organic farming
அங்கக வேளாண்மை :: பூச்சி மேலாண்மை
1 வேளாண்மை பயிர்களின் பூச்சி மேலாண்மை
1 தோட்டக்கலைப் பயிர்களின் பூச்சி மேலாண்மை
1 அங்கக சூழ்நிலை அமைப்பின் பூச்சி மேலாண்மை

வேளாண்மை பயிர்களின் பூச்சி மேலாண்மை

நெல் பருத்தி கரும்பு   பச்சைப்பயிறு துவரை உளுந்து கம்பு சோளம்
rice cotton sugarcane green gram red gram black gram pearl millet sorfhum

நெல்லில் பூச்சிகள் :

பச்சை தத்துப்பூச்சி:
மேலாண்மை:

  • ஐ. ஆர் 50, சி ஆர் 1009, கோ 46, பட்டாம்பி 2 மற்றும் 18 போன்ற எதிர்ப்புத்திறனுள்ள இரகங்களைப் பயன்படுத்துதல்.
  • விளக்குக் கம்பத்தின் அருகில் நாற்றாங்கால் அமைப்பதை தடுத்தல்.
  • 20 சென்ட் நாற்றாங்காலுக்கு 12.5 கிலோ வேப்பபுண்ணாக்கினை இட வேண்டும்.
  • நாற்று நட்ட நாள் முதல் , 3 நாட்கள் வரை 2.5 சென்டி மீட்டர் அளவு நீரானது இருக்குமாறு பாதுகாக்க வேண்டும்.

பழுப்புஇலை தத்துப்பூச்சி:
மேலாண்மை:

  • பட்டாம்பி 33 &  21 , பையூர் 3 , கோ 42, ஆஷா, திவ்யா, அருணா, கர்நாடகா, கார்த்திகா, கிருஷ்ண வேணி போன்ற  எதிர்ப்புத்திறனுள்ள இரகங்களைப் பயன்படுத்துதல்.
  • நடவு வயலில் ஒவ்வொரு 2.5 மீட்டர் அகலத்திற்கு 30 சென்டி மீட்டர் இடைவெளி விடுதல்.
  • தேவைக்கேற்ப நீர் பாய்ச்சுதல்.
  • விளக்குப் பொறி வைத்து பூச்சிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துதல்.
  • 5 சதவிகித வேப்பங்கொட்டைச் சாறு (25 கிலோ / ஹெக்டர்) அல்லது 2 சதவிகித வேப்பஎண்ணெய் (10 லிட்டர் / ஹெக்டர்) தெளித்தல்.

வெண் முதுகு தத்துப் பூச்சி :
மேலாண்மை :

முட்டை ஒட்டுண்ணியான , அனாகிரஸ் எனும் பூச்சியின் முதிர்பூச்சி மற்றும் இளங்குஞ்சுகளை வயலில் விடுவிக்கலாம்.

மாவுப் பூச்சி:
மேலாண்மை:

  • நாற்று நடுவதற்கு முன்பாக வரப்புகளில் உள்ள புற்களையும், களைகளையும் அகற்ற வேண்டும்.
  • தாக்கப்பட்ட பயிர்களையும் சேர்த்து அழிக்க வேண்டும்.

நெல் கருநாவாய்ப் பூச்சி:
மேலாண்மை:

  • களைகள் இல்லாமல் நிலத்தினைப் பாதுகாக்க வேண்டும்.
  • தேவைக்கு அதிகமான நீரை அகற்ற வேண்டும்.
  • விளக்குப் பொறி வைத்து பூச்சிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துதல்.
  • கருநாவாய்ப் பூச்சிகளை, வாத்துகளை  நாற்றுகளில் விடுவதன் மூலம் கட்டுப்படுத்துதல்.

கதிர் கருநிற நாவாய்ப் பூச்சி:
மேலாண்மை:

  • வேப்பங்கொட்டைச் சாறு 5 சதம்.
  • நொச்சி இலைப் பொடியின் சாறு 5 சதம்.

