organic farming
அங்கக வேளாண்மை :: உயிர் உரம் : கேள்வி பதில்

உயிர் உரம் 

எப்படி அசோலாவைப் பயன்படுத்தலாம்?

அசோலா வெள்ள நீர் பாசனம் செய்யப்படும் பகுதிகளுக்கு பயன்படுத்தலாம். இது 40-80-கிலோ தழைச்சத்து/ஹெக்டேர் நிலை நிறுத்துகிறது. அசோலாவைத் தேவையான அளவு பயன்படுத்தலாம்.

பி.ஜி.ஏ. என்றால் என்ன?

பி.ஜி.ஏ, ஒரு பாசி.  இது 20-30 கிலோ தழைச்சத்து / ஹெக்டேருக்கு நிலை நிறுத்துகிறது. நெல்லில் பி.ஜி.ஏ இடுவதன் மூலம் 15-20% மகசூல் அதிகரிக்கிறது.

எவ்வளவு அசோலா ஒரு ஹெக்டெருக்கு தேவைப்படுகிறது?

சுமார் 10 குவிண்டால் அசோலா ஒரு ஹெக்டெருக்கு தேவைப்படுகிறது.

எவ்வளவு பி.ஜி.ஏ. ஒரு ஹெக்டெருக்கு தேவை மற்றும் அது எவ்வாறு வயலில் இட வேண்டும்?

நெல் நடவு முடிந்த 7நாட்களுக்கு பிறகு வயலில் 2.5 செ.மீ தண்ணீர் இருக்கும் போது 10-15-கிலோ பி. ஜி.ஏ.ஒரு ஹெக்டேருக்கு இடப்படுகிறது.

பி.ஜி.ஏ.பாக்கெட் செலவு என்ன?

1 கிலோ பாக்கெட் பி.ஜி.ஏ. செலவு ரூ.  20.00 ஆகும்.


ஆதாரம்:

http://www.icrisat.org/vasat/learning_resources/OrganicFAQs/organic_farming.htm    
www.mycorrhizae.com
www.hortsorb.com
http://kendujhar.nic.in/
http://www.greenpeace.org

 
முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016