முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
பாரம்பரிய வேளாண்மை் :: பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு

தட்டை வரகு
இது பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை தாலுக்காவில் பயிரிடப்படுகிறது.  இப்பயிரின் கால அளவு 5 ½ மாதங்களாகும். விதைகள் நேரடி விதைப்பின் மூலம் விதைக்கப்படுகிறது. மகசூல் அதிகரிப்பிற்காக, ஒரு பாரம்பரிய நடைமுறை 20 ஆண்டுகளாக விவசாயியால் கடைபிடிக்கப்படுகிறது, அதாவது விதைத்த 45 நாட்களுக்கு பிறகு, ஆடுகளை ஒரு நாளைக்கு மேய்ச்சலுக்கு விட வேண்டும். இந்த முறைக்கு ‘கேடை அடித்தாள்’ என்று பெயர்  மற்றும்  தொழில்நுட்ப ரீதியாக இதற்கு ஆட்டுக்கிடை அமைத்தல் என்று பெயர்.ஒரு ஏக்கர் முழுவதும் ஆடுகளை அனுமதிக்கலாம். ஆடுகள் வயல்வெளி முழுவதும் மேய்ச்சல் செய்து பயிரின் வேரை மட்டும் விட்டுவிடும். அதன் பிறகு, அதன் பக்கத் தூர்கள் நன்கு வளரும். இந்த பக்கத்தூர்கள் மூலம் அதிக எண்ணிக்கையிலான கதிர்கள் கிடைக்கும். இது 10-12குவிண்டால்/ஏக்கர் என்ற அளவுக்கு மகசூல் கிடைக்கும்.

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014