நெல் தண்டுதுளைப்பான்:
மேலாண்மை:

  • ரத்னா, ஜெயா, டி.கே.எம் 6 , ஐ. ஆர் 20 & 26 போன்ற எதிர்ப்புத்திறனுள்ள இரகங்களைப் பயிரிடுதல்.
  • நாற்றுப் பறித்து நடவு செய்வதற்கு முன் நாற்றின் நுனியை கிள்ளி எடுத்தல் வேண்டும். இதனால் பூச்சிகளின் முட்டைகளையும் அகற்றலாம்.
  • முட்டைகளை சேகரித்து அழித்தல்.
  • பாதிக்கப்பட்ட கொத்தினை பிடுங்கி அழித்தல்.
  • டிரைக்கோகிரம்மா ஜப்பானிக்கம் என்ற ஒட்டுண்ணியை 5 மிலி / ஹெக்டர் என்ற அளவில் 30 வது மற்றும் 37 வது நாட்களில் விட வேண்டும்.

ஆணைக் கொம்பன்  ஈ :

  • எதிர்ப்பு திறன் கொண்ட பயிர் வகைகளான சக்தி , விக்ரம், சுரேகா , எம்.டி.யூ -3 ஆகியவற்றை உபயோகிக்கலாம்.
  • அறுவடை செய்தவுடனேயே நிலத்தை உழ வேண்டும்.
  • குறைந்த காலத்தில் முதிர்ச்சி அடையக்கூடிய பயிர்களை தேர்வு செய்தல் நன்று.
  • அகச் சிவப்புக் கதிர் விளக்கப் பொறி , ஆணைக் கொம்பன் ஈக்களை கவரக் கூடியவை.
  • புழுப் பருவ ஒட்டுண்ணியை (பிளாட்டிகாஸ்டர் ஒலைசே) நாற்று நடவு செய்த 10 நாட்களுக்குப் பின்னர் 10 X 10 மீட்டர் அளவு நிலத்திற்கு ஒரு ஒட்டுண்ணி என்ற கணக்கில் வயலில் விடுவிக்கவும்.
  • நன்மை பயக்கும் பூச்சியான தரைவண்டு (கராபிட்) ஆணைக் கொம்பன் ஈக்களை உணவாக உட்கொள்ளும்.
  • எட்டுக்கால் பூச்சிகளை வயல்களில் பயன்படுத்தலாம்.

கூட்டமாக வாழும் புழு :

  • புழுப் பருவ ஒட்டுண்ணிகளை உபயோகிக்கலாம். எ.டு. மெட்டியோரஸ் , சாரோபஸ் பைக்காலர், அபான்டலஸ் , டாக்கினியா , கீலோனஸ்
  • நாற்றங்காலில்  நீர் பாய்ச்சி , நீரை தேக்கினால் , மண்ணில் புதைந்துள்ள முட்டைகள் மேலே மிதந்து வரும். அவ்வாறு வரும் முட்டைகளை, பறவைகள் கொத்தித் திண்று விடும்.
  • மண்ணெணையை நீரில் கலந்து நீர்ப்பாசனம் செய்வதினால்ஈ புழுக்கள் சுவாசிக்க வழியின்றி அழிந்து விடும்.
  • வாத்துக்களை பூச்சி உண்ண வயல்களில் அனுமதிக்கலாம்.

கதிர் கூண்டுப்புழு :
மேலாண்மை:

  • எதிர்ப்புதிறன் கொண்ட பயிர் வகைகளான , காவேரி , டி.ஏன்.ஏ.யூ எல். எஃப்.ஆர் 831 311 , ஆகாஷி, டிகே.எம்-6 , ஜ.ஈ.டி751 , ஜ.ஈ.டி 9225, ஜ.ஈ.டி 9797 ஆகியவற்றை பயன்னடுத்தலாம்.
  • பாதிக்கப் பட்ட இலைகளை கிள்ளி எரிதல் வேண்டும்
  • வரப்புகளை புற்களின்றி சுத்தமாக வைத்தல் அவசியம்.
  • அதிகப்படியான தழைச் சத்து உரத்தின் பயன்படுத்தாமலிருப்பது நல்லது.
  • வேப்பங் கொட்டை சாற்றிளை பயன்படுத்தலாம்
  • டிரைக்கோகிராமா கிலோனிஸ் எனும் ஒட்டுண்ணியை நாற்றுநட்ட 37, 44,57 நாட்களுக்கு பிறகு வயலில் விடுவிக்கலாம். பின்னர் மூன்று முறை மோனோகிரோடோபஸ் எனும் பூச்சி கொல்லியை 58 , 65 , 72 ஆம் நாள் தெளிக்க வேண்டும்.

