தவேப வேளாண் இணைய தளம் :: ஊட்டச்சத்து

குறைந்த இரத்த அழுத்தம்

மனிதனின் இயல்பான இரத்த அழுத்தம்120/80 mm Hg இதில் 120 சிஸ்டாலிக் அழுத்தம் மற்றும் 80 டயஸ்டாலிக் அழுத்தமாகும். குறைந்த இரத்த அழுத்தம் என்பது மனிதனின் இயல்பான இரத்த அழுத்தத்தைவிட குறைவாக இருக்கும். இதனால் தலைசுற்றுதல் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.  இரத்த அழுத்தம் மிகவும் குறைவாக இருக்கும் போது இதயம், மூளை மற்றும் பிற முக்கிய உறுப்புகளுக்கு போதிய இரத்த ஓட்டம் குறையும்.

அறிகுறிகள்
குறைந்த இரத்த அழுத்தம் அறிகுறிகளாக:

  • சோர்வு
  • பொது பலவீனம்
  • இலேசாக தலை வலி மற்றும் மயக்கம்
  • மங்கலான பார்வை
  • தலைச்சுற்றுதல்
  • படபடப்பு
  • குழப்பம்
  • குமட்டல்
  • நினைவு தற்காலிக இழப்பு.
காரணங்கள்

குறைந்த இரத்த அழுத்தம் ஏற்பட மற்ற காரணங்கள் பின்வருமாறு:

குறைந்த இரத்த அழுத்தமனது பின்வரும் மருந்துகள்  காரணங்களலும் ஏற்படுகிறது

  • அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள்
  • எதிர்ப்பு பதட்டத்தை குறைக்க எடுக்கும் மருந்துகள்
  • உயர் இரத்த அழுத்தம் சிகிச்சை
  • நீர்ப்பெருக்கிகள்
  • இதயத்திற்கான மருந்துகள்
  • சில மனத் தளர்ச்சி எதிர்ப்பி
  • போதையூட்டும் நிவாரணிகள்
  • ஆல்கஹால்
  • நீர்ப்போக்கு
  • இதய செயலிழப்பு
  • மாரடைப்பு
  • இதய துடிப்பு மாற்றங்கள் (குருதி)
  • மயக்கமடைதல்
  • வாழ்க்கையை அச்சுறுத்தும் ஒவ்வாமை காரணமாக
  • அதிர்ச்சி (கடுமையான நோய், பக்கவாதம், கடும் ஒவ்வாமை, முக்கிய அதிர்வு அல்லது மாரடைப்பால்)
  • மேம்பட்ட நீரிழிவு
மற்றொரு பொதுவான  குறைந்த இரத்த அழுத்த வகையானது   உடல் நிலை திடீர் மாற்றம் ஏற்படும் நிகழ்வில் தோன்றுவது.


நோய் கண்டறிதல்


இரத்த அழுத்தம் என்பது இரத்தத்தை தமனிகளின் சுவர்களில்  தள்ளும் சக்தி ஆகும்.  இதயம் துடிக்கும் ஒவ்வொரு முறையும் இரத்த நாளங்களில் இரத்தத்தை ஏற்றுகிறது.இந்த நிலையில் இரத்த அழுத்தம் அதிகமாக இருப்பது  சிஸ்டாலிக் அழுத்தம் என்று அழைக்கப்படுகிறது.

இரண்டு துடிப்பிற்கு நடுவே இதயம் ஓய்வு நிலையில் இருப்பது டயஸ்டாலிக்  அழுத்தம் என்று அழைக்கப்படுகிறது  இதனை பாதரச மில்லிமீட்டர் கொண்டு அளவிடப்படுகிறது.

 


 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள்| தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015