organic farming
அங்கக வேளாண்மை :: மட்கு எரு : கேள்வி பதில்

மட்கு எரு

பயனுள்ள மக்கிய உரத்தை பெற, கீழே கொடுக்கப்பட்டுள்ள  அடிப்படை வழிமுறைகளைப்  பின்பற்றவும்.

படி 1

நல்ல வடிகால் மற்றும் நல்ல சூரிய ஒளி உள்ள ஒரு பகுதியைத் தேர்வு செய்ய  வேண்டும் அல்லது உங்கள் சொந்த உரமாக்கல் இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும். உங்கள் வாழ்க்கை முறை மற்றும் தேவைகளைப்  பொறுத்து, நீங்கள் ஒரு கடையில் வாங்கிய அல்லது வீட்டில் உள்ள பொருட்களை உரமாக பயன்படுத்தத் தேர்வு செய்யலாம். கொல்லைப்புற உரமாக்கல் பகுதியைப் பொறுத்து பல்வேறு வகையான தொட்டிகள் உள்ளது. உங்கள் உரப் பகுதி, ஒரு மீட்டர் நீளம், ஒரு மீட்டர் அகலம், ஒரு மீட்டர் உயரம் இருக்க வேண்டும். உரமாக்கல் முறையைத் தொடங்க, மிகவும் பெரிய குவியலாக வேண்டும். உங்கள் குவியல் மிக சிறியதாக  இருந்தால், அது சரியாக உரமாகாது.

படி 2

நீங்கள் உர மாக்களை  தொடங்கும் போது, குவியலின் கீழே காற்றோட்டம் மற்றும் வடிகால் வசதியை அனுமதிக்கும்  வகையில்,  ஒரு அடி  அல்லது அதற்கு அதிகமான நீளமுள்ள கிளைகளை தேர்வு செய்யலாம். சிறிது  மண்ணை  குவியலுக்கு  மேலே  ஒரு  மெல்லிய அடுக்காக  சேர்த்தால் அதில் உள்ள நுண்ணுயிர்கள் மண்ணில்  உள்ள  அங்கக பொருட்களை  உடைக்கும் வேலையைச் செய்யும். அடிப்படையில், மண்ணில் நுண்ணுயிர்களை சேர்ப்பதன் மூலம், கூடுதலாக  உரம் தொடக்கி, பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. பிறகு, உங்களிடம் உள்ள பொருட்களை சேர்க்க தொடங்குங்கள். நீங்கள் உங்கள் குவியலில் சிறிய துண்டுகளை  சேர்த்தால்,  அவை வேகமாக அழுகும். நீங்கள் ஒரு சமச்சீர் உரக் குவியலை உருவாக்க, ஒவ்வொரு பழுப்பு  நிற பகுதிக்கும் ஒரு பசுமை நிற பொருட்களை  சேர்க்க வேண்டும். எனினும், பச்சை பொருட்கள் மற்றும் பழுப்பு பொருட்களின் விகிதத்தை ஒரு பகுதியாக அல்லது , அடுக்காக சேர்க்கத் தேவையில்லை, எதாவது  ஒரு விகிதத்தில் இந்த இரண்டு வகையான பொருட்களைக் கலந்து குவியலில் சேர்க்க வேண்டும். மெல்லிய  பொருட்களான வெட்டப்பட்ட  புற்களை சிறிய அளவில் சேர்க்க வேண்டும். அவ்வாறு செய்வதால்  அவை  இறுக்கமாகச் சேராமல்   இருக்கும் . இறுக்கம் என்றால் போதுமான காற்று உட்புகும்  வசதி இல்லாமல்  இருக்கும்  நிலை ஆகும்.

படி 3

தண்ணீர் சேர்க்கவும். பயனுள்ள மக்கிய உரத்திற்கு ஈரப்பதம் தேவைப்படுகிறது. நீங்கள் முதலில் உங்கள் உரக்குவியலில் தண்ணீர் சேர்த்து, ஒவ்வொரு முறையும் நீங்கள் உங்கள் குவியலைத் திருப்பி விட வேண்டும். கடற்பாசியைத் திறம்பட மக்கச் செய்ய உரக் குவியல் ஈரமானதாக இருக்க வேண்டும்.

படி 4

உங்கள் குவியலை, காற்று புகும் வண்ணம்  திருப்பி விட வேண்டும்.  இரு வாரங்களில் வளரும் பருவத்தில் போதுமான காற்று கொடுக்க வேண்டும்.

உங்கள் உரக் குவியலில் கெட்ட நாற்றம் வந்தால், அடிக்கடி உரக் குவியலைத் திருப்பி விட்டு, நிறைய காற்றைக் கொடுத்து, தண்ணீரைக் குறைத்து, உங்கள் குவியலில் பச்சைகளின் அளவுகளையும் குறைக்க வேண்டும்.

நீங்கள் குவியலை  திருப்பி விட  தொடங்கும் போது, பொருட்கள் சூடாக இருந்தால், உங்கள் உரக் குவியல் மட்கி கொண்டு இருக்கிறது  என்று அர்த்தம். குவியல் சூடாக இருக்கும் போது  நீங்கள், உங்கள் கையை அதன் மையத்தில் வைத்து பார்க்க  முடியாது.

குளிர்காலத்தில், உங்கள் உரக்குவியல், திடப்பொருளாக உறைந்து விடலாம். வழக்கம் போல் உங்கள் பச்சை மற்றும் பழுப்பு பொருளைச் சேர்க்கலாம். வசந்த காலத்தில், உருகும் பதமாகும் போது, இது முந்தைய குளிர்காலத்தில் விட்ட பகுதியில்  இருந்து  உரமாகத் தொடங்கும். மிகவும் பெரிய குவியலை, உரமாக  மாற்ற   ஒரு வருடம் முழுவதும் காப்பிட்டு வைத்தால் போதுமானது.

படி 5

நீங்கள் உரமாக்கபட்ட பொருளில்  "மண்" வாசனை மற்றும் அடர்ந்த நிறம், குளிர்சியான தோற்றம்  மற்றும் பெரும்பாலான பொருட்கள் அடையாளம் தெரியாமல் மாறி  இருந்தால், அது பயன்படுத்துவதற்குத் தயார் என்று பொருள். குவியலில் பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் அது சம்பந்தப்பட்ட முறைகளைப் பொறுத்து, பொருட்கள் மட்குவதற்கு  இரண்டு மாதங்களிலிருந்து இரண்டு ஆண்டுகள் வரை ஆகும்.

தொடர்ச்சி.....


ஆதாரம்:

http://www.icrisat.org/vasat/learning_resources/OrganicFAQs/organic_farming.htm    
www.mycorrhizae.com
www.hortsorb.com
http://kendujhar.nic.in/
http://www.greenpeace.org

 
முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016