வெட்டுக் கிளி :
மேலாண்மை

  • நிலத்தை உழுவதன் மூலம் , மண்ணில் புதைந்நுள்ள பூச்சி முட்டைகளை வெளியே கொண்டு வரலாம். இவற்றை பறவைகள் கொத்தி தின்றுவிடும்.
  • உயிரியல் முறை கட்டுப்பாட்டு காரணிகளான காக்கலஸ், பாரிக்கோமஸ் , சீலியோ போன்ற முட்டை ஒட்டுண்ணியை பயன்படுத்தலாம்.

முள்ளுவண்டு
மேலாண்மை :

  • வெளிறிய பரப்பு கொண்ட இலை நுணிகள் கிள்ளி எறியப் பட வேண்டும்.
  • வண்டுகளை சிறிய வலைகளைக் கொண்டு பிடித்து அழிக்கலாம்.

நெல்லின் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை:
A. சாகுபடி முறை:

  • அறுவடைக்குப் பின் நிலத்தில் உள்ள தாள்களை அகற்றவும்.
  • களைகள் நிலத்தில் இல்லாமல் பாதுகாக்க வேண்டும்.
  • எலிகளின் சேதத்தை கட்டுப்படுத்த, படுக்கினை சிறியதாகவும் , அகலம் குறைந்ததாகவும் இருத்தல் வேண்டும்.
  • எதிர்ப்புத்திறனுள்ள இரகங்களைப் பயன்படுத்துதல்.
  • வடிகால் வாய்க்கால்களை அமைத்து பூச்சியினை கட்டுப்படுத்துதல்.
  • தேவைக்கு அதிகமான உரத்தின் பயன்பாட்டைத் தவிர்த்தல்.

இயந்திர முறைகள்:

  • எலி வங்குகளை அழிந்திட வேண்டும்.
  • விளக்குப் பொறியை வைத்து பூச்சிகளை அழிக்கலாம்.
  • எலிப் பொறிகளை உபயோகப் படுத்தலாம்.

உயிரியல் முறைகள்:

  • டிரைக்கோகிரம்மா ஜப்பானிக்கம் என்ற ஒட்டுண்ணியை 5 மிலி / ஹெக்டர் என்ற அளவில் 30 வது மற்றும் 37 வது நாட்களில் விடுவதால் தட்டுத்துளைப்பானை கட்டுப்படுத்தலாம்.
  • டிரைக்கோகிரம்மா சில்லோனிஸ் என்ற ஒட்டுண்ணியை 5 மிலி / ஹெக்டர் என்ற அளவில் 37வது, 44வது மற்றும் 51 வது நாட்களில் விடுவதால் இலைப்புழுவினை கட்டுப்படுத்தலாம்.

தாவர பொருட்கள்:

  • வேப்பங்கொட்டைச் சாறு கரைசல் 5 சதம் ( 25 கிலோ / ஹெக்டர்) வேப்ப எண்ணெய் 3 சதம் ( 15 கிலோ / ஹெக்டர்) என்ற அளவில் தெளிக்கும் போது பழுப்பு தத்துப்பூச்சியினைக் கட்டுப்படுத்தலாம்.
  • தாவர பொடிகளான வேப்பங்கொட்டைப் பொடி, நொச்சி , புரோஸோபிஸ் போன்றவற்றினை 5 சதம்  என்ற அளவில் தெளிக்கும் போது கதிர் நாவாய்ப் பூச்சி மற்றும் கருநாவாய்ப் பூச்சியினைக் கட்டுப்படுத்தலாம்.

