தவேப வேளாண் இணைய தளம் :: பாரம்பரிய வேளாண்மை

கால்நடைகளுக்கு மரபுசார் மூலிகை மருத்துவ முறைகள்
சுழன்றும் ஏர் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை”

என்னும் வள்ளுவன் வாய்மொழிக்கேற்ப உழவையே முதன்மையாகக் கொண்டு இப்பூவுலகம் சுழன்றுவரினும் அதற்கு உறுதுணை கால்நடைச்செல்வங்களே. கால்நடைகளை, பொருளாதாரத்தை அளக்கும் கருவியாகக் கொள்வது இயற்கை சார்ந்த வாழ்விற்கு இன்றியமையாதது.

தொழில் புரட்சிக்கும், பசுமை புரட்சிக்கும், வித்தாகவும் உரமாகவும் அமைந்தது கால்நடைகளே என்றால் மிகையாகாது. மனித குலம் முதலில் மேற்கொண்ட தொழில் கால்நடை வளர்ப்பே ஆகும். கால்நடைகளுக்கான வளமான மேய்ச்சல் தரையைத் தேடுதலின் விளைவே வேளாண்மை. வேளாண்மையின் தேடுதலே தொழில் வளர்ச்சி எனும் தொழில் புரட்சி. எனவே கால்நடைகள் மனித குல வளர்ச்சியில்  பின்னிக் கிடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

மனித குலம் தமக்கு மருத்துவம் கண்ட போது தங்களின் கால்நடைச் செல்வங்களுக்கும் மருத்துவம் கண்டது இயல்பே. மரபு சார்ந்த மருத்துவ முறைகளை நாம் மேற்கொள்வது எளிது. பாதுகாப்பான சிறந்த முதலுதவி மருந்தாக விளங்குகிறது. அவற்றின் சிறப்பு கருதி சில முறைகள் இக்கையேட்டில் தொகுக்கப் பெற்றுள்ளது. நமது வீட்டிலும், வீட்டுத் தோட்டத்திலும் கிடைக்கும் பொருட்களை வைத்து மருத்துவ முறைகளும் அவற்றின் மருத்துவ குணங்களும் சொல்லப் பெற்றுள்ளது.

Updated on Dec, 2014

 

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014