முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
தவேப வேளாண் இணைய தளம் :: ஊட்டச்சத்துக்களின் முக்கியத்துவம்

தனிமங்கள் மற்றும் உலோகங்கள்
நமது உடலின் எலும்புகளானது கால்சியம், மெக்னீசியம்,மற்றும் பாஸ்பரஸால் ஆனது. இரும்பு இரத்தத்தில் ஒரு முக்கிய  அங்கமாகும். துத்தநாகம், மாலிப்டினம், தாமிரம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற தனிமங்கள் உடலின் கட்டுமான பகுதியாக அல்லது என்சைம் அமைப்பு  செயல்பாட்டிற்கு முக்கியமாகும். . அயோடின் ஆனது ஹார்மோன் மற்றும் தைராக்ஸினில் ஒரு பகுதியாக உள்ளது. சோடியம், பொட்டாசியமானது செல்லின்  உள் மற்றும் வெளி அறைக்கு முக்கியமானது. குளோரைடு, பைகார்பனேட் மற்றும் கார்பனேட் போன்ற அயனிகள் உடலில் நீர் மற்றும் அமில கார சமநிலையில் வைக்க உதவுகிறது.

உலோகங்கள்
மனித உடல் நலத்துக்குத் தேவையான முக்கியமான உலோகங்களான துத்தநாகம், காப்பர், செலினியம், கோபால்ட், ஃப்ளோரைடு, மாங்கனீசு, குரோமியம், அயோடின் மற்றும் மாலிப்டினம். மற்ற  உலோக கூறுகளான ஆர்சனிக், நிக்கல், வெனாடியம், மற்றும் சிலிக்கான் ஆகும். மனிதர்களுக்கு தேவையான அடிப்படையில்  சில உலோகங்களான அயோடின், துத்தநாகம் , காப்பர், ஃபுளூரின், மாங்கனீஸ், குரோமியன்  உருவாக்கப்பட்டுள்ளன.