பருத்தியில் பூச்சி மேலாண்மை:
இலை தத்துப் பூச்சி:

மேலாண்மை:

  • எம். சி. யூ 3, எம். சி. யூ 5  மற்றும் எம். சி. யூ 9 போன்ற எதிர்ப்புத்திறனுள்ள இரகங்களைப் பயிரிடுதல்.
  • விளக்குப் பொறி வைத்து பூச்சிகளைக் கவர்ந்து அழித்தல்.
  • கிரைசோபா கமீனா என்ற ஒட்டுண்ணியை விடுதல்.
  • மழை அதிகமாகப் பெய்யும் காலங்களில், பூச்சிகளின் தாக்கத்தைக் குறைக்க காலத்திற்கு முன்னதாக மற்றும் பருத்திகளின் இடைவெளியைக் குறைத்தும் பயிரிட வேண்டும்.

பருத்தி அசுவுணி:
மேலாண்மை:

  • உயிரியல் முறை கட்டுப்பாட்டுக் காரணிகளான பொறி வண்டுகளை விடுதல்.
  • ஒட்டுண்ணி : ஃபைலோகோமஸ் டிரிஸ்டிஸ்

இலைப் பேன்:
மேலாண்மை:

  • சாறு உறிஞ்சும் பூச்சிகளின் இளம் குஞ்சுகள் மற்றும் முதிர் பூச்சிகள் போன்றவற்றை நடவு நட்ட 14 வது நாட்களில் கட்டுப்படுத்துதல்.

பருத்தி செந்நாவாய்ப்பூச்சி:
மேலாண்மை:

  • உயிரியல் முறை கட்டுப்பாட்டுக் காரணிகளான ஹெர்ஃபாக்டர் காஸ்டலிஸை விடுதல்.

கரும்பில் பூச்சிகள்:
நுனிகுருத்துப் புழு:
மேலாண்மை:

  • கோ 312, கோ 421, கோ 661, கோ 917 மற்றும் கோ 853 போன்ற எதிர்ப்புத்திறனுள்ள இரகங்களைப் பயிரிடுதல்.
  • நடவு : டிசம்பர் – ஜனவரி
  • இடைப்பயிர் (ஊடுபயிர்) : தக்கைப் பூண்டு
  • தேவையான நீர்ப் பாசனம்.
  • காய்ந்த நடுக்குருத்தினை எடுத்து அழித்தல்.
  • ஸ்டம்பியோப்சிஸ் இன்பரன்ஸ் என்ற ஒட்டுண்ணியை ஹெக்டருக்கு 125 (பெண்) என்ற எண்ணிக்கையில் வயலில் விடவும்.

இடைகணுப் புழு:
மேலாண்மை:

  • எதிர்ப்புத்திறனுள்ள இரகங்கள்: கோ 975, கோ 7304, மற்றும் கோ 46
  • முட்டைகளை சேகரித்து அழித்தல்
  • சோகை உரிப்பு : 150 மற்றும் 210 வது நாட்களில்
  • தேவைக்கு அதிகமான உர பயன்பாட்டைத் தவிர்த்தல்.
  • முட்டைகளைத் தாக்கும் டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் ஒட்டுண்ணியை 15 நாட்களுக்கு ஒரு முறை நட்ட 4 ம் மாதத்திலிருந்து 6 முறை ஹெக்டருக்கு 2.5 சிசி என்ற அளவில் பயன்படுத்துதல்.

மேல் தண்டுதுளைப்பான்:
மேலாண்மை:

  • எதிர்ப்புத்திறனுள்ள இரகங்கள்: கோ 419, கோ 745, மற்றும் கோ 6516
  • தாங்கும் திறனுள்ள இரகங்கள்: கோ 859, கோ 1158, மற்றும் கோ 7224
  • முட்டைகளை சேகரித்து அழித்தல்
  • முட்டை ஒட்டுண்ணி: டிரைக்கோகிரம்மா மைனூட்டம்
  • புழுப் பருவ ஒட்டுண்ணி: கொனியோகஸ் இன்டிகஸ்
  • கூட்டுப்புழு ஒட்டுண்ணி: டெட்ராடிக்கஸ் அய்யாரி

பச்சைப் பயிரில் பூச்சிகள்:
கடலைப் புழு:
மேலாண்மை:

  • 12 இனக் கவர்ச்சிப் பொறி  / ஹெக்டர்
  • 50 பறவைக் கூடுகள்  / ஹெக்டர்
  • வேப்பங்கொட்டைச் சாறு கரைசல் 5 சதத்தினை வேப்ப எண்ணெய்யினை  ( 12.5 லிட்டர் / ஹெக்டர்) தெளித்தவுடன் தெளித்தல்.

