organic farming
அங்கக வேளாண்மை :: அங்கக சான்றளிப்பு : கேள்வி பதில்

அங்கக சான்றளிப்பு 

யார் அங்கக சான்றிதழ் வழங்குகின்றனர்?

டெஃப்ரா கீழ் அங்கீகாரம் பெற்ற பல சுய அங்கக சான்றிதழ் குழுக்கள், பண்ணைகள் மற்றும் பதப்படுத்தப்படும் திடல்களுக்கு அங்கக சான்றிதழ் வழங்குகிறார்கள்.

நான் அங்கக சான்றிதழ் பெற யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும்?

நீங்கள் அங்கக சான்றிதழ் பெற, சுய சான்றிதழ் குழுக்களிடம் நேரடியாக  தொடர்பு கொள்ளலாம்.

அங்கக முறை செயல்பாடு மாற்றம் பற்றி அறிய நான் யாரை தொடர்பு கொள்ள வேண்டும்?

CAFRE ஆர்கானிக் குழுவை 028 9442 6765 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். நீங்கள் அங்கக முறை மாற்றம், சான்றிதழ் செயல்முறைகள் மற்றும் தற்போதைய தொழில்நுட்ப உதவி பற்றி அறிய பொருத்தமான அங்கக வளர்ச்சி ஆலோசகரைத் தொடர்பு கொள்ள வேண்டும். அவர்கள் அங்கக விவசாயத் திட்டம் பற்றிய தகவல்களை வழங்குவார்கள்.

நான் எப்பொழுது என் முதல் அங்கக பொருளை விற்க முடியும்?

அங்ககநிலம் மாற்று காலத்தில் முதல் ஆண்டு உற்பத்தி செய்யப்படும்  பொருளை அங்கக  பொருளாக விற்கக் கூடாது. அதை அங்கககம்  அல்லாத (வழக்கமான) சந்தைக்கு எடுத்து சென்று  விற்றுவிடலாம். மாற்று காலத்தின், இரண்டாம் ஆண்டில் இருந்து அங்கக  பொருளாக, அங்கக  சந்தை கூடத்தில் விற்பனை செய்யலாம். முழுமையான அங்கக மாற்று காலத்திற்கு பிறகு, அந்த நிலத்தில் விதைக்கப்பட்ட அல்லது அங்கக முறையில் நடவு செய்யப்பட்ட பயிர்கள், அங்கக நிலமாக விற்கப்படுகிறது. சில காலங்களுக்கு பிறகு பண்ணை முழுமையான அங்கக நிலையை அடைந்த பின்னர் அதில் வளர்க்கப்படும் கால்நடைகளை அங்கக கால்நடைகளாக விற்பனை செய்ய வேண்டும். பண்ணையில் உள்ள கால்நடைகள்  மற்றும் மற்ற காரணிகளை பொறுத்து அங்கக செயல்முறை கால நேரம் வேறுபடும்.

அங்கக தரங்கள் என்னென்ன?

அங்கக தரம் என்பது "விதிகளின்" தொகுப்பு ஆகும். பதிவு பெற்ற அங்கக உற்பத்தியாளர்கள், அங்கக சான்றிதழை பராமரித்து கொண்டு வர வேண்டும். அதை பின்பற்றி, அங்கக உற்பத்திப் பொருட்களை சந்தையில் விற்பனை செய்து கொள்ளலாம்.

கால்நடை மருந்துகளை அங்கக கால்நடை உற்பத்தியில் பயன்படுத்த முடியுமா?

பெரும்பாலான கால்நடை மருந்துகள், பொதுவாக ஒரு தனிப்பட்ட விலங்குகளின் அடிப்படையில், அங்கக முறைகளில் அனுமதிக்கப்படுகிறது. நீங்கள் அவற்றை பயன்படுத்த, அதன் உண்மையை   நிரூபிக்கும் வகையில், சிறப்பு அனுமதி பெற வேண்டும். பல இரசாயன மருந்துகள் விலங்குகளுக்கு பயன்படுத்தப்படும் போது, அவற்றின் அங்கக  நிலையை இழந்து விடும் ஆபத்து இருக்கிறது.

படுக்கையில் பயன்படுத்தும் வைக்கோல் அங்கக வைக்கோலாக இருக்க வேண்டுமா?

ஆம். ஆனால், அங்கக வைக்கோல் போதுமான அளவு இல்லாத பட்சத்தில் சாதாரண வைக்கோல் பயன்படுத்தப்படலாம்.

ஆதாரம்:

http://www.icrisat.org/vasat/learning_resources/OrganicFAQs/organic_farming.htm    
www.mycorrhizae.com
www.hortsorb.com
http://kendujhar.nic.in/
http://www.greenpeace.org

 
முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016