வேளாண் காலநிலை மண்டலம்மற்றும் முக்கிய வேளாண்சூழலியல் நிலவரங்கள் 
             
              வேளாண் தட்ப வெப்ப மண்டலம் : 
              சிறப்பியல்புகள் : சேலம் மாவட்டத்தின் எல்லைகளாக வடக்கில் தருமபுரி மாவட்டமும் தெற்கில் நாமக்கல் மாவட்டமும், கிழக்கில் திருச்சிராப்பள்ளி, விழுப்புரம் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களும் மற்றும் மேற்கில் ஈரோடு மாவட்டமும் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் இருப்பிடமாக 11o மற்றும் 12o வடக்கு அட்சரேகையிலும், 77o 401 மற்றும்  78o 51 கிழக்கு தீர்க்க ரேகையிலும் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் மொத்த புவிப்பரப்பு 5205 சதுர கிலோமீட்டர் அளவு விரிவடைந்து, ஆத்தூர், மேட்டூர், ஒமலூர், சேலம், சங்ககிரி, வாழப்பாடி மற்றும் ஏற்காடு போன்ற ஏழு தாலுகாக்களை உள்ளடக்கியுள்ளது. இம்மாவட்டத்தின் சராசரி அதிக வெப்பிநலை 25 செல்சியஸ் முதல் 42 செல்சியஸ் வரையிலும் மற்றும் சராசரி குறைந்த வெப்பநிலை 19 o செல்சியஸ் முதல் 25o செல்சியஸ் வரையிலும் காணப்படுகிறது. சராசரி மழையளவு 939 மில்லி மீட்டர் அளவில் பதிவாகின்றது. இவற்றில் 47.6 சதவீதம் (447 மில்லி மீட்டர்) தென்மேற்கு பருவக்காலத்திலும் 17.4 சதவீதம் (164 மில்லி மீட்டர்) கோடைகாலத்திலும் மற்றும் 1.3 சதவீதம் (12 மில்லி மீட்டர்) குளிர்காலத்திலும் கிடைக்கப் பெறுகின்றது. முக்கிய நீர்ப்பாசனமாக கிணற்றுப்பாசனம் (93 சதவீதம் அமைந்துள்ளது). இம்மாவட்டத்தின் மொத்தப் புவிப்பரப்பளவில் பயிர் சாகுபடி பரப்பு 52.3 சதவீதமும் (2,72,069 ஹெக்டேர்), வேளாண் காடுகள் (24.1 சதவீதம்), தரிசு மற்றும் சாகுபடி செய்யப்படாத பகுதி 8 சதவீதமும் மற்றும் விவசாயம் அல்லாத பயன்பாட்டிற்கு 9.4 சதவீதம் நிலமும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வடமேற்கு தட்ப வெப்பமண்டலம் பல்வேறு மண்வகைகளைப் பெற்றுள்ளது. இம்மண்டலத்தில் முக்கிய மண்வகைகளாக (1) சுண்ணாம்புச் சத்து அற்ற செம்மண் (2) சுண்ணாம்புச் சத்துரைட செம்மண் (3) வண்டல் மண் (4)கரிசல் மண் (5) மலைப்பகுதி மண் (6) வன மண் வகைகள் (7) உவர்மண் (அல்லது) களர்மண் ஆகிய மண்வகைகளைக் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தின் பெரும்பாலான பரப்பு சுண்ணாம்புச்சத்து அற்ற வகைகளையும் பெற்றுள்ளது. இந்த வடமேற்கு  மண்டலத்தில் 62.6 சதவீதம் சிகப்பு அல்லது பழுப்புநிற சுண்ணாம்புச்சத்து அற்ற மண்வகைகளும் இதைத் தொடர்ந்து சிகப்பு அல்லது பழுப்புநிற சுண்ணாம்புச்சத்து உடைய மண்வகைகள் 30.5 சதவீதம் அமைந்துள்ளது. கரிசல் மற்றும் வண்டல் மண் முறையே குறைந்த அளவாக 5.6 சதவீதம் மற்றும் 1.3 சதவீதம் என்ற பரப்பளவில் காணப்படுகிறது. பல்வேறு மண்வகைகளைப் பெற்றுள்ள சேலம் மவாட்டத்தில் மொத்தப் பரப்பளவாக 3.47 இலட்சம் ஹெக்டேர் பரப்பளவு உள்ளது. இவற்றில் சுண்ணாம்புச்சத்து அற்ற செம்மண் வகைகள் 66.3 சதவீதமும் இதற்கு அடுத்தபடியாக சுண்ணாம்புச் சத்துடைய செம்மண் வகைகள் 29.3 சதவீதமும் இவற்றைத் தொடர்ந்து கரிசல் மண் 3.8 சதவீதமும் மற்றும் வண்டல்மண் படிகம் 0.6 சதவீதம் அளவிலும் அமைந்துள்ளது. ஆத்தூர், மேட்டூர், ஒமலூர், மற்றும் சேலம் தாலுகாவில் சுண்ணாம்புச்சத்து அற்ற மண்வகைகள் காணப்படுகின்றன. சங்ககிரி தாலுகாவில் சுண்ணாம்புச்சத்து மிகுந்த மண்வகைகள் அதிகளவில் காணப்படுகின்றன. தமிழ்நாட்டில் உள்ள வடமேற்கு மண்டலத்தில் உள்ள சேலம் மாவட்டத்தில் அதிகளவு கள் உவர் நிலப்பரப்பு(0.72 இலட்சம் ஹெக்டேர்) அமைந்துள்ளது. இவற்றையடுத்து தருமபுரி (0.5 இலட்சம் ஹெக்டேர்) மற்றும் பெரம்பலூர் தாலுகா (0.4 இலட்சம் ஹெக்டேர்)  பகுதிகள் அதிகளவு களர் உவர் தன்மையைப் பெற்றுள்ளது. 
              வேளாண் சுழிலியல் நிலவரங்கள் : மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் டெக்கான் 
              பீடபூமி : வெப்பமான நடுநிலை வறட்சி, சிகப்பு வண்டல் மண்: வளர்ச்சி 
              பருவம் 90 முதல் 150 நாட்கள் சிறப்பியல்புகள் : 
               
