organic farming
அங்கக வேளாண்மை :: உயிர் உரம் : கேள்வி பதில்

உயிர் உரம் 

மைக்கோரைஸா பூஞ்சை ஏற்கனவே மண்ணில் இல்லையா?

எந்தவித இடையூறுமில்லாத மண்ணில் மைக்கோரைஸா பூஞ்சை உட்பட பல்வேறு நன்மை தரும் மண் நுண்ணுயிர்கள் உள்ளன. எனினும், பல பொதுவான நடைமுறைகளினால், மண்ணில் மைக்கோரைஸா உருவாக்கும் திறன் அழிந்து விடலாம் என  ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

உழவு, உரமிடுதல், மேல் மண் அரிப்பு, மண் அரிப்பு, நிலத் தயாரிப்பு, சாலை மற்றும் வீடு கட்டுமானம், புகையூட்டுதல், அந்நிய தாவரங்கள் உட்புகுதல் மற்றும் வெற்று மண்ணை அகற்றுதல் போன்ற நடவடிக்கைகள் இந்த பயனுள்ள மண் பூஞ்சையைக் குறைக்கும் அல்லது அழித்து விடும் நிலை உள்ளது.இந்த மாதிரியான இடங்களில்  மைக்கோரைஸா பூஞ்சையை மீண்டும் இட்டு தாவர வளர்ச்சியை மேம்படுத்தலாம். பல வழக்கமான நாற்றங்கால் நுட்பங்களான  புகை மூட்டம், தண்ணீர் மற்றும் நுண்ணூட்ட உரங்களை வேகமாக அடித்தல் போன்ற நடவடிக்கைகள் மைக்கோரைஸா பூஞ்சையை இல்லாமல் செய்து விடுகின்றன. அதிகமான  உரங்கள் மற்றும் நீர் மைக்கோரைஸா இல்லாத தாவரங்களுக்குக் கொடுக்கும் போது, அவைகள் செயற்கை வளரும் ஊடகத்தில் வளர்ந்தாலும், இறுதியில் அறுவடை முடியும் சமயத்தில்  வெளி  சூழ்நிலைகளில் உயிர்வாழ முடியாது. 

என்னென்ன வகையான மைக்கோரைஸா பொருட்கள் கிடைக்கின்றன?

குறிப்பிட்ட மைக்கோரைஸா விதைகள் அல்லது பூஞ்சையின்  "விதைகள்" அவைகளின் வளர்ச்சி மேம்படுத்தும் திறன்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இந்த விதைகள், வேர் உயிர்த் தூண்டி, ஹ்யூமிக் அமிலங்கள் மற்றும் நீர் உறிஞ்சக்கூடிய ஜெல் ஆகியவற்றுடன் இணைந்து, தாவர வேர்கள் பெருகுவதற்கும் மற்றும் தாவர  வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகிறது. மைக்கோரைஸா பூஞ்சை, தவிர மகசூல் காரணிகளை  மேம்படுத்தும் என்பதை  நூற்றாண்டுகளுக்கும் முன்னரே  கண்டறிந்தும்  தீவிர ஆராய்ச்சி 20 ஆண்டுகளாக நடந்து கொண்டு வருகிறது. இப்போது, விவசாயிகள், இயற்கை நில  கட்சியாளர்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்கள், தாவர வளர்ச்சியை  இயற்கை வழியில் மேம்படுத்த  மைக்கோரைஸா பூஞ்சையை  பயன்படுத்துகின்றனர்.

நீங்கள் எப்படி இந்த மைக்கோரைஸா பூஞ்சையை இட வேண்டும்?

மைக்கோரைஸா பூஞ்சையை மண்ணில் இட எந்த ஒரு சிறப்பு உபகரணங்களும் தேவைப்படுவதில்லை. மைக்கோரைஸா உட்புகுத்திக்கும் மற்றும் தாவர வேருக்கும் இடையிலான தொடர்பை உருவாக்க வேண்டும். மைக்கோரைஸா உட்புகுத்தியை வேர்கள் மீது தெளிக்கலாம், விதைப்பாத்திகளில் தெளிக்கலாம், மண்ணில் கலக்கலாம், நீர்ப்பாசன அமைப்புகள் வழியாக தண்ணீரில் விடலாம் தாவரங்களின் வேர் மண்டலத்தின் பக்கத்தில் தெளித்தும் பயன்படுத்தலாம். பயன்படுத்தும் முறை சுற்றுசூழ்நிலை மற்றும் தேவைகளைப்பொறுத்து வேறுபடுகின்றது.

தொடர்ச்சி.....


ஆதாரம்:

http://www.icrisat.org/vasat/learning_resources/OrganicFAQs/organic_farming.htm    
www.mycorrhizae.com
www.hortsorb.com
http://kendujhar.nic.in/
http://www.greenpeace.org

 
முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016