தவேப வேளாண் இணைய தளம் :: ஊட்டச்சத்து :: ஆக்சிஜனேற்றத் தடுப்பான்கள்
ஆக்சிஜனேற்றத் தடுப்பான்கள்
ஆக்சிஜனேற்றத் தடுப்பான்கள் இயற்கையாகத் தோன்றும் வேதிப்பொருள் ஆகும். இவை நம் உடலில் வினையேற்றம் மற்றும் புறன் காரணிகளான எக்ஸ் கதிர்கள், புற ஊதா கதிர்கள் மற்றும் மாசுக்களால் ஏற்படக்கூடிய ஆக்சிஜன் முடிவுறா மூலக்கூறுகளின் கேடுகளை எதிர் கொள்ளவும் செய்கின்றது. ஆக்சிஜனேற்றத் தடுப்பான்கள் உடல் நலத்தை பேனவும் ஆரோக்கியத்திற்கும் மிகவும் இன்றியமையாததாகும்.  இது இயற்கை நம் உடலில் உள்ள நச்சுக்களை எதிர்த்து போராட நமக்களித்த வரமாகும்.

முடிவுறா மூலக்கூறுகளில் ஏற்பட்டுள்ள எலட்டிரான் குறைபாடுகள் உயிர் வழியேற்றத்திற்கு காரணமாகின்றன. இந்த மூலக்கூறுகள் மற்ற மூலக்கூறுகளைத்தாக்கி தனது இழந்த எலக்டிரானை தக்க வைத்து கொள்ள போராடுகின்றன. இவை உயிர் வழியேற்ற வினைகளாகும். இந்த சீரற்ற/ஒழுங்கற்ற மூலக்கூறுகளை சீர் செய்வதற்கென்றே நமது உடலும் ஆக்சிஜனேற்றத் தடுப்பான்களை உற்பத்தி செய்கின்றது.

முடிவுறா மூலக்கூறுகளை நமது உடலில் பாதிப்பு அல்லது திசுக்களை அழிக்கக்கூடியது. தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான முடிவுறா மூலக்கூறுகள்  உருவாகும்போது அல்லது கவனிக்காதபோது நீண்ட நாள் அல்லது சிதைகின்ற நோய்களை ஏற்படுத்தக்கூடும். நமது உடல் சில நேரங்களில் நுண்ணுயிரிகளை எதிர்கொள்ள ஆக்சிஜனேற்றத் தடுப்பான்களை உருவாக்குகிறது.

ஆக்சிஜனேற்றத் தடுப்பான்களின் முக்கிய கடமை முடிவுறா மூலக்கூறுகளை சமன் செய்தல் அல்லது நமது உடலுக்கு நமது உடலுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதை தடுப்பதாகும்.
பல்வேறு வகையான ஆக்சிஜனேற்ற தடுப்பான் உள்ள உணவுப் பொருட்களின் பட்டியல்

ஆக்சிஜனேற்ற தடுப்பான்

உணவுப் பொருட்கள்

ஏலியம், சல்பர் சேர்மங்கள் லீக், வெங்காயம், பூண்டு
ஆந்தோசயனிம் கத்தரிக்காய், திராட்சை, பெரி பழங்கள்
பீட்டா கரோட்டின் பூசணிக்காய், மாம்பழம், ஆட்ரிகாட், கேரட், பசலிக்கீரை, பார்சலி கீரை
கேட்டகின்ஸ் சிகப்பு ஒயின், தேநீர்
காப்பர் கடல் உணவுகள், மாமிசம், பால், கொட்டை வகைகள்,பயறு வகைகள்
கிரிப்டோ சாந்தின் மிளகு, சிகப்பு பூசணிக்காய், மாம்பழம்
பிலேவனாய்ட்ஸ் டீ, கிரீன் டீ, சிகப்பு வைன், புளிப்பான பழங்கள், வெங்காயம், ஆப்பிள்
இண்டோல்ஸ் முட்டைகோசு, பிராக்கோலி, காளிபிளவர்
லிக்னன்ஸ் எள்ளு, தவிடு, முழு தானியங்கள், காய்கறிகள்
லூட்டின் சோளம், கீரைகள்
லைக்கோபீன் தக்காள், இளஞ்சிவப்பு கிரேட் பழம், தர்பூசணி
மாங்கனீஸ் கடல் உணவு, மாமிசம், பால், கொட்டை வகைகள்
பாலிபீனால்ஸ் தைம், ஆரிகானோ
செலினியம் கடல் உணவு, ஆப்பிள், மாமிசம், முழு தானியங்கள்
வைட்டமின் சி ஆரஞ்சு, பெரி, கிவி, மாம்பழம், ப்ராக்கோலி, பசலி, மிளகு
வைட்டமின் இ தாவர எண்ணெய், கொட்டை வகைகள், விதைகள், முழுதானியங்கள்
சிங்க் கடல் உணவு, மாமிசம், பால், கொட்டை
விலங்கியல் இரசாயனங்கள் மாமிசம், மீன்

