வேளாண் அறிவியல் நிலையம் ::வேளாண் ஆராய்ச்சி நிலையம்ராமநாதபுரம்

 

வெற்றிக் கதை – 1

1.

உழவரின் பெயர்

திரு. அ. ராமு

2.

தந்தையின் பெயர்

திரு.அழகர்

3.

இனம்

ஆண்

4.

அஞ்சல் முகவரி

உசிலன்கோட்டை கிராமம், முகிதம் அஞ்சல், திருவாடனை வட்டம்,
ராமநாதபுர மாவட்டம் – 623 403

5.

தொடர்பு கொள்ளும் தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி

99657279

6.

நிலம் & நீர் பற்றிய விபரங்கள்

7 ஏக்கர் மானாவரி நிலம்

7.

செயல்முறையியலுடன் உழவர்களால் ஏற்படுத்தப்படும் இடையீடுகளின் விபரங்கள்

பால் காளான் உற்பத்தியில் வெற்றி பெற்றுள்ளார் (இணைப்பு -1)

8.

முடிவுகள்

மாவட்ட ஆட்சியர்மற்றும் மாநில இணைத் துறைகளிலிருந்து இதர அதிகாரிகளிடமிருந்து அங்கீகாரம் பெற்றுள்ளனர். பால் காளான் உற்பத்தியின் முதன்மை பயிற்சியாளராக கண்டறியப்பட்டுள்ளார்.

9.

உழவர்களின் அனுபவத்திலிருந்து கற்ற பாடம்

முனைப்பு மற்றும் ஒட்டுமொத்த விளைச்சலில் வருமானமும், அங்கீகாரமும் கிடைத்தது.


இணைப்பு – 1
பால் காளான் உற்பத்தி (திரு..ராமு)
வேளாண் அறிவியல் நிலையம், காளான் உற்பத்திக்கான பயிற்சியை உழவர்கள், பண்ணைப் பெண்கள், ஊரக இளைஞர்கள் மற்றும் சுய உதவிக் குழுக்களுக்கு தரப்பட்டது. திருவாடனை வட்டம், உசிலன் கோட்டையைச் சேர்ந்த திரு.அ.ராமு என்பவர், தன்னுடைய 7 ஏக்கர் நிலப்பரப்பில் நெல் சாகுபடியை மேற்கொண்டார். அவர் வேளாண் அறிவியல் நிலையத்தைப் பார்வையிட்டு, சிப்பிக் காளான் உற்பத்திக்கான பயிற்சித் திட்டத்தில் கலந்து கொண்டார். பின், அவருடைய கிராமத்தில் காளான் உற்பத்திபிரிவை சிறியதாக ஆரம்பித்தார். ஆரம்பத்தில், அவர் மிகவும் சிரமப்பட்டார். பின் வேளாண் அறிவியல் நிலையத்தின் தொழில்நுட்ப உதவி மற்றும் வழிகாட்டுதலின் படி சிப்பிக் காளான் உற்பத்தியை வெற்றிகரமாக நடத்தினார். அதை தொண்டியைச் சுற்றியுள்ள இடங்களில் விற்பனைச் செய்தார். ஒவ்வொரு முறையும் காளான் வித்துக்காக தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தையே நம்பியிருக்க வேண்டியிருந்தது. அதனால் அவர் உடனடியாக காளான் வித்து உற்பத்தி தொழில்நுட்பங்களை வேளாண் அறிவியல் நிலையத்திலிருந்து கற்றுக் கொண்டார். அவருடைய பண்ணை வீட்டிலேயே காளான் வித்து உற்பத்தி ஆய்வகத்தை ஏற்படுத்தினார். கோடைக் காலங்களில் சிப்பிக் காளான் உற்பத்தி செய்வதில் பெரிய பிரச்சனையைச் சந்தித்தார். அதே போல்  அதிக உற்பத்திக் காலத்தில் விற்பனை செய்வதும் கடினமாகிறது. இந்தச் சிக்களிலிருந்து வெளியே வரவிரும்பி, வேளாண் அறிவியல் நிலையத்தை அணுகினார். வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் சிப்பிக்காளானை விட பால் காளானின் வாழ்வுக்காலம் அதிகமாதலால், அவரை பால்காளான் உற்பத்தி செய்யுமாறு அறிவுரை வழங்கினார்கள். அதை அடிப்படையாகக் கொண்டு அவர் பால் காளான் உற்பத்திக்காக சிறு  பிரிவை ஆரம்பித்தார். இந்தக் காளான் பெரியதாகவும், வெள்ளை நிறத்திலும், சுவையிலும், சாதாரண நிலையில் சேமித்து வைத்தல் போன்ற சிறப்பியல்புகளால் அனைத்து மக்களாலும் பாராட்டப்பட்டது. ராமநாதபுரத்தின் சீதோஷ்ண நிலை பால் காளான் உற்பத்திக்கு ஏற்றதாக இருக்கிறது. அவர் பெரிய அளவிலான, வெள்ளை நிற காளான்களை அறுவடை செய்துள்ளார். சிப்பிக் காளான் உற்பத்தியைக் குறைத்துக் கொண்டு, பால்காளான் உற்பத்தியை விரிவுபடுத்தி, இன்று ராமநாதபுர மாவட்டத்தில் பால்காளான் மட்டும் உற்பத்தி செய்பவராக திகழ்கிறார். வேளாண் அறிவியல் நிலையம் இவரை பால்காளான் உற்பத்தியில் முன்னோடி பயிற்சியாளராக உருவாக்கியுள்ளது. ராமநாதபுர வேளாண் அறிவியல் நிலையம் இவருடைய முயற்சியினால் வெற்றிகரமான தொழில் முனைவோராக தினமலர் நாளிதழிலும், உழவரின் வளரும் வேளாண்மை இதழிலும் வெளியிட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரும் இவருடைய பணியைப் பாராட்டி, இவருடைய முயற்சியினால் வெற்றிகரமான தொழில் முனைவோராக தினமலர் நாளிதழிலும், உழவரின் வளரும் வேளாண்மை இதழிலும் வெளியிட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரும் இவருடைய பணியைப் பாராட்டி, இவருடைய பண்ணையை பார்வையிட்டார். மாவட்ட நிர்வாகமும் இவருடைய அனுபவத்தை வைத்து, இவரை மகளிர்த் திட்டம் மூலமாக சுய உதவிக்குழுக்களுக்கு பயிற்சியறிக்கும் முன்னோடி பயிற்சியாளராக நியமித்துள்ளது.

