வேளாண் அறிவியல் நிலையம் ::வேளாண் ஆராய்ச்சி நிலையம்ராமநாதபுரம்

செயல்பகுதி


புவி அமைப்பு விபரங்கள்
இராமநாதபுரம் மாவட்டமானது கடற்கரையை ஒட்டி 260 கி.மீ தூரம் வரை பரவியுள்ளது. கடற்கரையோரப் பகுதிகள் மணல் குன்றுகள், சதுப்பு நிலமாகவும், உப்பங்கழி (அ) காயலாகவும் சூழப்பட்டுள்ளது. கடற்கரையை ஒட்டி உள்ள பகுதிகளில் களிமண் மற்றும் வண்டல் மண்ணும் கலந்து கடல் நீருடன் அடிக்கடி கலந்து, உப்பு படிந்து காணப்படும். இந்த மாவட்டமானது வடக்கில் சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களும், கிழக்கு மற்றும் தெற்குப் பகுதியில் வங்காள விரிகுடாவும், மேற்கில்  தூத்துக்குடி மற்றும் காமராஜர் மாவட்டங்களிலும் சூழப்பட்டுள்ளது. மாவட்டத்தின் தலைமையிடம் ராமநாதபுரத்தில் அமைந்துள்ளது.

docu0004


புவியியல் பகுதி                      : 4,08,957 எக்டர்
கிடைக்கோடு                          : 9005’-9056’ N
குத்துக்கோடு                          : 78010’-78027’ E
வருடாந்திர மழையளவு          : 827.0 மி.மீ

 

 

மாவட்டத்தில் உள்ள வட்டங்கள்:
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலாடி, கமுதி, முதுகுளத்தூர், பரமக்குடி, ராமநாதபுரம், ராமேஸ்வரம் மற்றும் திருவாடனை என்று ஏழு வட்டங்களைக் கொண்டது.


வட்டத்தின் பெயர்

மொத்தப் பகுதி (எக்டர்)

வட்டத்தின் தலைமையிடம்

பரமக்குடி

73794

பரமக்குடி

ராமேஸ்வரம்

9048

ராமேஸ்வரம்

ராமநாதபுரம்

77499

ராமநாதபுரம்

திருவாடனை

81461

திருவாடனை

முதுகுளத்தூர்

48085

முதுகுளத்தூர்

கடலாடி

61223

கடலாடி

கமுகி

57847

கமுகி

 

மாவட்டத்தில் உள்ள வட்டாரங்கள்
இராமநாதபுர மாவட்டத்தில், கடலாடி, கமுகி, முதுகுளத்தூர், போகலூர், நயினார் கோவில், பரமக்குடி, ராமநாதபுரம், திருப்புல்லானி மற்றும் மண்டபம் என்ற 11 வட்டாரங்கள் உள்ளன.


வட்டாரத்தின் பெயர்

மொத்தப்பகுதி

பஞ்சாயத்துக்களின் எண்ணிக்கை

கிராமங்களின் எண்ணிக்கை

ராமநாதபுரம்

214.08

25

25

பரமக்குடி

290.60

39

34

R.S.மங்களம்

519.11

35

41

திருவாடனை

439.37

47

57

கமுதி

578.47

53

49

நயினார் கோவில்

273.04

37

36

போகலூர்

143.55

26

23

முதுகுளத்தூர்

396.23

46

38

கடலாடி

686.95

60

53

திருப்புல்லானி

28.83

33

25

மண்டபம்

303.01

28

19

ஆதாரம் : வட்டாரவாரியான புள்ளி விபர அறிக்கை, வேளாண் இணை இயக்குநர் ராமநாதபுரம் மாவட்டம்

 

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2013