நன்மைகள்
பாதிக்கப்பட்ட மூலக்கூறுகளை சீர் செய்தல்: சில வகையான ஆக்சிஜனேற்ற தடுப்பான்கள் பாதிக்கப்பட்ட மூலக்கூறுகளுக்கு ஹைடிரஜன் அணுக்களை தானம் செய்து பாதிப்பிலிருந்து காக்கின்றது. இது டி.என்.ஏ போன்ற அதிமுக்கியமான மூலக்கூறுகளுக்கு இன்றியமையாததாகும்.
உலோக முடிவுறா மூலக்கூறுகள் உற்பத்தியை தடுத்தல்: சில ஆக்சிஜனேற்ற தடுப்பான்களுக்கு பாதரசம், ஆர்சனி போன்ற நச்சு உலோகங்களிலிருந்து உருவாகும் முடிவுறா மூலக்கூறுகளை சூழ்ந்து இரசாயன / வேதியல் எதிர்மறை ஏற்படாதவாறு காக்கின்றன. சில நீரில் கரையக்கூடிய ஆக்சிஜனேற்ற தடுப்பான்கள் நச்சு பொருட்களை சிறு நீர் வழியாக வெளியேற்றவும் செய்கின்றன.
பண்பக வெளிப்பாடு மற்றும் அக ஆக்சிஜனேற்ற தடுப்பான்கள் தூண்டுதல்:சிலவகையான  ஆக்சிஜனேற்ற தடுப்பான்கள் உடலின் பண்பகத்தை தூண்டுவதோடு எதிர்ப்பு சக்த்தியையும் அதிகரிக்கின்றது.
பாதுகாப்பு: பிலேவனாய்ட்ஸ் போன்ற ஆக்சிஜனேற்ற தடுப்பான்கள் டி.என்.ஏ சுற்று பாதுகாப்பு ஏற்படுத்தி முடிவுறா மூலக்கூறுகளிலிருந்து காக்கின்றன.
புற்றுநோய் திசுக்களை அழித்தல்: சிலவகையான ஆக்சிஜனேற்ற தடுப்பான்கள் புற்றுநோய்க்கு எதிரான பொருட்களை உருவாக்கி புற்றுநோய் திசுக்களை சுய அழியஸ் செய்கிறது.
ஆக்சிஜனேற்ற தடுப்பான்களால் ஏற்படும் மற்ற நன்மைகள்:
  • சிறுநீரக செயல்பாட்டிற்கு உதவுகிறது.
  • இனப்பெருக்கத்திறனை மேம்படுத்துகிறது.
  • பல் மற்றும் ஈறுகள் நலனை காக்கின்றது.
  • முதுமையடைவதை தள்ளிப்போடுகிறது.(ஆட்ரிகாட், பரங்கி, எலுமிச்சை, பாதாம், சூரியகாந்தி விதைகள்)
  • நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
  • நோய் எதிர்ப்பு மண்டலம் உடல் பாதுகாப்பிற்கு உதவுகிறது.
  • கல்லீரலை பாதுகாக்கின்றது.
  • எடை குறைக்க உதவுகிறது.
  • கண்பார்வையை சீராக்குகிறது.
  • ஆழ்ந்த தூக்கத்தை தூண்டுகிறது.
  • ஜீரணத்திற்கு உதவுகிறது.
  • சுவாசமண்டலத்தை பாதுகாக்கிறது.
  • கொழுப்புச்சத்தை குறைக்கிறது.
  • புற்றுநோய்க்கு எதிராக செயல்படுகிறது.
ஆதாரம் :
http://en.wikipedia.org/wiki/Antioxidant
http://www.nlm.nih.gov/medlineplus/antioxidants.html
http://www.mydr.com.au/nutrition-weight/antioxidants-their-role-in-health
http://www.powerhealth.gr/en/antioxidants/
 
 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள்| தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015