வெற்றிக்கதை – 2


1.

உழவரின் பெயர்

திரு.இ.ஆல்ட்ரின்

2.

தந்தையின் பெயர்

திரு.இமானுவேல்

3.

பாலினம்

ஆண்

4.

முகவரி

பீட் டிரஸ்ட்
விக்டோரியா நகர்,
தங்கச்சிமடம்,
ராமநாதபுரம்

5.

தொலைபேசி எண்

9487405114
9994168623

6.

நீர் மற்றும் நிலத்தின் விபரங்கள்

உடல் ஊனமுற்றோர்க்காக சிறிய அறக்கட்டளை நடத்தப்படுகிறது

7.

செயல்முறையியலுடன் உழவர்களால் ஏற்படுத்தப்படும் இடையீடுகளின் விபரங்கள்

இறால் ஊறுகாய் தயாரிப்பு மற்றும் விற்பனை (இணைப்பு –II)

8.

முடிவுகள்

தன்னுடைய தரப்பெயருடன் விற்பனை செய்கிறார்.

9.

உழவர்களின் அனுபவத்திலிருந்து கற்ற பாடங்கள்

முனைப்பு மற்றும் ஒட்டுமொத்த விளைச்சலால் வருமானமும், அங்கீகாரமும் கிடைத்தது.