தனிமங்கள்
உடல் செயல்படுகள்
உணவு ஆதாரம் 
அனுமதிக்கப்படும் தினசரி அளவு
கால்சியம் எலும்புகள்  கடினத்தன்மை, பற்கள் வெளிர் நிறம், இயல்பான இதய ஒலி,   என்சைம்கள் செயல் பாட்டுதன்மை, செல்லின் ஊடுருவும் தன்மை திராம்பின் உருவாக்கம். பால், சீஸ் ஐஸ்கிரீம், பாலாடைக்கட்டி, டர்னிப், கொல்லார்ட், காலே, கடுகு, ப்ரோக்கோலி,இறால், சால்மன் குழந்தை: 360-540 மிகி
குழந்தைகள்: 800 மிகி
இளைஞர்கள்: 1,200 மிகி
ஆண்கள்: 800 மிகி
கர்பிணி பெண்கள்: 1,200மிகி
தாய்பாலூட்டும் பெண்கள்: 1,200 மிகி
குளோரின் கூடுதல் செல்லுலார் திரவம், இரைப்பைச்சாறு, அமில கார சமநிலை பராமரிக்கவும்,   சிவப்பு அணுக்களுள் குளோரைடு ,பைகார்பனேட் சென்றடையவும் தேவைப்படுகிறது. உப்பு குழந்தை: 275-1,200 மிகி
குழந்தைகள்: 500-2,775 மிகி
இளைஞர்கள்: 1,400-4,200 மிகி
பெரியவர்கள்: 1,700-5,100 மிகி
தினசரி உணவில் தேவை அதிகமாக கொண்டிருக்கிறது.
குரோமியம் இன்சுலின் குளுக்கோஸ் உடலில் ஏற்றுகொள்ள உதவுகிறது. குளுக்கோஸ் ஆக்ஸிஜனேற்றம், புரத தொகுப்பு, கொழுப்பு தூண்டல்கள் மற்றும் கொழுப்பின் தொகுப்பு, என்சைம்கள் செயல்படுத்தல் கல்லீரல், இறைச்சி, வெண்ணெய், முழு  தானியங்கள். குழந்தை:  0.01-0.06 மிகி
குழந்தைகள்: 0.02-0.20 மிகி
இளைஞர்கள்: 0.05-0.20 மிகி
பெரியவர்கள்: 0.05-0.20 மிகி
காப்பர் இன்சுலின் குளுக்கோஸ் உடலில் ஏற்றுகொள்ள உதவுகிறது. குளுக்கோஸ் ஆக்ஸிஜனேற்றம், புரத தொகுப்பு, கொழுப்பு தூண்டல்கள் மற்றும் கொழுப்பின் தொகுப்பு, என்சைம்கள் செயல்படுத்தல். கல்லீரல், இறைச்சி, வெண்ணெய்,  முழு தானியங்கள் குழந்தை: 0.01-0.06 மிகி
குழந்தைகள்: 1.0-2.5 மிகி
இளைஞர்கள்: 2.0-3.0 மிகி
பெரியவர்கள்: 2.0-3.0 மிகி
ஃப்ளூரின் பல் சிதைவினை குறைக்கிறது,  இளம் குழந்தைகளின் ஆஸ்டியோபோரோசிஸ் குறைப்பாட்டை குறைக்க உதவுகிறது. ஃப்ளூரிடியேடட் நீர்: 1ppm குழந்தை: 0.1-1.0 மிகி
குழந்தைகள்:0.5-2.5 மிகி
இளைஞர்கள்:1.5-2.5 மிகி
பெரியவர்கள்: 1.5-4.0 மிகி
அயோடின் டியோடோடைரோசின், டிரைடோதைரோனின், தைராக்ஸின் உருவாக்கத்திற்கு உதவுகிறது, ஆற்றல் வளர்சிதை மாற்ற விகிதத்தை கட்டுப்படுத்துகிறது. அயோடின் உப்பு, கடல் உணவுகள் குழந்தை: 40-50 மிகி
குழந்தைகள்: 70-120 மிகி
இளைஞர்கள்: 150 மிகி
பெரியவர்கள்: 150mg
கர்பிணி பெண்கள்: 175 மிகி
தாய்பாலூட்டும் பெண்கள்: 200 மிகி
இரும்புசத்து ஹீமோகுளோபின், மையோகுளோபின் உருவாக்கத்திற்கும், என்சைம் ஆக்ஸிஜனேற்றமான கேட்டலேஸ், சைட்டோக்ரோம், சாந்தீன் ஆக்சிடேஸ் கல்லீரல்,  இறைச்சி, கோழி, முட்டை மஞ்சள் கரு, முழு தானிய ரொட்டி, சிறு தானியங்களான கம்பு மற்றும் கேழ்வரகு, பச்சை காய்கறிகள்,   பருப்பு வகைகள்,  கருப்பஞ்சாறு, பீச், ஆப்ரிகாட், கொடிமுந்திரி, திராட்சை குழந்தை : 10-15 மிகி
குழந்தைகள்: 10-15  மிகி
இளைஞர்கள்: 18 மிகி
ஆண்கள்: 10 மிகி
பெண்கள்: 18 மிகி
கர்பிணி பெண்கள்:  18+  மிகி
தாய்பாலூட்டும் பெண்கள்: 200 மிகி
மெக்னீசியம் எலும்பு, பற்கள் வளர்ச்சி, தசைகளில் கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றத்திற்கான என்சைம்களை செயல்படுத்துகிறது மற்றும் நரம்புகளில் சீரமைக்க உதவுகிறது. முழு  தானியங்கள், கொட்டைகள், பருப்பு வகைகள், இறைச்சி, பால், பச்சை இலை காய்கறிகள் குழந்தை:  50-70 மிகி
குழந்தைகள்: 150-250 மிகி
பெண்கள்: 300 மிகி
ஆண்கள்: 350 மிகி
கர்பிணி மற்றும் தாய்ப்பாலூட்டும் பெண்கள்: 450 மிகி
