முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
தவேப வேளாண் இணைய தளம் ஊட்டச்சத்து :: பிற நோய்கள் :: புற்றுநோய்
புற்றுநோய் புற்று நோய் எதிர்ப்பு  செயல்பாடு உள்ள மூலிகை செடிகள்
உடலின் இயல்பான உயிரணுக்கள் வளர்ந்து பிரிந்து பின் இறக்கின்றன. ஆனால் புற்றுநோய் உயிரணுக்கள் பிரிந்தபின் இறக்காமல் மீண்டும் மீண்டும் பிரிந்து வளர்கின்றன.புற்றுநோய் டி.என்.ஏ -வில் ஏற்பட்ட சேதத்தினால் உருவாகிறது இது மரபணுக்கள் மூலம் அடுத்த சந்ததியினருக்கும் அனுப்பப்படுகிறது. இது புகைத்தல் போன்ற வெளிகாரணிகளாலும் ஏற்படுகிறது. புற்றுநோய் என்பது ஒழுங்கற்ற கட்டுபாடில்லாத உயிரணுக்களின் பெருக்கத்தை குறிக்கின்றது. அது அருகில் உள்ள திசுக்களையும் அழிக்கின்றது.
பொதுவாக புற்றுநோய் கட்டிகளை உருவாக்குகின்றது. அவை இரண்டு வகைப்படும்.
1. தொற்றிப்படரும் வகை
2. நோயில்லா கட்டிகள்
சார்கோமா: இவை இணைப்பு திசுக்களான தசை மற்றும் எலும்பிலிருந்து உருவாகின்றன. இது குறைந்த வயதுடையவர்களில் அதிகம் காணப்படுகின்றது.
கார்சினோமா: இது முதியவர்களில் புறத்தோல் உயிரணுக்களில் ஏற்படக் கூடியது. இவை நுரையீரல், மார்பகம், பெருங்கடலில் ஏற்ப்படக்கூடியது.
இரத்த புற்றுநோய்: இது இரத்தம் அல்லது இரத்தம் உற்பத்தியாகும் உறுப்புகளில் ஏற்படக்கூடிய புற்றுநோயாகும்.
நிணநீர் சுரப்பி புற்றுநோய் : இது நிணநீர் மண்டலத்தின் செயல்பாடுகளை தாக்கவல்லது. நிணநீர் மண்டலம் நாளங்கள் மற்றும் புறத்தொற்றிலிருந்து காக்கவல்லது.

மேலும் விவரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்

புற்றுநோய்கான மரபணு அடிப்படை மற்றும் புற்றுநோயினால் ஏற்படும் விளைவுகள்
புற்றுநோயின் அறிகுறிகள் மற்றும் புற்றுநோய் ஏற்படுவதற்கான/ தோன்றுவதற்கான கோட்பாடுகள்
புற்றுநோய் ஆய்வுகள், சிகிச்சை மற்றும் உணவு
புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் உணவுகள் மற்றும் புற்றுநோய் தடுப்பதற்கான ஆலோசனைகள்
 
ஆதாரம்
www.extension.missouri.edu/hesfn/cancer/CANCERRevised.PPT
http://extension.tox.ncsu.edu/images/part3_cancer.gif
http://medicineworld.org/images/blogs/2-2008/colon-cancer-7790.jpg
http://www.in.gov/spd/images/stopsmoking.jpg
http://www.phac-aspc.gc.ca/pau-uap/fitness/gfx_olderadults/oldersplash.gif
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015