தவேப வேளாண் இணைய தளம் :: ஊட்டச்சத்து :: பிற நோய்கள்

பெருந்தமனியில் தடிப்பு

வயது அதிகரிக்கும் போது கரோனரி தமனி உள்ளிட்ட இரத்த நாளங்களில் கொழுப்பு படிந்து நாளடைவில் இரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படுகிறது. படிப்படியாக சுருக்கமடைவதால் இந்த நிகழ்முறை  பெருந்தமனி தடிப்பு என்று அழைக்கப்படுகிறது.

பெண்களை விட ஆண்களுக்கு மாரடைப்பின் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.


 காரணிகள்:
  • சிகரெட் புகைத்தல்
  • நீரிழிவு
  • உயர் இரத்த அழுத்தம்
  • அதிக எடை
  • உயர் கொழுப்பு, மற்றும்  HDL கொழுப்பின் அளவு குறைதல்
  • உடல்பயிற்சி இல்லாமை
  • பரம்பரையில் இதயநோய்
  • மன அழுத்தம், நாள்பட்ட கோபம் மற்றும் பதட்டம்

அறிகுறிகள்
பொதுவாக மூச்சு திணறல் மற்றும் இறுக்கத்துடன் கூடிய  நெஞ்சு வலி ஏற்படலாம். வியர்வை, குமட்டல் மற்றும்  மயக்கம் போன்றவையும் அறிகுறிகளாக இருக்கலாம். நெஞ்சு வலி முன் அல்லது நெஞ்சுகூட்டிற்கு பின்னால் தோன்றி கழுத்து அல்லது இடது கையிற்கு செல்லலாம்.

நோய் கண்டறிதல்
எலக்ட்ரோகார்டியோகிராம்
ஈசிஜி
கரோனரி ஆஞ்சியோகிராம்

சிகிச்சை
மாரடைப்பு ஏற்பட்டால்  உடனடி மருத்துவம் தேவைப்படும். மாரடைப்பு ஏற்பட்ட முதல் சில நிமிடங்கள் மிகவும் முக்கியமானவை. ஆரம்பகட்டத்தில் மருந்துகள் கொண்டு தமனிகள் இரத்த உறைவுகளை  கரைக்கலாம். இரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால் மருந்துகள் கொடுத்து குறைக்கலாம்.

தடுக்கும் வழிமுறைகள்:

வைட்டமின்கள் ஏ, சி ,இ மற்றும் பீட்டா கரோட்டின்  குறைபாடுகள்  இதய நோயுடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது. இந்த சத்துக்கள் அனைத்தும் இதய நன்மை என்று ஆக்ஸிஜனேற்ற விளைவுகள் மற்றும் பிற பண்புகளை கொண்டது.

வைட்டமின் சி: வைட்டமின் சி இரத்த நாள நெகிழ்வு மற்றும் தமனிகளிலில் சுழற்சி மேம்படுத்தக்கூடியது.

போலேட், வைட்டமின் B6 மற்றும் வைட்டமின் பி 12: இரத்தில் ஹோமோசைஸ்டீனில்  இனப்படும் அமினோ அமிலத்தின் அளவு கூடுவதற்கும் பி வைட்டமின்கள் போலேட், B6 உள்ள குறைபாடுகளுக்கும் தொடர்பு உள்ளதாக ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

வைட்டமின் சி: வைட்டமின் சி இரத்த நாள நெகிழ்வு மற்றும் தமனிகளிலில் சுழற்சி மேம்படுத்தக்கூடியது.

போலேட், வைட்டமின் B6 மற்றும் வைட்டமின் பி 12: இரத்தில் ஹோமோசைஸ்டீனில்  இனப்படும் அமினோ அமிலத்தின் அளவு கூடுவதற்கும் பி வைட்டமின்கள் போலேட், B6 உள்ள குறைபாடுகளுக்கும் தொடர்பு உள்ளதாக ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.  இரத்தில் உயர்ந்த ஹோமோசைஸ்டீனில் அளவு தமனி தடிப்பிற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

வைட்டமின் பி 12 மற்றும் போலேட் இரத்தத்தில் தேவையான அளவு இருக்கும்போது   இரத்தில் ஹோமோசைஸ்டீனில் அளவை குறைத்து இதயத்தை பாதுகாக்கிறது. 

வைட்டமின் B3, நியாஸின் (வைட்டமின் B3) ஆரோக்கியமற்ற கொழுப்பு அளவைக் குறைக்க பயன்படுகிறது

கரோட்டினாய்டுகள் மற்றும் இதய பாதுகாப்பு: மாரடைப்பு அபாயத்தை குறைக்கும் பீட்டா கரோட்டின், லைகோபீன் மற்றும் பிற கரோட்டினாய்டுகள் கொண்ட பழங்க மற்றும் காய்கறிகளை அதிகம் உட்கொள்ளலாம்.

பைத்தோகெமிக்கல்கள் மற்றும் இதயத்தை பாதுகாப்பு:  கருப்பு மற்றும் பச்சை தேயிலை, வெங்காயம், சிவப்பு ஒயின் அல்லது சிவப்பு திராட்சை சாறு, ஆப்பிள் காணப்படும் ஃபிளேவனோயட்டுகள் கொழு[பினால் ஏற்படும் பாதிப்புகளை தடுத்து இரத்த உறைதலை தடுக்கிறது

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள்| தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015