இரத்த அழுத்தம்
இரத்த அழுத்தம் என்பது இரத்தத்தை தமனிகளின் சுவர்களில் தள்ளும் சக்தி ஆகும். இதயம் துடிக்கும் ஒவ்வொரு முறையும் இரத்த நாளங்களில் இரத்தத்தை ஏற்றுகிறது.இந்த நிலையில் இரத்த அழுத்தம் அதிகமாக இருப்பது சிஸ்டாலிக் அழுத்தம் என்று அழைக்கப்படுகிறது. இரண்டு துடிப்பிற்கு நடுவே இதயம் ஓய்வு நிலையில் இருப்பது டயஸ்டாலிக் இதனை பாதரச மில்லிமீட்டர் கொண்டு அளவிடப்படுகிறது.
உயர் இரத்த அழுத்தம் (ஹைபெர்டென்சன்)
உயர் இரத்த அழுத்தம் என்பது மனிதனின் இரத்த அழுத்தம் 140 mm Hg க்கு சமமாகவோ அல்லது அதிகமாகவோ சிஸ்டாலிக் அழுத்தம் இருப்பது மற்றும் 90 mm Hg க்கு சமமாகவோ அல்லது அதிகமாகவோ டயஸ்டாலிக் அழுத்தம் இருக்கும்.மனிதனின் சாதாரண இரத்த அழுத்தம் 120/80 mm Hg.இதில் 120 லிருந்து 139 mm Hg சிஸ்டாலிக் அல்லது 80 லிருந்து 89 mm Hg வரை உள்ள டயஸ்டாலிக் இரத்த அழுத்தமானது முன் உயர் இரத்த அழுத்தம் ஆகும்.
அறிகுறிகள்
ஆரம்ப நிலையில் உயர் இரத்த அழுத்தம் மந்தமான தலைவலி, மயக்கம் அல்லது ஒரு சில நேரங்களில் மூக்கில் இரத்தக் கசிவுகள் இருக்கலாம்.
காரணங்கள்
90 முதல் 95 வீத உயர் இரத்த அழுத்தமானது எந்த ஒரு அடையாள காரணமும் இருக்காது . இந்தவகையான இரத்த அழுத்தம் முதன்மை இரத்த அழுத்தம் என்றும் இந்த வகை உயர் இரத்த அழுத்தம் படிப்படியாக உயர் இரத்த அழுத்தம் உருவாக முனைகிறது. 5 சதவீதம் 10 சதவீத உயர் இரத்த அழுத்தம் அடிப்படை நிலைகளில் ஏற்படுகிறது. இந்த வகை உயர் இரத்த அழுத்தம் இரண்டாம் நிலை உயர் இரத்த அழுத்தம் என்றும் இவை திடுமென்று பிரதானமான நிலையயை விட உயர் இரத்த அழுத்தம் ஏற்படுத்த முனைகிறது.
சிறுநீரக கோளாறுகள், அட்ரினல் சுரப்பி கட்டிகள்அல்லது சில இதய கோளாறுகள் போன்ற பல்வேறு நிபந்தனைகளால் இரண்டாம் நிலை உயர் இரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஒருசில பிறப்பு கட்டுப்பாடு மாத்திரைகள், குளிர் வைத்தியம், பிறவியில் இதயதில் கோளாறுகளாலும் ஏற்படுகிறது மற்றும் வலி நிவாரணி, சில பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் போன்றவை இரண்டாம் நிலை உயர் இரத்த அழுத்ததை ஏற்படுத்தலாம். பல்வேறு சட்டவிரோத மருந்துகள் மற்றும் கோகோயின் உள்ளிட்டவைகளால் இரத்த அழுத்தம் அதிகரிக்க செய்யும். |
|
|
ஆபத்து காரணிகள்
உயர் இரத்த அழுத்தம் தோன்றுவதற்கான காரணிகள்:
|
உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துதல்
-
புகைபிடித்தலை நிறுத்த வேண்டும்.
-
உடல் எடையை பராமரிக்க வேண்டும்.