சேமிப்பில் தாக்கும் பயிறு வண்டு:
மேலாண்மை:

  • ஈரப்பதம் 10 சதவீதம்  இருக்குமாறு விதைகளை காயவைத்தல்.
  • 100 கிராம் விதைக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் வேப்ப எண்ணெய் 1 லிட்டர், புங்க (Pungam) எண்ணெய் 1 லிட்டர் என்ற அளவில் எடுத்து, கலந்து தெளித்தல் வேண்டும்.
  • சேமிப்பின் போது பாலித்தீன் பைகளில் போட்டு வைக்க வேண்டும்.

துவரையில் பூச்சிகள்:
காய் துளைப்பான்:
மேலாண்மை:

  • 12 ஹெலிக்கோவர்பா அர்மிஜிரா என்ற இனக்கவர்ச்சி பொறியை ஒரு ஹெக்டருக்கு வைத்தல் வேண்டும்.
  • 50 பறவைக் கூடுகளை  ஒரு ஹெக்டருக்கு வைத்தல் வேண்டும்.
  • வேப்பங்கொட்டைச் சாறு கரைசல் 5 சதம்
  • வேப்ப எண்ணெய் 2 சதம்

உளுந்தில் பூச்சிகள்:
புகையிலை இலை வெட்டும் புழு:
மேலாண்மை:

  • விளக்குப் பொறி வைத்து இலை வெட்டும் புழுக்களை அழித்தல் வேண்டும். (அல்லது) 12 இனக்கவர்ச்சி பொறியை ஒரு ஹெக்டருக்கு வைத்து புழுக்களை அழித்தல் வேண்டும்.
  • பயிர் நிலங்களைச் சுற்றிலும் ஆமணக்கினை பயிரிடுதல் மூலம் பூச்சிகள் கட்டுப்படுத்தப்படுகிறது.
    • நச்சுயிரிக் கலவை 1.5 x 10 12 கிருமிகள்.
    • நச்சுயிரிக் கலவையை மாலை வேளையில் தெளிக்கவும்.
  • கீழ்காணும் பொருட்களைக் கொண்டு ஒரு ஹெக்டருக்கு நச்சு உணவு தயாரித்து மாலை வேளையில் வயலில் வைத்து வளர்ந்த புழுக்களை அழிக்கவும்.
    • அரிசி தவிடு   12.5 கி.கி
    • வெல்லம்        1.25 கி.கி
    • கார்பரில் 50 நனையும் தூள் – 1.25 கி.கி
    • தண்ணீர் 7.5 லிட்டர்

சேமிப்பில் தாக்கும் பயிறு வண்டு:
மேலாண்மை:

  • விதையளவு 10 சதம் ஈரப்பதத்திற்கு உலர்த்திய பின்னர் சேமிக்கவும்.
  • குழிப்பொறி (அல்லது) தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் இரண்டும் ஒன்றில் வகை கவர்ச்சிப் பொறியை வைத்து வயல்களிலிருந்து தொற்றி வந்து வண்டுகளை கண்காணித்து, அதற்கேற்ப விதைகளை காயவைப்பதன் மூலம் முட்டைகளை அழிக்கலாம்.
  • விதைகளை பாலித்தீன் உள்ளுறை கொண்ட காக்கும் பைகளில் சேமிக்கவும்.

கம்புகளில் பூச்சிகள்
தண்டு துளைப்பான்
மேலாண்மை:

  • அறுவடை செய்தவுடன் நிலத்தை உழ வேண்டும் மற்றும் பயிரின் தண்டுகளை சேகரித்து அழிக்கவும்.
  • கருவாட்டுப் பொறியை வைத்து அழிக்கவும்.

