கள் நீரில் ஊறவைத்துப்பின், வடிகட்டி தெளித்தால் அனைத்துவிதப் பூச்சிகளையும் கட்டுப்படுத்தலாம்.
  • தும்பை, குப்பைமேனி, துளசி, ஊமத்தை, வேம்பு, நொச்சி இலைகளை ஒவ்வொன்றும் இரண்டு கைநிறைய எடுத்து, அதனுடன் 5 ஊமத்தை காய் ஒரு கை நிறைய வேப்பம் புண்ணாக்கு ஒரு கை நிறைய இலுப்பை புண்ணாக்கு  சேர்ந்து இடித்து, அதை மண் கலத்தில் இட்டு, தண்ணீர் சேர்த்து 10 நாள் வைத்திருந்து, வடிகட்டி 100 மில்லி லிட்டருக்கு 1 லிட்டர் தண்ணீர் கலந்து, அதில் 100 மிலி சர்வோதய சோப் கரைசல் 100 மிலி வேப்பஎண்ணெய் சேர்த்து தெளித்தால்  எல்லாவிதப் பூச்சிகளையும் கட்டுப்படுத்தும்.
  • துளசி இலை, செவ்வரளி விதை மற்றும் ஊமத்தைக் காய்களை சம அளவில் எடுத்து அதைத் தூளாக்கி கோமியத்தில் ஊறவைத்து 10 நாட்கள் கழித்து எடுத்து அதை வடிகட்டி, நீர்த்து (100 மிலி / லிட்டர்), 100 மிலி வேப்ப எண்ணெய் சேர்த்து தெளித்தால் எல்லாவிதமான பூச்சிகளும் கட்டுப்படும்.
  • வேப்பஎண்ணெய் மற்றும் வேப்பங்கொட்டை கரைசல் அநேக பூச்சிகளைக் கட்டுப்படுத்த பொதுவாகப் பயன்படுத்தும் அங்கக பூச்சிக்கொல்லி ஆகும்.
  • கார்த்திகை மாதத்தில் பெளர்ணமியன்று, பொதுவான இடத்தில் சொக்கப்பானை கொளுத்தும் விழாவின் போது அந்துப்பூச்சிகளை கவர்ந்து, தீயின் விழுந்து இறக்கும். அந்தச் சாம்பலை வயலில் தூவினால் அது சாறு உறிஞ்சும் பூச்சியைக் கட்டுப்படுத்தும்.
  • பயிர் கழிவுகளையெல்லாம் எரித்து, அந்தச் சாம்பலை தூவினால் நோய் தாக்குதல் கட்டுப்படுத்தும்.
  • வேப்பம் புண்ணாக்கை அடியுரமாக வயலில் இட்டால், நோய் தாக்குதல் ஏற்படாது.
  • மஞ்சள் தேமல் நோயைக் கட்டுப்படுத்த, 1 கிலோ சீமைக்கருவில் இலைகளை இடித்து தண்ணீர் கலந்து தெளிக்க பயன்படுத்தலாம்.
  • அநேக பூச்சிகளைக் கட்டுப்படுத்த கோமியத்தைத் தெளிக்கலாம்.
  • பூண்டு மற்றும் வேப்பம் புண்ணாக்கு கரைசலைத் தெளித்தால் அசுவினி கட்டுப்படும்.
  • பிரண்டையை வயல்சுற்றி நட்டால், கரையான் தொல்லை தடுக்கப்படும்.
  • கரையானைக் கட்டுப்படுத்த, ஆமணக்கு செடியை சாகுபடி செய்யலாம்.
  • நாற்றாங்கால் வேப்பிலையை பரப்பினால், கரையான் தொந்தரவு கட்டுப்படும்.
  • பாசன வாய்க்காலில், வேப்பம் புண்ணாக்கு நிரப்பப்பட்ட சாக்கு மூட்டையை வைத்தால், சிலந்திப்பேன் தொல்லை கட்டுப்படும்.
  • புல் நிலத்தில், நாற்றாங்காலில் கரையான் தாக்குதலினால் நாற்றுக்கள் அழியும். அதற்கு வேப்பிலையை நாற்றக்காலின் மீது பரப்புவதோடு, ஆட்டு முடி, மனித முடியைச் சேர்த்து போட்டால், அதைக் கரையான் தின்றால் சாகும்.
  • ராகி வேர் வடிநீரை வேர்ப்பகுதியில் ஊற்றினால், கரையான் தொல்லை இருக்காது.
  • மரம் நடவு செய்வதற்கு முன்பு, காய்ந்த இலைகள் மற்றும் தழைகளை குழிகளில் போட்டு எரித்தால், நடும் நாற்றில் கரையான் தாக்குதலிலிருந்து காக்கலாம்.
  • மரக் கன்றுகள் நடுவதற்கு முன்பு அந்தக்குழியில் சாம்பலைப் போட்டால் கரையான் தாக்குதலைத் தடுக்கலாம்.
  • 5 சதவீதம் கரைசலை மரத்தின் மீது தெளித்தால், கரையான் தாக்குதல்  குறையும்.
  • புகையிலை அறுவடை செய்தபின்பு, அதன் தண்டு மற்றும் வேர்களை நிலத்திலே மடக்கி உழவு செய்தால் கரையான் தொல்லைக் கட்டுப்படும்.
  • எறும்புப்புற்றின் மீது புகையிலை நீரை ஊற்றினால், எறும்பைக் கட்டுப்படுத்தலாம்.
  • தானியக் கிடங்கில் உள்ள பூச்சிகளைக் கட்டுப்படுத்த காலை வேளைகளில் எந்தவொரு தெளிப்பையும் செய்தல்வேண்டும்.