              வேளாண் சூழலியல் நிலவரம்1 : (சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர், சேலம் மற்றும் ஒமலூர் தாலுகாவில் உள்ள ஒருசில பகுதிகள்) 
              1.மானாவாரி நிலப்பகுதிகளுக்கு நாற்று நடவிற்கு உகந்த மத்திய கால வயதுள்ள கேழ்வரகு இரகங்கள் குறைந்த அளவில் கிடைத்தல் 
                2.தக்காளியில் வெப்ப எதிர்ப்புத்திறன் வாய்ந்த மானாவாரி இரகங்கள் குறைந்த அளவில் கிடைத்தல் 
                3.மானாவாரி வாழை சாகுபடிக்கு உகந்த இரகங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் போதுமான அளவில் கிடைக்காமை 
                4. இறவை சாகுபடி சோளத்தில் சரிசமமாக உர வகைகளை பயன்படுத்தாமை, தொழு உரம் மற்றும்அசோஸபைரில்லம் போன்றவற்றை வயல்களுக்கு இடாமல் இருத்தல் மற்றும் குருத்து ஈ, கதிர்நாவாய் புழு தாக்குத் போன்ற பிரச்சினைகள் இறவை சாகுபடி சோளத்தில் உள்ளன. 
              வேளாண் சூழலியல் நிலவரம் 2: (ஆத்தூர், தாலுகா, சேலம் மாவட்டம்) 
                1.நிலக்கடலையில் சான்றளிக்கப்பட்ட விதைகள் போதுமான அளவில் கிடைக்கப்பெறாமை 
                2.பரிந்துரைக்கப்பட்ட விதை அளவு விதை நேர்த்தி கடைபிடிக்கப்படாததால் குறைந்த பயிர் எண்ணிக்கை 
                3.பருத்தியில் குளிர் மற்றும் கோடை காலத்தில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் 
                4.மரவள்ளிக்கிழங்கு இறவை (அல்லது) மானாவாரி சாகுபடியில் அதிக மகசூல் தரும்வறட்சி தாங்கக் கூடிய இரகங்கள் அல்லது வீரிய ஒட்டு இரகங்கள் கிடைக்கப்பெறாமை மற்றும் போமோ நோயிக்கு எதிர்ப்புத்திறன் வாய்ந்த இரகங்கள் கிடைக்கப்பெறாமை. 
               
              வேளாண் சூழலியல் நிலவரம் 3: (சேலம மாவட்டத்தில் உள்ள சங்ககிரி மற்றும் ஒமலூர் தாலுகாவில் உள்ள ஒருசில பகுதிகள்) 
                1.நெல் சாகுபடியில் சம்பா பருவத்திற்கு ஐ.ஆர்.20 மற்றும் பொன்னி இரகத்திற்கு மேலான இரகங்கள் இல்லமை மற்றும் புகையானுக்கு எதிர்ப்புத்திறன் வாய்ந்த இரகம் இல்லாமை 
                2.நீண்ட மற்றும் மிக நீண்ட இழை பருத்தியில் அதிகளவு பூச்சி மற்றும் நோய் தாக்குதல் 
                3.நடுத்தர இழை நீளமுள்ள விதைகள், தண்டுகூடன் வண்டு மற்றும் வெள்ளை ஈ எதிர்ப்புத்திறன் வாய்ந்த இரகங்கள் கிடைக்கப்பெறாமை 
                4.வறட்சியை தாங்கக்கூடிய கொடிக்கடலை மற்றும் அடர்கொத்து நிலக்கடலை இரகங்கள் சரியாக கிடைக்கப்பெறுவதில்லை. அடர்கொத்து நிலக்கடலை இரகத்துக்கு உகந்த சரியான உழவியல் தொழில்நுட்பங்கள் கிடைக்கப்பெறாமை. 
              மண்வகைகள் 
              