இணைப்பு – II
இறால் ஊறுகாய் தயாரிப்பு (திரு.ஆல்ட்ரின்)
ராமநாதபுரத்தைச் சேர்ந்த திரு.ஆல்ட்ரின் ராமேஸ்வரத்தில் மீன் விற்பனை செய்து கொண்டுள்ளார். இவர் ஒரு உடல் ஊனமுற்றோர் ஆவார். இவர் ‘பீட் டிரஸ்ட்’ என்ற பெயரில் உடல் ஊனமுற்றோர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக ஒரு தன்னலமற்ற தொண்டு நிறுவனத்தை ஏற்படுத்தியுள்ளார். ஆரம்பத்தில் இவர் கடல் சார்ந்த பொருட்களை விற்பனை செய்துள்ளார். பின் பொருளாதாரம் சற்று உயர்ந்தபின், கடல் சார் உணவுப் பொருட்களை பதப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டுதல் செய்யலாம் என்று கருதினார். இந்த புதுமையான கருத்தைக் கொண்டு, இவர் வேளாண் அறிவியல் நிலையத்தில் 2008-09 ம் ஆண்டு மதிப்பு கூட்டுதல் பற்றிய தொழிற்பயிற்சியில் சேர்ந்தார். பிறகு, இவர் இறாலிலிருந்து ஊறுகாய் தயாரிக்கும் பிரிவை உடல் ஊனமுற்றோர் பலரின் உதவியுடன் ஆரம்பித்தார். ஊறுகாய் பாட்டிலின் மேல் பெயரிட்டு, பாலித்தீன் சீட்கொண்டு மூடினார். 2000 வகையான இறால் ஊறுகாயை இவர் தயாரித்து, ஒரு கிலோ 320 ரூபாய் என்று விற்பனை செய்து வருகிறார். இறால் ஊறுகாயின் வைப்புக் காலம் ஒரு வருடமாகும். இவருடைய பொருட்கள் தமிழ்நாட்டின்  அனைத்துப் பகுதிகளிலும் விற்கப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்தும் வாய்ப்புகள் வருகின்றன. இவர் கூடுதலாக ஒரு மாதத்திற்கு 30000 ரூபாய் வருமானம் ஈட்டுகிறார். அதுமட்டுமில்லாமல், உடல் ஊனமுற்ற 7 நபர்களுக்கு வேலை வாய்ப்பும் தருகிறார்.


வெற்றிக்கதை –3


1.

உழவரின் பெயர்

திரு.ஓ.மீராசா

2.

தந்தையின் பெயர்

திரு.ஓசாலி

3.

பாலினம்

ஆண்

4.

முகவரி

2/279, பிளாட் – A,
புதுமசூதி வீதி,
பெருங்குளம் கிராமம் அஞ்சல்
ராமநாதபுரம் – 623 523

5.

தொலைபேசி எண்

7200266045

6.

நீர் மற்றும் நிலத்தின் விபரங்கள்

(இணைப்பு – II)

7.

செயல் முறையுடன் உழவர்களால் ஏற்படுத்தப்படும் இடையீடுகளின் விபரங்கள்

தன்னுடைய பண்ணையில் ஒருங்கிணைந்த பண்ணை முறையை ஏற்படுத்தியுள்ளார்.

8.

முடிவுகள்

ஒருங்கிணைந்த பண்ணை முறை அமைப்பிற்கான மாதிரிப் பண்ணையாக இவருடைய பண்ணை எடுத்துக் கொள்ளப்பட்டது

9.

உழவர்களின் அனுபவத்திலிருந்து கற்ற பாடங்கள்

முனைப்பு மற்றும் ஒட்டுமொத்த விளைச்சலால் வருமானமும், அங்கீகாரமும் கிடைத்தது.

இணைப்பு –III
ஒருங்கிணைந்த பண்ணைமுறை (திரு.மீராசா)
திரு.மீராசா என்பவர் அடிப்படையில் விலங்கியல் பட்டதாரி, இவர் அங்கக வேளாண்மையில் ஆர்வம் உள்ளவர். இவர் நம்முடைய வேளாண் அறிவியல் நிலையத்தை ஒரு முறை தொடர்பு கொண்டு விலங்கு மற்றும் பயிர் பகுதிகளைக் கொண்டு ஒருங்கிணைந்த பண்ணை முறை ஏற்படுத்துவது பற்றி கேட்டார். வோளண் அறிவியல் நிலையத்துடன் ஆலோசனையுடனும், தொடர்ந்த ஆர்வத்தினாலும், இவர்  நிறைய புதுமையான வழிகளைப் பெற்றார். இங்கு பெற்ற அறிவு மூலம், இவர் கால்நடைகளின் கழிவுகளை  சேகரித்தார் (சிறுநீர் மற்றும் கொட்டகை கழிவுகள்). ஆரம்பத்தில் இவர் 10x15x6 அடியுள்ள ஒரு சிமெண்ட் தொட்டியை அமைத்து, அதில் குழாய்கள் வழியாக கொட்டிலிருந்து கழுவும்நீர், சிறுநீரை தொட்டிக்கு வரவழைத்து, சேகரித்தார்.
இந்த மாதிரி சேகரித்த நீரை வாரம் ஒரு முறை நிலத்திற்கு பாசனம் செய்வதால் மண்ணில் அங்ககப் பொருட்களின் அளவு கூடுகிறது. இந்த அமைப்பு முழுவதும் மோட்டார் மூலம் இணைக்கப்பட்டு குழாய்கள்  வழியாக, வடிக்கப்பட்டு நீர் சேகரிக்கப்படுகிறது. அதிக அடர்த்தியுள்ள  பிளாஸ்டிக் குழாய்கள்  பல நீளங்களில் இணைக்கப்பட்டு பயிரிடும் அனைத்து நிலப்பகுதிகளுக்கும் பாய்ச்சப்படுகிறது. இதனால் தழைச்சத்து, மணிச்சத்து உரங்களின் அளவு குறைக்கப்படுகிறது. மேலும் மண்ணில் பயனுள்ள நுண்ணுயிரிகளின் வளாச்சியும், அங்ககப் பொருளின் அளவும் கூடுகிறது.