தானியக் கிடங்கு பூச்சிக் கட்டுப்பாடு

  • சேமிப்பில் பூச்சித் தாக்குதல் வராமல் இருக்க, சேமிக்கும்முன்பு, விதைகளையும் தானியங்களையும் அமாவாசை அன்று காய வைக்கவேண்டும்.
  • விதைகளை மண்கலத்தில் இட்டு, சமையல் அறையிலுள்ள பரண்மீது வைக்கலாம். அடுப்புப்புகை பூச்சிகளுக்கு பிடிக்காது. அதனால் பூச்சியின் தாக்குதல் இராது.
  • தானியங்கள், மரங்கள் ஆகியவற்றை பெளர்ணமி அன்று அறுவடைச் செய்தால், தானியக்கிடங்கு பூச்சி தாக்குதல் ஏற்படும்.
  • சேமிக்கும் போது விதைகளோடு, காய்ந்த வேப்பிலையைக் கலந்து சேமிக்கவேண்டும்.
  • விதை சேமிக்கும் போது, காய்ந்த நொச்சி இலைகளைக் கலந்து சேமித்தல் வேண்டும்.
  • விதைகளை புங்கம் இலைகள் கலந்து பின் சேமிக்கலாம்.
  • 1 கிலோ வசம்புத்தூளை 50 கிலோ தானியத்தோடு கலந்து சேமித்தால் 1 வருடம் வரை கெடாமல் இருக்கும்.
  • உணவுத்தானியங்களின் விதையை சேமிக்கும்போது, சேமிப்பு கலனில் முக்கால் பங்கு உயரத்திற்கு விதையை இட்டுப்பின் அதன் மீது சாதாரண துணியை பரப்பி பின் வேப்பிலை புங்கம் மற்றும் நொச்சி இலைகளின் மீது பங்குக்கு போட்டு, பின் அக்கலனில் வாய் வரை மணல் போடவேண்டும்.
  • 10 சதவீதம் உப்புக்கரைசலை சாக்குப் பையை நனைத்து பின் காயவைத்து அதில் பயறுவகைகள் மற்றும் உணவுத்தானியங்களை சேமித்தால் பூச்சி தாக்கலைக் கட்டுப்படுத்தலாம்.
  • பொதுவாக விதைகளை கொட்டை/தோலோடு சேமித்தால், தானியக் கிடங்கில் தாக்கும் பூச்சிகளிலிருந்து தப்பலாம்.

 

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014