வேளாண் காலநிலை மண்டலங்கள் மற்றும் முக்கிய வேளாண் சூழலியல்
நிலவரங்கள்
வேளாண் காலநிலை மண்டலம் : தெற்கு மண்டலம்
சிறப்பியல்புகள்: வேளாண்மை அறிவியல் நிலையம், வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பெரியார் – வைகை அணைக்கட்டு பகுதியில் அமைந்துள்ளது. இந்த பகுதி தமிழ்நாட்டில் தெற்கு மண்டலமாக அமைந்துள்ளது. மதுரை 3741.73 சதுர கிலோ மீட்டர் புவிப்பரப்பளவில் விரிவடைந்து தமிழ்நாட்டில் உள்ள புவிப்பரப்பளவில் 2.9 சதவீதம் அளவைப் பெற்றுள்ளது. 2 வருவாய் பகுதி மற்றும் 13 வட்டாரங்களை உள்ளடக்கியுள்ளது. நம் நாட்டில் உள்ள 13 வேளாண் தட்ப வெப்ப மண்டலங்களில் மதுரையானது தெற்கு பீடபூமி மற்றும் மலைப் பிரதேசங்களுக்குக் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. சாதாரணமாக இம்மாவட்டத்தில் வெப்ப மண்டல சீதோஷண நிலை நிலவும். இந்த மாவட்டத்தின் சராசரி மழையளவு 855 மில்லி மீட்டர். வடகிழக்கு பருவமழை நேரத்தில் பெருமளவு மழையளவைப் பெறுகின்றது. இந்த மாவட்டமானது அடிப்படையில் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்தவற்றை முக்கிய தொழிலாகக் கொண்டது. இந்த மாவட்டத்தில் வேளாண் காடுகள் 50452 ஹெக்டேர் பரப்பளவிலும், மொத்த சாகுபடி பரப்பளவு 1,38,055 ஹெக்டேர் அளவிலும் அமைந்துள்ளது. மொத்த சாகுபடி பரப்பளவில் 48 சதவீதம் மொத்த நீர்ப்பசன வசதியைப் பெற்று (69,690 ஹெக்கேடர்) இவற்றுடன் 13,616 தண்ணீர் தொட்டிகளும் இம்மாவட்டத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தில் உள்ள 2.48 இலட்சம் கால்நடைகளில் வெள்ளை கால்நடைகள் 2.15 இலட்சமும், கருப்பு கால்நடைகள் 0.33 இலட்சமும் அமைந்துள்ளது. இந்தளவு அடிப்படை வசதிகள் இம்மாவட்டத்தில் உள்ளதால் ஜவுளி உற்பத்தி துறை, ரெடிமேடு கார்மென்ட், பேக்கரி, மலரியியல் துறை மற்றும் பால் பண்ணை போன்ற துறைகளில் நிறைய வாய்ப்புகள் உள்ளது.
மண்வகைகள்: இந்த மாவட்டத்தில் அமைந்துள்ள மண் வகைகளானது ஆழமான செம்மமண், மேலோட்டமான செம்மண், செம்மண், கரிசல் மண் மற்றும் செம்மண் கலந்த மணல் போன்ற வகைகள் காணப்படுகிறது. உலோக வளங்கள என்ற வகையில் சுண்ணாம்பு கல், கருங்கல் போன்றவை இம்மாவட்டத்தில் காணப்படுகின்றன.
ஆண்டு மழைளயவு (மி.மீ): 855 மில்லி மீட்டர்
|