                
                  
                    
                      வ.எண்.  | 
                      மண் வகை  | 
                      சிறப்பியல்புகள்  | 
                      பரப்பு (ஹெக்டேர்)  | 
                     
                    
                      1.  | 
                      சுண்ணாம்புச்சத்து உள்ள செம்மண்  | 
                      சராசரி ஆழம முதல் மிகுந்த ஆழம்; அடர்த்தி குறைந்த வண்டல் மண் முதல் நயமிக்க வண்டல்மண்: குறைவான வேகம் முதல் விரைவாக மண்ணில் நீர் பரவு திறன்: கார அமிலநிலை 7.4 முதல் 9.0 வரை மற்றும் சுமாரான நீர்பிடிப்பு திறன் (21-50 சதவீதம்)  | 
                      247,391  | 
                     
                    
                      2.  | 
                      சுண்ணாம்பு சத்து அற்ற மண்  | 
                      ஆழமான மண் (51 முதல் 100 செ.மீ.); கரடுமுரடானவண்டல்மண் முதல் நயமான வண்டல மண்; சுமாரான சேகம் தல் விரவாக மண்ணில் நீர் பரவு திறன்; குறைவாக மண்ணில் நீர்பிடிப்பு திறன் (0-20 சதவீதம்) கார அமில நிலை 6.6 முதல் 7.8 வரை  | 
                      50,212  | 
                     
                    
                      3.  | 
                      பழுப்பு நிற சுண்ணாம்புச்சத்து உள்ள மண்  | 
                      மிகுந்த ஆழமான மண் (51 முதல் 100 செ.மீ.): நயமான வண்டல் மண்; சுமாரான குறைந்த வேகத்துடன் மண்ணில் நீர் பரவுதிறன், அதிகளவு நீர் பிடிப்பு திறன் (50 சதவீதத்திற்கும் அதிகம்) கார அமிலநிலை 7.9 முதல் 8.4 வரை  | 
                      7,385  | 
                     
                    
                      4.  | 
                      பழுப்பு நிற சுண்ணாம்புச்சத்து அற்ற மண்  | 
                      மிகுந்த ஆழமான மண் (100 செ.மீக்கும் அதிகம்); நயமான வண்டல்மண்; சுமாரான குறைந்த வேகம் முதல் வேகமாக மண்ணில் நீர் பரவு திறன்; நடுத்தர அளவு முதல் அதிகளவு நீர் பிடிப்பு திறன் (21 முதல் 50 சதவீதம்; கார அமில நிலை 5.5 முதல் 6.5 வரை  | 
                         | 
                     
                    
                      5.  | 
                      கரிசல் மண்  | 
                      ஆழமான மண் (51 முதல் 100 செ.மீ.); நயமான வண்டல் மண்; சுமாரான குறைந்த வேகத்துடன் மண்ணில் நீர் பரவுதிறன்; நடுத்தர அளவு நீர் பிடிப்பு திறன்(2 முதல் 50 சதவீதம்) கார அமிலநிலை 8.5 முதல் 9.0 வரை  | 
                      1,941  | 
                     
                    
                      6.  | 
                      வண்டல் மண்  | 
                      மிக ஆழமான மண் (100 செ.மீக்கு அதிகம்); நயமான வண்டல் மண்; வேகமாக மண்ணில் நீர் பரவு திறன்; நடுத்தர அளவு நீர் பிடிப்பு திறன் (21 முதல் 50 சதவீதம்) கார அமில நிலை 7.4 முதல் 7.8 வரை  | 
                      2,136  | 
                     
                    
                      7.  | 
                      கலப்பு மண்  | 
                      ஆழமான மண் (51 முதல் 100 செ.மீ. வரை); நயமான வண்டல் மண்; சுமாரான குறைந்த வேகத்துடன் மண்ணில் நீர் பரவுதிறன்; அதிகளவு நீர் பிடிப்பு திறன் (50 சதவீதத்திற்கும் அதிகம்); கார அமில நிலை 7.9 முதல் 8.4 வரை  | 
                      21,776  | 
                     
                  
                 
               
                 
            
  |