வேளாண்மை  காலநிலை விபரங்கள்               
              வேளாண்மை  அறிவியல் நிலையம், தருமபுரி 11 டிகிரி 47’ மற்றும் 12 டிகிரி 33’ வட அட்சரேகையிலும்  77 டிகிரி 02’ மற்றும் 40’ கிழக்கு தீட்சரேகைப் பகுதிகளில், கடல் மட்டத்திலிருந்து  1535 அடி உயரத்தில் அமைந்துள்ளது. தருமபுரி மாவட்டத்தின் மொத்த புவி பரப்பளவு  4497.77 சதுர கிலோ மீட்டராகும் (4,49,779 ஹெக்டர்). இது தமிழ்நாட்டின் பரப்பளவில்  3.46 சதவீதம் ஆகும். 
               
                தருமபுரி மாவட்டத்தில் பெரும்பாலும் வறண்ட  காலநிலை நிலவுகிறது. கோடைக் காலத்தில் (மார்ச் – மே) அதிகளவாக ஏப்ரல் மாதத்தில்  38 – 40 டிகிரி செல்சியஸ் வெப்பமும், குளிர்காலத்தில் (டிசம்பர் – பிப்ரவரி) ஜனவரி  மாதத்தில் மிகக் குறைந்த அளவாக 15 -17 டிகிரி செல்சியஸ் வெப்பமும் நிலவுகிறது. 
                இம்மாவட்டத்தின்  சராசரி மழை அளவு 895 மில்லி மீட்டராகும். இதனை 35 மழைக்கால நாட்களில் பெறுகிறது. 
               
                தருமபுரி மாவட்டத்தில் கரிசல் மற்றும்  கலப்பு இருபொறை மண் வகை காணப்படுகிறது.  மணல்  கலந்த செம்மண் அரூர் வட்டாரத்திலும், கரிசல் மற்றும் இருபொறை மண் தருமபுரி வட்டாரத்திலும்  காணப்படுகிறது. மாவட்டத்தின் எல்லா பகுதிகளிலும் குறைந்த அளவு தழைச்சத்து மற்றும் மணிச்சத்து  காணப்படுகிறது.
 
  |