-
உணவில் சோடியத்தின் அளவை குறைத்து கொள்ள வேண்டும். குறைந்த சோடியம் உணவுகள் (<2 கிராம் / நாள் விட) உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த பரிந்துரைக்கப்படுகின்றன. கரையக்கூடிய நார்சத்து உணவுகளான பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
-
அதிக கொழுப்பு உணவுகளை தவிர்க்க வேண்டும்.
-
காபி மற்றும் சோடா போன்றவற்றை தவிர்க்கவும்.
-
அதிகப்படியான மது குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
-
தொடர்ந்து முறையாக உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
-
மன அழுத்தத்தை குறைத்தல் மற்றும் வேலைக்கு பிறகு ஓய்வெடுப்பது நல்லது.
-
மருத்துவரின் ஆலோசனைப்படி பின்பற்ற வேண்டும்.
|
பிரச்சனைகள்:
தமனி சுவர்களில் அதிகப்படியான அழுத்தம் ஏற்பட்டால் முக்கிய உறுப்புகளுக்கு சேதமடையும். இரத்த அழுத்தம் அதிகமாகவும் கட்டுப்பாடற்று நீண்டநாட்கள் இருப்பின் பாதிப்பு அதிகம் ஏற்படும்.
கட்டுப்பாடற்ற உயர் இரத்த அழுத்தமானது:
- தமனிகளில் பாதிப்பு அதிகம் இருப்பின் இரத்த குழாயானது தடித்தும் பருமனுடனும் காணப்படு ம் (பெருந்தமனி தடிப்பு) இதனால் மாரடைப்பு அல்லது மற்ற சிக்கல்கள் ஏற்படலாம். தமனிகளில், இதனால் இரத்த நாளங்களில் வீக்கம் (நாள நெளிவு) ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
- 2. இதய செயலிழப்பு உயர் அழுத்ததில் இரத்தத்தை நாளங்கள் இரத்தத்தை இதயம் அனுப்பும்போது இதய தசை தடித்தும் இதய செயலிழப்பும் ஏற்படலாம்.
- 3. இரத்தத்தை நாளங்களில் அடைப்பு அல்லது மூளைக்கு செல்லும் இரத்த நாளங்களில் இரத்தம் தடுக்கப்படும் போது பக்கவாதம் ஏற்படலாம்.
- சிறுநீரகங்களில் இரத்த நாளங்கள் பலவீனமாக அல்ல்து குறுகியதாக காணப்படும் - இதனை உறுப்புகளிலில் ஏற்படாமல் தடுக்க முடியும்.
- கண்களில் தடித்த, குறுகி அல்லது கிழிந்த இரத்த நாளங்களால் பார்வை இழப்பு போன்றவை ஏற்படலாம்.
- வளர்சிதை மாற்ற நோய்க்குறி
- அறிவாற்றல் சம்பந்தப்பட்ட மாற்றங்களும் மற்றும் முதுமை போன்றவை உயர் இரத்த அழுத்தம் கொண்ட மக்களில் மிகவும் பொதுவானதாக காணப்படும்.
உணவுத்திட்ட மாற்றங்கள்
நோக்கம்
- போதுமான ஊட்டச்சத்து எடுத்துகொள்ள வேண்டும்.
- சோடியம் நிறைந்த உணவுகளை குறைத்து கொள்ள வேண்டும்.
- அதிகமான உடல் எடையை படிப்படியாக குறைத்தும் உடல் எடையை நல்ல நிலையில் பராமரிக்கவேண்டும்.
- உடலுக்கு தேவையான அளவு கொழுப்பினை பொருத்து உட்கொள்ளும் கொழுப்பு உணவுபொருட்களை குறைத்து கொள்ளலாம்.
ஆற்றல்: தனிநபர்கள் உடல் எடை அதிகமாக இருப்பின்ஆற்றலை குறைத்து கொள்ள வேண்டும். கூட சாதாரண எடையுடைய நபர்களும் ஆற்றல் அளவை சிறிய குறைப்பது பயன்தரும்.
புரதங்கள்: ஒரு சாதாரண புரதம் உட்கொள்ளலாம். அதிக அளவு புரதம் கொண்ட உணவை உட்கொள்வதை தவிர்க்கவும், இறைச்சியில் கொழுப்பு மற்றும் சோடியம் அதிகமிருப்பதால் தவிர்க்கப்பட வேண்டும்.
