organic farming
அங்கக வேளாண்மை :: மட்கு எரு : கேள்வி பதில்

மட்கு எரு

நான் பொருட்களை ஒழுங்காக மக்கச் செய்யவில்லை என்பதற்கு அறிகுறிகள் என்ன?

உரமாக்குதல் கடினம் அல்ல. ஆனால், சில நேரங்களில் செயல்முறையில் ஒரு சிறிய கூடுதல் கவனம் தேவை.  சில சூழ்நிலைகளை சரிசெய்வதற்கு இங்கே சில எளிய தீர்வுகள் உள்ளன.

உரமாக்கல் முறை மிக நீண்ட காலம் எடுக்கும் - குவியல் அளவில் குறையாது அல்லது வெப்பத்தை உருவாக்காமல் இருந்தால், பொருட்களை மட்க வைக்க  ஒரு ஊக்குவிப்பான் வேண்டும். குவியல் உலர்ந்து இருந்தால், தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கி விட வேண்டும். குவியல் ஈரமாக மற்றும் சேறாக இருந்தால், இது சூரிய ஒளியில் பரப்பி, உலர் பொருளை சேர்க்க வேண்டும். அத்துடன், குவியலில் உள்ள பொருட்கள் மிகப் பெரியதாக இருந்தால் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். உள்வரும் பொருள்களுடன்  கலக்க "பழைய" உரத்தை சேமித்து வைக்க  வேண்டும்.

உரக் குவியலின் மையம் ஈரமானது, ஆனால் மற்ற பகுதிகள் உலர்ந்தது - உரக் குவியல் மிக சிறியதாக இருக்கலாம். முடிந்தவரை உரக் குவியலை நிரப்பி வைக்க வேண்டும். பழையதுடன் புதியவற்றைக் கலத்தல், ஈரமானதுடன், உலர்ந்ததைக் கலத்தல் மற்றும்  கட்டிகளை உடைத்தல் போன்றவற்றை செய்ய வேண்டும்.

உரக் குவியல் ஈரமானது, நறுமணம் உடையது மற்றும் சூடாகாது - குவியலுக்கு இன்னும் பச்சை பொருட்கள் (நைட்ரஜன்) தேவைப்படலாம். புற்களின் வெட்டுக்கள், பழம் அல்லது காய்கறிகளின் கழிவுகள் அல்லது அங்கக  உரங்களைத் தோட்டத்தின் மையத்தில் இருந்து  தெளிக்க வேண்டும்.

உரக் குவியலில்  அம்மோனியா மணம் வீசுகிறது - குவியல், பல பச்சைப் பொருட்களைக் கொண்டிருந்தால் மேலும் பழுப்பு (கார்பன்) பொருட்களை சேர்க்கலாம். நீங்கள் பல புதிய புற்களின் வெட்டுக்களை சேர்த்தால் இது போல் நடக்கும்.

உரக் குவியல் கந்தக மணம் (அழுகிய முட்டையின்  மணம்) வீசுகிறது - குவியல் ஈரமானதாக இருந்தால், போதுமான காற்று பெற முடியாது இருக்கலாம். குவியலைத் தளர்த்தி, குவியல்களாக உருவெடுத்ததை உடைத்தல், துவாரங்களின் வழியே சில மரப்பட்டைகளை சேர்த்து குவியலுக்கு காற்றோட்டம் கிடைக்க செய்தல் வேண்டும். குவியலைத் திருப்பி விடுவதால்  குவியலுக்கு  நல்ல காற்றோட்டம் கிடைக்கிறது.

உரக் குவியல் பூச்சிகளைக் கவர்கிறது - கொள்கலனில் உரத்தை போட்டு, மூடி  போட்டு  அடைத்து வைப்பதால், விலங்குகளிடமிருந்து மட்கிய உரத்தை பாதுகாக்க முடியும். குவியலின் அடிப்பகுதியை சுற்றி ஒரு குவியலுக்குக் கீழ் பூச்சிகளிடமிருந்து பாதுகாக்க ஒரு  கம்பி வலை அமைக்க வேண்டும். குழியில்  உணவு கழிவுகளை உடனடியாக போட்டு  மறைக்க வேண்டும். இவற்றை, சரியாக செய்வதினால் , மக்கிய உரம், பூச்சிகளை ஈர்க்காது.

சுருள்பாசி உற்பத்தி செய்வது மிகவும் கடினமா, இல்லையா?

தொழில்நுட்ப ரீதியாக, சுருள்பாசி உற்பத்தி, அரிசி உற்பத்தியை விட மிகவும் எளிதான ஒன்று. உண்மையில் பிரச்சினை சிக்கலானது அல்ல, மாறாக புதிதும் அல்ல. படிப்பறிவைப் பொறுத்து, ஒரு வாரத்திலிருந்து ஒரு மாதத்துக்கு இடையே ஒரு பயிற்சி அவசியம்.

தொடர்ச்சி.....


ஆதாரம்:

http://www.icrisat.org/vasat/learning_resources/OrganicFAQs/organic_farming.htm    
www.mycorrhizae.com
www.hortsorb.com
http://kendujhar.nic.in/
http://www.greenpeace.org

 
முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016