அங்கக வேளாண்மை :: அங்கக வேளாண்மையில் விவசாயிகளின் அனுபவங்கள்
சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறை

இந்த பிரச்சனைகள் பொதுவாக மிளகாய், காய்கறிகள் மற்றும் பருத்தியில் ஏற்படுகிறது. பூச்சிகள் எல்லாம் இலைகள் மற்றும் கிளைகளை தாக்குகிறது. வாரம் ஒரு முறை பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளை வெட்டி அவற்றை நொதித்த அல்லது வேகவைத்த முந்தைய கரைசலில் போட்டு விடவும். இந்த ஒரு அகற்றுதல் முறையாகும் மற்றும் ஒரு வகையான கலாச்சார நடைமுறைகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை உத்திகளாகும்.

இந்த தாக்குதலின் விளைவாக இலைகள் சுருண்டு கொட்டத் துவங்கி விடும். பின்வரும் இந்த தயாரிப்பு பிரச்சினையை கட்டுப்படுத்த உதவுகிறது.

தேவையான பொருட்கள்: (அ) பின்வரும் இலைகளில் ஐந்து இலைகளில் 2-3 கிலோ: லண்டானா காமரா, வேம்பு, நொச்சி, புகையிலை, சிரியாநங்கை, சீதாப்பழம், கற்றாழை, பிரண்டை அல்லது வில்வம் பழம் (5 -10) அல்லது பச்சை மிளகாய் (2 -3 கிலோ) (ஆ) 100 கிராம் மஞ்சள் தூள்.

தயாரிப்பு: சிறிய துண்டுகளாக இலைகளை வெட்டவும் (பில்வா பழம் அல்லது மிளகாய் பயன்படுத்தி நசுக்கவும்). மஞ்சள் தூள் சேர்க்கவும். முன்பு குறிப்பிட்ட நொதித்தல் முறை பயன்படுத்தி கலவையை தயாரிக்கவும். இந்த கலவையை 7 நாட்களுக்கு நொதிக்க விடவும்.

பயன்பாடு: ஒரு லிட்டர் கரைசலில் பத்து லிட்டர் தண்ணீர் சேர்த்து தெளிக்கலாம். தாக்குதலின் தீவிரம் பொறுத்து, 7-10 நாட்கள் இடைவெளியில் 2-3 முறை மீண்டும் தெளிப்பு செய்யலாம்.

 

 
முதல் பக்கம் | திட்டங்கள் | பயிற்சிகள் | புகைப்படங்கள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2009-16