வேளாண் அறிவியல் நிலையம் :: திருவண்ணாமலை மாவட்டம்

வேளாண் காலநிலை மண்டலம் மற்றும் பெரும்பான்மை வேளாண் சூழலியல் நிலவரங்கள் (மண் மற்றும் நிலப்பகுதியைப் பொறுத்து)

வ.எண் வேளாண் காலநிலை மண்டலம் சிறப்பியல்புகள்
1. வடகிழக்கு மண்டலம், விருத்தாச்சலம் சராசரி ஆண்டு மழையளவு 28.62 டிகிரி செ கோடைக்கால வெப்பநிலை 35-39 டிகிரி செ 
குளிர் கால வெப்பநிலை 24-26 டிகிரி செ
2. கிழக்கு தொடர்ச்சி பகுதிகளில் (தமிழ்நாட்டின் மேல்மட்ட நிலம்) மற்றும் டெக்கான் பீடபூமி பகுதிகளில் வறண்ட வெப்பச்சூழல் மற்றும் செம்பொறைமண்

மண்வகைகள்:

இம்மாவட்டத்தில் ஆழந்த செம்மண், மேலோட்டமான செம்மண், வண்டல் மண் மற்றும், சரளைக்கல் மண்வகை ஆகிய நான்கு வகை மண்வகைகள் இம்மாவட்டத்தில் காணப்படுகின்றது. இம்மாவட்டத்தில் முக்கிய மண்வகை செம்மண் வகையாகும். செம்மண் வரிசை சார்ந்த வண்டல் மண் இம்மாவட்டத்தில் அனைத்து தாலுக்காக்களிலும் காணப்பட்டாலும் அதிகளவு திருவண்ணாமலை, செங்கம் மற்றும் வந்தவாசி தாலுக்காக்களில் அதிகளவு காணப்படுகிறது. வெவ்வெறு வகையின் மண்வகைகளில் பெர்ரோஜீனியோஸ் வண்டல் மண் மற்றும் மணல் வகை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் காணப்படுகிறது. கரிசல் மண் வரிசை சார்ந்த வண்டல் மண் வந்தவாசி மற்றும் செய்யாறு தாலுக்காவில் உள்ள குளங்கள் மற்றும் ஆற்றுப்படுக்கைப் பகுதிகளில் காணப்படுகிறது.

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2013