சோளத்தில் பூச்சிகள்
குருத்து ஈ
மேலாண்மை:

  • கோ 1, அஹாரி என்ற எதிர்ப்புத்திறனுள்ள இரகங்களைப் பயன்படுத்துதல்.
  • பருவ மழை பெய்தவுடன் சோளம் விதைப்பு செய்து குருத்து ஈ தாக்குதலைக் குறைக்கலாம்.
  • அறுவடைக்கு பின் நிலத்தை உழவு செய்ய வேண்டும் மற்றும் பயிரின் தண்டுகளை சேகரித்து அழிக்க வேண்டும்.
  • ஒரு எக்டருக்கு 12 கருவாட்டுப் பொறியை வைக்க வேண்டும். இதனை பயிரின் வயது 30 நாள் ஆகும் ஆகும் வரை வயலில் வைத்து ஈக்களைக் கவர்ந்து அழிக்கவும்.

தண்டு துளைப்பான்
மேலாண்மை:

  • அவரை அல்லது தட்டைப்பயிரை, சோளத்துடன் 4:1 என்ற விகிதத்தில் ஊடுபயிராக விதைப்பு செய்து தண்டு துளைப்பானை தவிர்க்கலாம்.
  • விளக்குப் பொறியை நடு இரவு வரை வைத்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கவும்.
  • உயிரியல் முறைகள் கட்டுப்பாட்டு காரணிகளான டிரைக்கோகிரம்மா மைனூட்டம் , ஃபிரக்கான் சைன்னாஸிஸ் (முட்டையைத்தாக்கும் ஒட்டுண்ணிகள்) மற்றும் மைக்ரோ ஃபிரக்கான் சில்லோசிடா புழுப் பருவ ஒட்டுண்ணிகள்)  போன்றவற்றை நடவு வயலில் வைக்கவும்.

இளஞ்சிவப்பு தண்டுப் புழு
மேலாண்மை

  • டிரைக்கோகிரம்மா மைனூட்டம் என்ற முட்டையைத்தாக்கும் ஒட்டுண்ணியை வைக்கவும்.
  • புழுப் பருவ ஒட்டுண்ணி : அபான்டிலஸ் ஃபிலாப்ஸ் , ஃபிரக்கான் டிரைன்னன்ஸிஸ்
  • கூட்டுப்புழு ஒட்டுண்ணி: டெட்ராடிக்கஸ் அய்யாரி

தானிய ஈ
மேலாண்மை

  • விளக்குப் பொறியை நடு இரவு வரை வைத்து தானிய ஈ மற்றும் கதிர்ப்புழு போன்ற பூச்சிகளை கவர்ந்து அழிக்கவும்.

குருத்து நாவாய்ப் பூச்சி
மேலாண்மை

  • முட்டையைத்தாக்கும் ஒட்டுண்ணிகள் :  பேராங்கரஸ் ஆட்டாபிலிஸ்,

    ஆக்டிடிராஸ்டிக்கஸ் இன்டிகஸ்

  • ஊண் விழுங்குதல் :  கோச்சினில்லினா செப்படம்புண்டோடா, ஜியோகோரிஸ் டிரைக்கோலர்

கதிர் நாவாய்ப் புழு
மேலாண்மை

  • விளக்குப் பொறியை நடு இரவு வரை வைத்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கவும்.
  • ஒரு எக்டருக்கு 12 இனக் கவர்ச்சிப் பொறியை வைத்து கதிர் புழுவின் ஆண் அந்திப்பூச்சிகளை கதிர் வரும் பருவத்திலிருந்து தானிய முறை வரை கவர்ந்து அழிக்கவும்.
  • என்.பி.வி , நச்சுயிரி 1.5 x 10 12 நச்சுயிரி கிருமிகள் , 2.5 கிலோ வெல்லம், 250 கிராம் பருத்தி பருத்தி விதைத்தூள் கலந்து 10 நாள் இடைவெளியில் 2 முறை  கதிர் வரும் பருவத்தில் தெளிக்கவும்.