  100_2741 100_3383


வேளாண் அறிவியல் நிலையத்தின் ஆலோசனையுடன் பண்ணையில் செயல்படுத்தப்படும் புதிய தொழில்நுட்பங்கள்
அ) வேளாண் – தோட்டக்கலை பயிர்களில்  புதிய பயிர் இரகங்கள் / கலப்பினங்களை பியரிடுதல்
ஆ)பல்கலைக் கழக அதிகாரிகளால் பரிந்துரைக்கப்படும் பயிர் மேலாண்மை தொழில்நுட்பங்களை செயல்படுத்துதல்
இ) பயிர் மேலாண்மையில் அங்ககப் பொருட்களை பயன்படுத்தும் மற்றும்  அதிகளவிலான திசையமைவு
ஈ) சொட்டு நுண்நீர் பாசன அமைப்புகளை பயன்படுத்துதல்  (சொட்டு மற்றும் தெளிப்பு நீர் பாசனம்)
உ) மேம்படுத்தும் வகையில் பால் கறக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்துதல்
ஊ) மாட்டு கொட்டிலின் உள்ளே வெப்பநிலையை பராமரிப்பதற்கான  பனிமூட்ட பிரிவைப் பயன்படுத்துதல்
எ) வைக்கோல் வெட்டும் கருவியைப் பயன்படுத்துவதால் பசும்தீவனம் வீணாவது குறைகிறது மற்றும் அதற்கான ஆட்கள் பயன்படுத்தும் விதம் தடைபடுகிறது.
ஏ) ஒருங்கிணைந்த பண்ணையின் கருத்துப்படி கழிவு இன்மை மற்றும் நிதி ஒதுக்கீட்டின்மை
நடவு செய்யப்பட்ட தீவன நாற்றுக்கள் – பொதுவாக உழவர்கள் தீவனப் பயிரின் துண்டுகளை உயர்த்தப்பட்ட வரிசைகளில் நடவு வயலில் நடுவார்கள். பல்கலைக்கழக அதிகாரிகள் (அ) துறை அதிகாரிகளின் பரிந்துரைப்படி பயிரைத் துண்டுகளாக வெட்டிய உடனேயே அடுத்தப் பயிரை நட வேண்டும். திரு.மீராசா அவர்கள் முதல் முறையிலிருந்தே CN4 தீவனப் புற்களை துண்டுகள் மூலம் பயிரிடும் அதே முறையை பின்பற்றினார். நடவு வயலில் சில காரணங்களால் முளைப்பு திறன் திருப்திகரமாக இல்லாததால் ஆங்காங்கே இடைவெளி காணப்பட்டதால், விளைச்சல் மிகவும் குறைந்தது. இதைத் தடுப்பதற்காக இவர் உயர்த்தப்பட்ட படுக்கை நாற்றங்காலில் தீவனப் பயிரின் துண்டுகளை நட்டு, பின் நன்றாக உள்ள முளைத்த நாற்றுக்களை 2 வாரங்களுக்குப் பிறகு நடவு வயலில் நடவு செய்தார். இதனால் தீவனப்பயிர்கள் முளைப்பு மற்றும் வளரும் நிலையில் மடிவதைத் தடுக்கலாம். மேலும், முளைப்பு நிலையில் பாசனநீரை சேமிக்கலாம் மற்றும் வளரும் நிலையில் பூச்சிகளை கண்காணிப்பதன் மூலம் மேலாண்மை செய்யலாம். நல்ல திறனுள்ள நாற்றுக்களை நடவு வயலில் நட்டுவிட்டால், மேலாண்மை செய்வதும் எளிதாகிறது. இதனால் நல்ல பயிர் எண்ணிக்கையும், அதிக மகசூலும், தரமான தீவனமும் கிடைத்தது.
கடந்த 5 வருடங்களுக்கான செயல்வாரியாக வருமானம், வரவு – செலவு விகிதம் வருடம் வாரியாக மொத்த மற்றும் நிகர வருமானம்

