சூரிய கதிர்களின் தாக்கம் கோடையில் அதிகபட்சமாக இருக்கும். வெயிலின் தாக்கத்தை குளிர்ந்த பானங்களால் குறைக்க முடியும். சாதாரண குளிர்பானங்களை விட நமது பாரம்பரிய உணவில் உள்ள புத்துணர்ச்சி, சக்தி ஊட்டக்கூடிய ஆரோக்கியமான குளிர்பானங்கள் சிறப்பு வாய்ந்ததாக கருப்படுகிறது. நீரிழப்பு நேராமல் காக்கக்கூடிய இந்திய பானங்களின் பட்டியல் பின்வருமாறு:
மசாலா மோர்:
தயிர், தண்ணீர் மற்றும் மசாலா பொருட்கள் சேர்த்து மண்பானையில் நன்றாக கலந்து நுரையுடன் பரிமாறப்படும் சுவையான பானமாகும். தாகத்தை தீர்ப்பதோடு ஜீரணத்திற்கு சிறந்ததாகும்.
லஸ்ஸி(இனிப்பு மோர்):
இது புகழ்பெற்ற வட இந்திய இனிப்பு பானமாகும். புதிய புளிக்காத தயிர் கொண்டு செய்யப்படும் இந்த பானம் சில சமயம் உப்பு சேர்த்தும் பரிமாரப்படும். புரதச்சத்து மிகுந்த இந்த பானம் உடலுக்கு குளிர்ச்சி தரும் மசாலா பொருட்களை சேர்த்தும் பரிமாரப்படும். பால் போன்று அடர்த்தியான திரவமான லஸ்ஸி மோரை விட கெட்டியானது.
எலுமிச்சை நீர்:
எளிதாகக் செய்யக்கூடிய புத்துணர்ச்சி தரும் பானம் மிகவும் பிரசித்தமானது. வைட்டமின் சி, பி மற்றும் தாது உப்புக்கள் நிறைந்த பானம் சிறந்த சக்தி அளிக்கக்கூடிதாகும்.
சீரகம் கலந்த நீர்:
சீரகம் மற்றும் நீர் கலந்த பானம் குளிர்ச்சி தன்மைக்காக புகழ் பெற்றது. இது பசி தூண்டக்கூடியதாகும். இது புளிப்பு மற்றும் காரச்சுவையுடையதாகும். இதில் மிளகு, புதினா மற்றும் சீரகம் சேர்க்கப்படும்.
தண்டை:
தண்டை விழா காலத்தில் செய்யப்படும் பிரத்யேகமான பானமாகும். இது பால், பாதாம், பன்னீர், ஏலக்காய் பொடி மற்றும் குங்குமப்பூ கொண்டு செய்யப்படுகிறது. இது சிறந்த குளிர்ச்சி தரும் தன்மையுடையது. |
|
|