தவேப வேளாண் இணைய தளம் :: ஊட்டச்சத்து :: பிற நோய்கள்

கரோனரி இதய நோய்

கரோனரி இதய நோய் (CHD) என்பது இரத்தம் மற்றும் ஆக்சிஜன் வழங்கும்   இரத்த நாளங்கள் (கரோனரி தமனி) சுருக்கமடைவதாகும். கரோனரி நோய் பொதுவாக கொழுப்பு நிறைந்த பொருள் மற்றும் சேர்மத்தின் காரணமாக (பெருந்தமனியில் தடிப்பு) உருவாக்கப்படுவதன் இருந்து விளைகிறது.

கரோனரி தமனிகளில் அடைப்பு ஏற்படுபடிவதால் இரத்த வரவு குறைந்தோ அல்லது நின்றுபோகும் இதனால்  நெஞ்சு வலி (ஆன்ஜினா), மூச்சு திணறல், மாரடைப்பு, அல்லது மற்ற அறிகுறிகள் தென்படும்.

    காரணங்கள்
    • பரம்பரையில் இதய நோய் பாதிப்பு இருந்தால்  (குறிப்பாக முன் வயது 50)
    • பெண்களை விட ஆண்களை அதிகமாக பாதிக்கும்.
    • வயது (65 மற்றும் அதிகமான)
    • புகையிலை/ புகைத்தல்
    • உயர் இரத்த அழுத்தம்
    • நீரிழிவு
    • அதிக கொழுப்பின் அளவு(குறிப்பாக உயர் LDL  கொழுப்பு மற்றும் குறைந்த HDL கொழுப்பு)
    • உடற்பயிற்சி இல்லாமை
    • உடல் பருமன்
    • உயர் இரத்த ஹோமோசைஸ்டீன் அளவு
    • பெண்கள் மாதவிடாய் நிறுத்தம்

அறிகுறிகள்

இதய நோய் தொடர்புடைய அறிகுறிகள் கீழ்கண்ட அறிகுறிகள் மூலம் கண்டறியலாம். ஆனால் இது எந்த குறிப்பிடத்தக்க அறிகுறிகள் இல்லாமல் இருக்க முடியும்.

மார்பு வலி (ஆன்ஜினா) - இது பொதுவான அறிகுறி ஆகும். இதயத்திற்கு தேவையான இரத்தம் அல்லது ஆக்சிஜன் கிடைக்காத  போது நெஞ்சுவலி ஏற்படும். வலியின் தீவிரம் நபருக்கு நபர் வேறுபடும்.

இதயத்திலிருந்தி உடல் பாகங்களுக்கு இரத்தம் செல்லாத போது மூச்சுதினறல் மற்றும் கால்களில் வீக்கம் ஏற்படலாம்.

 

 

 

 


 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள்| தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015