organic farming
அங்கக வேளாண்மை :: மட்கு எரு : கேள்வி பதில்

மட்கு எரு

அங்கக பொருட்களை மட்க வைக்க அவற்றை அரைக்க வேண்டுமா அல்லது தூளக்கவேண்டுமா?

சிறு துண்டுகளாக உள்ள அல்லது அரைத்த அங்கக பொருட்கள், மட்க கூடிய பொருட்களின் மேற்பரப்பு பகுதிகளை அதிகரித்தல் மூலம் மட்க வைக்கும் திறனை அதிகரித்து, அங்கக பொருட்களை விரைவில் மக்கிய உரமாக மாற்றுகிறது. ஆனால்   மர பொருட்களை தவிர, மற்ற பொருட்களை துண்டாக்குதல் முக்கியமில்லாத ஒன்று. மர பொருட்கள் மட்குவதற்கு பல ஆண்டுகள் ஆகும் என்பதால் அவற்றை துண்டுகளாக்கி பயன்படுத்த வேண்டும்.  

நான் ஊக்குவிக்கிகள்  / முடுக்கிகள் சேர்க்க வேண்டுமா?

ஊக்குவிக்கிகள் மற்றும் இயக்கிகள் பரிந்துரைக்கப்படுவதில்லை. ஊக்குவிக்கிகள் சிறிய சிதைபான்களாக செயல்படுகின்றன. அவைகள் இயல்பாகவே குவியலில் சேர்க்கப்படும்  இலைகள் மற்றும் புல்களில் காணப்படுகின்றன. அவைகள் மண், மட்கிய உரம் மற்றும் எருக்களில் ஏராளமாக உள்ளன. வெறும் 1 டீஸ்பூன் வளமான மண்ணில் தொடர்ந்து மட்கிய உரம் சேர்த்து வந்தால், அது 100 மில்லியன் பாக்டீரியா மற்றும் 400-800 அடி காளான் வலைப்பின்னல்களை உருவாக்கும்.

இயக்கிகள் பொதுவாக நைட்ரஜனை விரைவாக நிலைப்படுத்துகின்றன. மேலும் அது   நீர் மாசு பாட்டிற்கு ஆதாரமாக அமைந்து, மழை காலங்களில் குவியலின் மேற்பரப்பிலிருந்து தரை மற்றும் நிலத்தடி நீருக்கு சென்று விடும். நீங்கள் உங்கள் குவியலில், அதிக நைட்ரஜன் கொண்ட புற்கள், உரம், உணவுக்கழிவுகள் அல்லது உடைந்த எலும்புகள் போன்ற அங்கக பொருட்களை சேர்க்கும் போது நைட்ரஜன் மெதுவாக வெளியேறுவதோடு, மட்கு செயலும் நன்றாக நடைபெறும்.

நான் என் குவியலில் சுண்ணாம்பு சேர்க்க வேண்டுமா?

1. குவியலில் சுண்ணாம்பை சேர்க்கக் கூடாது. ஏனெனில், அந்த குவியலிலிருந்து நைட்ரஜன் அம்மோனியா வாயுவாக வெளியாகும். இந்த எரிவாயு கெட்ட வாசனை      மற்றும் குறைந்த நைட்ரஜன் உள்ள உரமாக இருக்கும். மேலும் இது, உங்கள் தோட்டத்திற்கு ஒரு முக்கியமான தாவர ஊட்டச்சத்தாகவும் செயல்படும்.

2.  நீங்கள் உரக் குவியலின் அமில கார தன்மை பற்றி கவலைப்பட தேவையில்லை. அமில கார தன்மை, காரத்தன்மை அல்லது அமிலத்தன்மையின் ஒரு அளவீடாக      செயல்படுகிறது. பொதுவாக உரம் முதிர்ந்த நிலையை அடையும் போது, அமில கார தன்மை வழக்கமாக நடுநிலையில் இருக்கும்.

3. நீங்கள் உரத்தின் அமில கார தன்மையை சரி செய்ய வேண்டும் என்றால், அதன் மக்கும் தன்மை முடிந்ததும் செய்ய வேண்டும். முதலில் மட்கிய உரத்தின் அமில கார     தன்மையை  சோதித்த பின்னர் தேவைப்பட்டால் அதை சரி செய்யலாம்.


தொடர்ச்சி.....


ஆதாரம்:

http://www.icrisat.org/vasat/learning_resources/OrganicFAQs/organic_farming.htm    
www.mycorrhizae.com
www.hortsorb.com
http://kendujhar.nic.in/
http://www.greenpeace.org

 
முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016