மாங்கனீசு பல என்சைம்களை செயல்படுத்துகிறது, கார்போஹைட்ரேட் ஆக்ஸிஜனேற்றம், யூரியா உருவாக்கம், புரதம் நீர்ப்பகுபாய்வு,  எலும்பு உருவாக்கம் கொட்டைகள், முழு தானியங்கள், பச்சை காய்கறிகள் குழந்தை: 0.5-1.0 மிகி
குழந்தைகள்: 1.0-3.0 மிகி
இளைஞர்கள்: 2.5-5.0 மிகி
பெரியவர்கள்: 2.5-5.0 மிகி
மாலிப்டினம் ஃப்ளேவோபுரத என்சைம்கள் செயல்பாட்டிற்கு உதவுகிறது, சாந்தீன் ஆக்சிடேஸில் இருக்கிறது.  இறைச்சி, பருப்புகள், முழு தானியங்கள் குழந்தை: 0.03-0.08 மிகி
குழந்தைகள்:  0.05-0.31 மிகி
இளைஞர்கள் 0.15-0.50 மிகி
பெரியவர்கள் 0.15-0.50 மிகி
பாஸ்பரஸ் எலும்புகள்  அமைப்பு, பல் செல்களில் ஊடுறுவும் திறன் மேம்படுத்தவும்,
கொழுப்பு மற்றும்கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றத்திற்கும் உதவுகிறது. சர்க்கரை-பாஸ்பேடில் டி.என்.ஏ மற்றும் ஆர்.என்.ஏ-வில் ATP  சேமிப்பு மற்றும் வெளியீடு. பாஸ்போலிப்பிடுகள் கொழுப்பில் சென்றடையவும்,  நம் உடலில்  அமில கார நிலையை சமநிலை அடைய செய்யவும் உதவுகிறது.
பால், வெண்ணெய், முட்டை, இறைச்சி, மீன், கோழி, தானியங்கள், கொட்டைகள் கைக்குழந்தைகள் : 200-400  மிகி
குழந்தைகள்: 800 மிகி
பெரியவர்கள்: 800 மிகி
கர்பிணி  பெண்கள்: 1,200 மிகி
தாய்ப்பாலூட்டும் பெண்கள்: 1,200 மிகி
பொட்டாசியம் செல்லினுள் திரவ சமநிலைகளான, சவ்வூடுபரவுதலுக்கான அழுத்த சமநிலை, நீர் சமநிலை, அமில கார நிலையை சமநிலை, நரம்பு எரிச்சல் மற்றும் தசை சுருக்கம், இயல்பான இதய துடிப்பு புரதம் சம நிலையில் கிடைக்க உதவுகிறது இறைச்சி, மீன், தானியங்கள், பழங்கள் மற்றும்  காய்கறிகள் குழந்தை: 350-1,275 மிகி
குழந்தைகள்: 550-3,000 மிகி
இளைஞர்கள்: 1,525-4,575 மிகி
பெரியவர்கள்: 1,875-5,625 மிகி
செலினியம் குளுடாதையோனின் ஆக்சிடேஸ்களில் ஆக்சிஜனேற்றத் தடுப்பான் இறைச்சி மற்றும் கடல் உணவுகள்  கைகுழந்தைகள்: 0.01-0.06 மிகி
குழந்தைகள்: 0.02-0.20 மிகி
இளைஞர்கள்: 0.05-0.20 மிகி
பெரியவர்கள்: 10.05-0.20 மிகி
சோடியம் செல்லுக்கு வெளியே  சவ்வூடுபரவுதலுக்கான அழுத்த சமநிலை, நீர் சமநிலை, அமில கார நிலையை சமநிலை, நரம்பு எரிச்சல் மற்றும் தசை சுருக்கம், இயல்பான இதய துடிப்பு புரதம் சம நிலையில் கிடைக்க உதவுகிறது உப்பு சேர்க்கப்பட்ட உணவுகள், பால், இறைச்சி, மீன், கோழி கைக்குழந்தை: 115-750 மிகி
குழந்தைகள்: 325-1,800 மிகி
இளைஞர்கள்: 900-2,700 மிகி
பெரியவர்கள்: 1,100-3,300 மிகி
சல்பர் குருத்தெலும்பு, முடி, நகங்கள் ஆகியவற்றிற்கு தேவையான புரதங்கள் கட்டமைக்கவும், மெலனின், குளூடாதையோன், தையமின், பயோட்டின், கோஎன்சைம்  கட்டமைக்கவும், இன்சுலின் உயர் ஆற்றல் பெறவும்,  டிடாக்ஸிகேசனில் சல்பர் எதிர்வினைகளாக உதவுகிறது முட்டை, இறைச்சி, மீன், கோழி
பால், வெண்ணெய்,  கொட்டைகள்
 
துத்தநாகம் என்சைம்கள் , கார்பானிக் அன்ஹைட்ரேஸ், கார்பாக்ஸிபெப்டிடேஸ், லாக்டிக் டிஹைட்ரோஜெனேஸ் கட்டமைப்பிற்கு உதவுகிறது. கடல் உணவுகள், கல்லீரல், இறைச்சி, மீன், கோதுமை, ஈஸ்ட், காய்கறிகள் கைகுழந்தை: 3-5 மி.கி.
குழந்தைகள்: 10 மிகி
இளைஞர்கள்: 15மிகி
பெரியவர்கள்: 15 மிகி
கர்பிணி  பெண்கள்: 20 மிகி
தாய்ப்பாலூட்டும் பெண்கள்: 25 மிகி

ஆதாரம்:
Robinson,C.N and Lawler, M.R 16 Edition. Normal and Therapeutic Nutrition. Oxford and IBH Publishing Co, Delhi.

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015