கொழுப்பு: குறைந்த ஆற்றல் கொண்ட உணவுகளில் அடிப்படையில் உணவில் குறைந்த கொழுப்பு இருக்கும், மேலும் கொழுப்பின் அளவை சரிபார்த்து கொள்ளவேண்டும். சோயா எண்ணெய், நிலக்கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், சோளம் எண்ணெய் போன்ற தாவர பொருட்களிலும் கொழுப்பு, வெண்ணெய், நெய் போன்றவைகலையும் உட்கொள்வதை குறைத்து கொள்ளவேண்டும்.
கார்போஹைட்ரேட்டுகள்: எளிய சர்க்கரையை விட சிக்கலான கார்போஹைட்ரேட் , ஸ்டார்ச் மற்றும் நார்ச்சத்து போன்றவற்றை போன்ற அதிகம் உட்கொள்ள வேண்டும்.
சோடியம்: எடை குறைப்பதுடன் சேர்ந்து சோடியம் உட்கொள்வதை தடுப்பதனால் மிதமானது முதல் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் திறன் உள்ளது. உப்பு சமயலில் பயன்படுத்துவதில் குறைத்துகொள்ள வேண்டும்.
பிற தாது உப்புக்கள்: பொட்டாசியம், மற்றும் கால்சியம் உயர் இரத்த அழுத்ததில் தொடர்புடைய முக்கியமானது. போதுமான பொட்டாசியம் உட்கொள்வது சிகிச்சைக்கான முக்கிய பகுதியாக உள்ளது. பால், பழங்கள் மற்றும் காய்கறிகளில் பொட்டாசியம் நிறைந்த உணவுகளாக காணப்படுகிறது.இந்த உணவுகள் மூலம் தேவையான அளவு பொட்டசியம் பெறமுடியும். கால்சியம் உயர் இரத்த அழுத்தம் சிகிச்சையளிப்பதில் பயனுள்ளதாக உள்ளது. கால்சியம் நிறைந்த உணவுகள் சில பால், கீரைகள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றில் இருக்கிறது.
உணவில் சோடியம் கட்டுப்பாடு
நான்கு நிலைகளில் உணவில் சோடியம் கட்டுபடுத்த ஆலோசனை:
- சாதாரண உணவில் சோடியம் (3 கிராம் 4)
- லேசான சோடியம் கட்டுப்பாடு (2 கிராம் 3)
- இயல்பான சோடியம் கட்டுப்பாடு (1 கிராம்)
- கண்டிப்பு சோடியம் கட்டுப்பாடு (500 மி.கி.)
- கடுமையான சோடியம் கட்டுப்பாடு (200 மி.கி).
- முதல் மூன்றும் மிக பொதுவாக பயன்படுத்தப்படுகிறது.
உணவுகள் கொழுப்பின் அளவு
வ.எண் |
உணவுப்பொருள் |
கொழுப்பின் அளவு (மிகி / 100 சமையல் பகுதி) |
1 |
மாட்டிறைச்சி |
70 |
2 |
வெண்ணெய் |
250 |
3 |
பாலாடைக்கட்டி |
100 |
4 |
பன்னீர் |
15 |
5 |
சீஸ், கிரீம் |
120 |
6 |
பரவிய சீஸ் |
65 |
7 |
சிக்கன், தோலுடன் |
100 |
8 |
சிக்கன், தோல் இன்றி |
60 |
9 |
நண்டு |
125 |
10 |
முட்டை, முழு |
550 |
11 |
முட்டை,வெள்ளை |
- |
12 |
முட்டை, மஞ்சள் கரு |
1,500 |
13 |
மீன் |
70 |
14 |
சிறுநீரகம் |
375 |
15 |
லாம்ப் |
70 |
16 |
கல்லீரல் |
300 |
17 |
கடல் நண்டு |
200 |
18 |
பால் |
11 |
19 |
பாலாடை எடுக்கபட்ட பால் |
3 |
20 |
பால் பவுடர் |
85 |
21 |
ஆட்டிறைச்சி |
65 |
22 |
பன்றி |
70 |
23 |
இறால் |
125 |
|