.எண்

பகுதிகள்

2010 டிசம்பர் இறுதி

2011 டிசம்பர் இறுதி

2012 டிசம்பர் 2 வது வாரம்

 

 

வரவு செலவு விகிதம்

வருமானம்

வரவு செலவு விகிதம்

வருமானம்

வரவு செலவு விகிதம்

வருமானம்

1.

வேளாண் பயிர்கள்

-

உருவாக்க நிலை

-

8,000

-

20,000

2.

தோட்டப்பயிர்கள்

-

-

14,000

-

16,000

3.

கால்நடை வளா்ப்பு

-

-

1,40,000

-

2,00,000

4.

மீன் வளா்ப்பு

-

-

-

-

-

5.

மண்புழு உரம்

-

-

18,000

-

40,000

 

மொத்த வருமனாம் /வருடம்

-

 

-

1,80,000

-

2,76,000


 

கடந்த ஐந்து வருடங்களில் முக்கிய வருமானம் தரும் செயல்களின் உற்பத்தித் திறன்


.எண்

வருமானம் தரும் செயல்கள்

உருவாக்க நிலையில் (2010)

2012

 

 

பரப்பு

உற்பத்தி

வருமானம்

பரப்பு

உற்பத்தி

வருமானம்

1.

வேளாண் பயிர்கள்

 

 

 

 

 

 

அ)

வேர்க்கடலை

-

-

-

25 சென்ட்

400 கிலோ

7,000

ஆ)

பயிறுவகைகள்

-

-

-

3 எக்டர் (ஐ.சி.மா)

500 கிலோ

10,000

இ)

எள்

-

-

-

25 சென்ட்

100 கிலோ

3,000

2)

தோட்டப் பயிர்கள்

 

 

 

 

 

 

அ)

மா

-

-

-

-

-

-

ஆ)

மிளகாய்

-

-

-

15 சென்ட்

100 கிலோ

6,000

இ)

தக்காளி

-

--

-

112 கிலோ

ஈ)

கத்தரி

-

-

-

50 கிலோ

உ)

கீரைவகைகள்

-

--

-

-

ஊ)

தர்பூசணி

-

-

-

3 எக்டர் மாமரத்துடன் ஊடுபயிர்

2.5 டன்கள்

10,000


3.

தீவனபயிர்கள்

 

 

 

 

 

 

அ)

சி.எண் – co -3

3 ஏக்கர்

6 டன்கள்

-

5 ஏக்கர்

150 டன்கள்

தங்களுடைய சொந்த பயன்பாட்டிற்கு விற்பதற்கு அல்ல

ஆ)

சி.எண் - co -4

-

இ)

கோ (எப்.எஸ்) – 29

50 சென்ட்கள்

-

ஈ)

ஸ்டைலோ

-

 

-

உ)

அகத்தி

-

 

-

4.

கால்நடை வளர்ப்பு

5 கறவை மாடுகள்

450 லிட்டர் / வருடம்

2,250

20 கறவை மாடுகள்

3,000 லி/ வருடம் கன்றுக்குட்டிகளை விற்றல்

2,00,000

5.

மண்புழு உரம் (பண்ணை பயன்பாட்டிற்கு விறகு கம்போஸ்ட் உரத்தை விற்றல்)

-

-

-

20x60 அடி

14 டன்கள்

40,000

6.

மொத்த வருமானம் (ரூ.)

