தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் & சுய உதவிக் குழுக்கள் :: முன்னுரை

அரசு சாரா நிறுவனங்கள் / அமைப்புகள்

அரசு சாரா நிறுவனங்கள் / அமைப்புகள் அரசு ஒத்துழைப்பு இன்றி, தனி நபர் அல்லது நிறுவனங்களால் சட்டப்பூர்வமாக உருவாக்கப்பட்ட நிறுவனமாகும். இத்தகைய நிறுவனங்கள், அரசு நிதி மொத்தமாகவோ அல்லது ஒரு பங்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இயக்கப்படுகிறது.

அரசு சாரா நிறுவனம் / அமைப்புகள் என்பது உறுப்பினர்கள் தனி நபர் அல்லது நிலையங்கள் ஒருங்கிணைந்து செயல்படக்கூடிய சங்கமாகும்.

அரசு சாரா நிறுவனம் / அமைப்புகள் செயல்கூறுகள்

 • அனைத்து உதவிகளையும் செய்தல்
 • மீட்புப் பணியில் ஈடுபடுதல்
 • சிறுபான்மையினருக்கு மனித வளத்தை மேம்படுத்துதல்
 • உள்ளூர் அளவில் சேவை செய்தல்
 • சமூக நிர்வாகத்திற்கு உதவி செய்தல்
 • கல்வி அறிவை ஊக்குவித்தல்
 • சுய மரியாதையை மேம்படுத்துதல்
 • சமூக அளவிலான இடுவுகளுக்கு முக்கியத்துவம் அளித்தல்
 • வயது வந்தோர் கல்வியை ஊக்குவித்தல்
 • வருமான அதிகரிப்பு
 • சேமிப்பு மற்றும் வங்கி சமூக நிறுவனம்
 • முதன்மை உடல் ஆரோக்கியம்
 • சிறு தொழில் வேளாண் உற்பத்தி
 • அரசுடன் கூட்டு சேர்ந்து இயக்கப்படும்.

அரசு சாரா நிறுவனங்கள் / அமைப்புகளின் இதரப் பெயர்கள்

NPO  - லாபத்திற்காக அல்ல (Not for Profit)
VO    - தொண்டு நிறுவனம் (Voluntary Organization)
CSO  - வர்த்தக சமூக நிறுவனம் (Civil Society Organization)
CBO  - சமூகத்தை அடிப்டையாகக் கொண்ட நிறுவனங்கள்   (Community Based Organization)
CO    - நற்பணி மன்றங்கள் (Charity Organization)

மூன்றாம் பிரிவு நிறுவனங்கள் (முதல் மற்றும் இரண்டாம் பிரிவு மாநிலம் மற்றும் விற்பனைக்கூடமாகும்).

அரசு சாரா நிறுவனம் / அமைப்புக்களின் வகைப்பாடுகள்

இத்தகைய அரசு சாரா நிறுவனங்கள் / அமைப்புகள் ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு முகாமை மட்டுமே நடத்துவர். இவை சம்பந்தப்பட்ட திட்டமோ அல்லது நிகழ்ச்சிகளையோ மேற்கொள்ளப்படாது. எ.கா PETA (http://www.peta.org/) (கால்நடைகளுக்கு பாரம்பரிய சிகிச்சை அளிக்கும் நிறுவனம்). இந்நிறுவனம் கால்நடைகளுக்கான சிகிச்சையை மட்டும் வழங்குமே தவிர அவற்றிற்குத் தேவையான இருப்பிடங்களை அல்ல.

ஆலோசனை மையம் / ஆராய்ச்சி நிறுவனங்கள்

இத்தகைய அமைப்பு சமூகம் மற்றும் மேம்பாட்டு ஆராய்ச்சி மற்றும் ஆலோசனையை வழங்கும்.

பயிற்சிகள்
அரசு சாரா நிறுவனம் / அமைப்பில் பயிற்சிகள் அளிக்கின்றன.

கூட்டமைப்பு நிறுவனங்கள்

எ.கா ஊரக மேம்பாட்டிற்கான தொண்டு முகாமின் கூட்டமைப்பு

முதன்மை அரசு சாரா நிறுவனங்கள் / அமைப்புகள்

முதன்மை அரசு சாரா அமைப்பு

பங்கு கொள்ளும் அரசு சாரா அமைப்பின் திட்டங்களை அறிந்து, ஆய்வு செய்து மதிப்பீடு செய்யப்படும்.

அடித்தள நிறுவனங்கள்

இத்தகைய நிறுவனங்கள் நேரடியாக சமூகத்திடம் இணைந்து செயல்படுகின்றன. எ.கா அப்னாலயா நிறுவனம் நேரடியாக கோவந்தி சேரி மக்களுடன் இணைந்து பணியாற்றுகின்றன.

நகரத்தை அடிப்படையாகக் கொண்ட நிறுவனங்கள்

இத்தகைய நிறுவனங்கள் நகரத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு செயல்படும் நிறுவனமாகும்.

எ.கா அக்னி நிறுவனம் மும்பை நகரத்திற்கு முக்கியத்துவம் தந்து செயல்படுத்தப்படுகின்றன.

தேசிய நிறுவனங்கள்

தேசிய அளவிலேயே இயக்கப்படுகின்றன. இந்தியாவில் வெகு சில நிறுவனங்களே தேசிய அளவில் செயல்படுகின்றன.
எ.கா பிரத்தம், கன்சிரின் இந்தியா

சர்வதேச நிறுவனங்கள்
இவை சர்வதேச அமைப்புக்களின் ஓர் பகுதியாகும். எ.கா கேர் இந்தியா என்பது கேர் உலக இயக்கத்தின் முக்கியப் பங்கு வகிக்கிறது. முதன்மை நிறுவனங்களைப்போல், இவை நிதிகளை திரட்டி ஒருங்கிணைத்து பின்பு அனைவருக்கும் சமமாக வழங்கப்படும்.

சுய உதவிக்குழு

இவை அரசு சாரா நிறுவனம் / அமைப்பு என்று கூற முடியாது. பயன் பெற்ற சமூகம் அல்லது பெண்கள் 10 பேர்கள் சேர்ந்து ஓர் குழுவாக இயங்குவதே சுய உதவிக்குழுவாகும். இத்தகைய சுய உதவிக் குழு இந்தியாவில் நன்றாக இயங்குகின்றன. மேலும் இத்தகைய சுய உதவிக்குழு கிராமிய தமிழ்நாடு மற்றும் கிராமிய ஆந்திராவை நகரத் தமிழ்நாடு மற்றும் ஆந்திராவாக மாற்றுகின்றன.

மதம் சார்ந்த நிறுவனங்கள்

இத்தகைய நிறுவனங்கள் நிதிகளை மதம் சார்ந்த நிறுவனங்களுக்கு வழங்குகின்றன. (எ.கா) சித்திலிநாயக் அறக்கட்டளை, மும்பை.

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015