முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
தவேப வேளாண் இணைய தளம் ஊட்டச்சத்து :: பிற நோய்கள்
இரத்த சோகை
இரத்த சோகை என்பது ஹீமோகுளோபின் செறிவின் அளவு குறையும்போது ஏற்படுகிறது. இரத்த சிவப்பு அணுக்களில் சிவப்பு - பழுப்பு நிறமாக இருக்க காரணம் ஹீமோகுளோபின் ஆகும். இது ஆக்சிஜனை உடலில் உள்ள எல்லா உறுப்புகள் மற்றும் திசுக்களுக்கு எடுத்துஸ் செல்கிறது. இந்திய அளவில் 60% லிருந்து 80% கர்பிணி பெண்கள் மற்றும் 50% குழந்தைகள் இரத்த சோகை இரத்தசோகை மதிப்பிடப்பட்டிருக்கிறது.
 
சாதாரண இரத்த சிவப்பணு அளவு
இரத்தசோகையினால் இரத்த சிவப்பணுவின் அளவு
காரணிகள்
1. உணவில் ஏற்படும் இரும்புசத்து, போலிக் அமிலம், வைட்டமின் பி12, வைட்டமின் சி, வைட்டமின் பி6 சத்து குறைப்பாட்டால் ஏற்படும்.
2. இரத்த சோகை அல்லது சிவப்பு இரத்த அணுக்களின் அழிவு.
  • காயங்கள்
  • கொக்கிப்புழு தொற்று
  • மாதவிடாயின் போது அதிக இரத்தப்போக்கு
  • வயிற்றுப்போக்கு
  • மூலம்
  • தாலசரத்தம்
  • அரிவாள் அணு  இரத்த சோகை

3. எலும்பு மஜ்ஜை கோளாறு காரணமாக சிகப்பு இரத்த உயிரணுக்கள் உருவாக்க முடியாததால் இரத்தசோகை ஏற்படும்.
4. நீண்ட நாட்களாக உள்ள கீழ்கண்ட வியாதிகளால் இரத்த சோகை ஏற்படும்.

  • சிறுநீரக நோய்கள்
  • முடக்குபாதம்
  • நீண்ட நாட்களாக உள்ள தொற்றுகள்
  • புற்று நோய்
அறிகுறிகள்
  • தலைவலி
  • தலைச்சுற்று
  • கலைப்பு
  • மூச்சுவிடுவதில் சிரமம்
  • படபடப்பு
  • நெஞ்சுவலி
  • கண் இமைகளின் உட்புறம், நாக்கு, நகங்களில் ஏற்படும் வெளுப்பு
  • அதிகரித்த இதயத்துடிப்பு
  • கணுக்கால் மற்றும் பாதங்களில் ஏற்படும் வீக்கம்
  • எப்பொழுதாவது முழு உடலில் ஏற்படும் வீக்கம்
  • நகங்களில்  ஏற்படும் மாற்றம்.
சோதனைகள்
இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு கண்டறியப்பட்டு அதற்கேற்றவாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சிகிச்சைகள்
உணவு

சைவ உணவுகளைவிட அசைவ உணவுகளிலிருந்து இரும்புச்சத்து உடலில் சிறந்தவகையில் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. கீரைகள், தானியங்கள், முட்டையின் மஞ்சள் கரு, இறைச்சி, மீன், பால் மற்றும் பால் பொருட்கள், இரும்பு மற்றும் போலிக் அமிலம் நிறைந்த ஆதாரங்களாகும்.இறைச்சி, ஈரல், மீன், முட்டையின் மஞ்சள் கரு, பால் மற்றும் பால் பொருட்களில் வைட்டமின் பி12 சத்து நிறைந்துள்ளது.
மருந்துகள்
பெரஸ் சல்பேட் மற்றும் போலிக் அமிலம் கொண்ட மருந்துகள் இரத்த சோகை சிகிச்சைக்கு கொடுக்கப்படுகின்றன. இரத்த சோகை சரி செய்த பின்னரும் மருந்துகளை 3-4 மதங்களுக்கு தொடர்வதால் உடலில் இரும்புசத்து இருப்பை உறுதிபடுத்தலாம்.கருவுற்ற பெண்களுக்கு 4 மாதம் முதலும் பாலூட்டும் பெண்களுக்கு முதல் 6 மாதங்களுக்கும் இரத்த சோகைக்கான மருந்துகள் கொடுக்கப்பட வேண்டும்.மருந்துகள் மாத்திரை, காப்சூல், இனிப்பு கூழ் மற்றும் ஊசி மூலமாக செலுத்தலாம். வாய்வழியாக மருந்து உட்கொள்ள முடியாதவர்கல் ஊசி மூலம் எடுத்துக் கொள்ளலாம்.

இரும்பு சத்து மிகுந்த உணவுகள்

உலர்த்தப்பட்ட காலிபிளவர் இலைகள், அரக்கீரை, சிறுகீரை, சுண்டக்காய், நண்டு, மனதக்காளி கீரை, அவல், முள்ளங்கி இலை, புதினா, பொன்னாங்கன்னி கீரை, பொட்டுகடலை, கம்பு, ஈரல், வாழைக்காய் ஆகியவை இரும்பு சத்துள்ள உண்வுகளாகும்.
அரக்கீரை
புதினா
வறுத்த கொண்டக்கடலை சுண்டைகாய்
அவுல் பாஜ்ரா

ஆதாரம்
http://www.healthupdates.in/search/label/Anaemia
http://www.pennhealth.com/health_info/pregnancy/graphics/images/en/19725.jpg
http://www.blackwellpublishing.com/bain/images/Xs021.jpg
http://www.helpfulhealthtips.com/Images/A/Anemia1.jpg
http://www.sailusfood.com
http://upload.wikimedia.org/wikipedia/commons/b/b0/Mint-leaves-2007.jpg
http://4.bp.blogspot.com/s400/Vathal+sundakai+001.jpg
http://media.photobucket.com/image/bajra/DSCN2541.jpg
http://2.bp.blogspot.com /14012009668.jpg

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015