 

 

2,250

மொத்த வருமானம்

 

2,76,000

 
சக உழவர்களிடம் தொழில்நுட்ப தாக்கம்
இந்த பண்ணையானது 2010 –ம் வருடம் ஜீன் மாதத்தில், 30 கறவை மாடுகளை  கொண்ட கூரை வேயப்பட்ட மாட்டுக் கொட்டிலானது, அந்த கிராமம் முழுவதும் சுத்தமான, இயற்கையான, தரமான புத்தம் புது பாலை தரும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. இதனால் சிப்பமிடப்பட்ட பாலை விற்பனையைத் தடுக்கலாம். இந்த கிராமத்தில் பெரும்பாலானோர் முஸ்லீம் இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பாலை அதிகாலை நேரத்தில் வாங்குவர். மற்ற கிராமத்தார் புத்தம் புது பாலை விரும்பி வாங்குவார்கள். இந்த கணிப்புகளை கருத்தில் கொண்டு, திரு,மீராசா தன்னுடைய  கறவை மட்டும் பண்ணையை ஜெர்ஸி  கலப்பின பசுக்களை  வைத்து வளர்த்தார். மற்றொரு புரம், தன்னுடைய நிலத்தின் ஒரு பகுதியில் பசுந்தீவனச் சாகபடியை மேற்கொண்டார். சாதாரணமாக பேசிக் கொண்டிருக்கையில், இந்தத் தகவல் கிராமம் முழுவதும் மெதுவாக பரவத் தொடங்கியது. ஆரம்பக் கட்டங்களில் உற்பத்தி செய்யப்பட்ட பாலின் அளவு 450 லிட்டர். இது பல்வேறு அளவுகளில் (250 மிலி, 500 மிலி) கிராமத்தாரின் விருப்பப்படி பால் அவர்களின் வீடு வரை கொண்டு செல்லப்பட்டது. நாட்கள் கடந்த பின்னர், இந்த பண்ணை தரத்திலும், சரியான நேரத்தில் பாலை கொண்டு சேர்ப்பதாலும் பிரபலமடைந்தது.
பின் வந்த காலங்களில், அவருடைய வெற்றிக் கதையை வேளாண் இதழில் வெளியிடப்பட்டது. இவருடைய வெற்றிக்கதை மாவட்டத்தைத் தாண்டியும் பிரபலமடைந்தது, மாவட்ட ஆட்சியர்களும் தொடர்ந்து பார்வையிட்டனர். அதற்குப் பிறகு, மாவட்ட ஆட்சியர் திரு.மீராசாவை  அழைத்து, தன்னுடைய அனுபவத்தை மற்ற உழவர்களுடன் மாதந்தோறும் நடைபெறும் மாவட்ட உழவர்களின்  குறைதீர்க்கும் கூட்டத்தில் பகிர்ந்து கொள்ளச் செய்தார். இந்த நிகழ்வு  திரும்பவும் தினசரி நாளிதழில் வெளியிடப்பட்டது, மாவட்டத்தைத்தாண்டியுள்ள பல உழவர்களை ஊக்கப்படுத்தி, தீவனப்புல்லை பயிரிடச்செய்து, கறவை மற்றும் ஆடு வளர்ப்பும் தொடங்கப்பட்டது. பல்வேறு சேவை வழங்கும் நிறுவனங்களின் மேம்பட்ட பயிற்சிகளை விரிவாக்கம் செய்யும் முகவராகக் கண்டறியப்பட்டு்ள்ளார்.

முதன்மை பயிற்சியாளர் & மாற்றம் ஏற்படுத்தும் முகவர் பள்ளிக் குழந்தைகளுடன் நேர்முகம்

அங்கீகாரம்

மாவட்ட ஆட்சியர் பார்வையிடுதல் & மதிப்புயர்வு சான்றிதழ்

 

தொழில்நுட்ப இடுபொருள்களின் மீது வேளாண் அறிவியல் நிலையத்தால் ஏற்பட்ட தாக்கம்


.எண்

தொழில்நுட்பத்தின் பெயர்

தொழில் முனைவோர்களின் எண்ணிக்கை

1.

மண்புழு உர உற்பத்தி

10

2.

காளான் உற்பத்தி

9

3.

உணவுப் பதப்படுத்துதல் தொழில்நுட்பம்

3

 


 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2013