organic farming
அங்கக வேளாண்மை :: மட்கு எரு : கேள்வி பதில்

மட்கு எரு

அங்கக விவசாயிகள் எவ்வாறு பயிர்களுக்கு உரமளிப்பர்? மேலும் பூச்சிகள், நோய்கள் மற்றும் களைகளைக் கட்டுப்படுத்துவர்?

மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் ஊட்டச்சத்துகளை வெளிப்படுத்தி, அதை உருமாற்றி பயிர்களுக்கு அளிக்கின்றன. அங்கக விவசாயிகள், உயிருள்ள பொருட்களுக்கு நல்ல ஆரோக்கியத்தைக் கொடுத்து அதன் மூலம் மண் வளத்தை அதிகரிக்க செய்கிறார்கள். மண்ணில் உள்ள அங்ககத் தன்மை, மண் கட்டமைப்பு மற்றும் நீர் கொள்ளும் திறனை அதிகரிக்கிறது. அங்கக விவசாயிகள் மூடு பயிர்கள், உரம், உயிரியல் சார்ந்த மண் திருத்தங்களைக் கொண்டு அங்ககத்தன்மையை அதிகரிக்கின்றனர். இது ஆரோக்கியமான நாற்றுகளை உருவாக்குவதற்கு வழி வகுக்கிறது. மேலும் பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்துகின்றனர். மேலும், மூடு பயிர்கள் மற்றும் நல்ல பயிர் சுழற்சியின் மூலம் களைகள், பூச்சிகள், நோய்க்கிருமிகளைக் கட்டுப்படுத்தி வயலில் ஒரு நல்ல சூழலை உருவாக்குகின்றனர்.

அங்கக வேளாண்மை முறையில் விவசாயிகள் களைகளைக் கட்டுப்படுத்தி, பயிர் சுழற்சி, இயந்திர உழவு மற்றும் கைகளால் களைகளைப் பிடுங்குதல் போன்ற யுக்திகளைப் பயன்படுத்துகின்றனர். அதனுடன் மூடு பயிர்களைப் பயிரிட்டும், களைகளைப் பிடுங்கி எரித்தும் அவை வளர்வதைக் கட்டுப்படுத்துகின்றனர். அங்கக விவசாயிகள் பூச்சிகளிடமிருந்து களைகளைக் கட்டுப்படுத்த பல்வேறு வகையான மண்ணிலுள்ள நுண்ணுயிரிகள்  நன்மை பயக்கும் பூச்சிகள் மற்றும் பறவைகள் போன்றவற்றை சார்ந்துள்ளனர். அவ்வாறு கட்டுப்படுத்த முடியாத பூச்சிகள், அபரித எண்ணிக்கையில் பெருகும் போது, பொறிகள் மற்றும் இனப்பெருக்கத் தடைகள் போன்றவற்றை அங்கக விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். தேசிய வேளாண் அங்ககத்திட்டத்தின் கீழ், அங்கக விவசாயிகள் களைகள், நோய்கள் மற்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த அதற்கு ஏற்பத்தடுப்பு காரணங்களை உபயோகிக்கும் முன்பு சுற்றுச்சூழல் துப்புரவு மற்றும் கலாச்சார நடைமுறைகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். அவ்வகையான தடுப்புக்காரணிகள் அங்கக வேளாண்மையில் பயன்படுத்தப்படும்போது நன்கு கண்காணிக்கப்பட்டு ஆவணப்படுத்தப் படுகின்றது. இம்முறையில் கட்டுப்படுத்தப்படாத களைகள் மற்றும் பூச்சிகளை ஒரு சில தாவரவியல் பொருட்களைக் கொண்டும் செயற்கை அல்லாத பூச்சிக்கொல்லிகளைக் கொண்டும் கட்டுப்படுத்தப்படுகின்றன.

அங்கக முறையில் கால்நடைகள் மற்றும் கோழி வளர்ப்பு எவ்வாறு செய்யப்படுகின்றது?

அங்கக முறையில் இறைச்சி, பால் பொருட்கள் மற்றும் முட்டைகள் போன்றவை அங்கக வேளாண் முறையிலிருந்து கிடைத்த கழிவுகளை உணவாகப் பயன்படுத்தி வளர்க்கப்பட்ட கால்நடைகள் மற்றும் கோழிகளிடமிருந்து பெறப்படுகின்றது. அந்த கால்நடைகள் மற்றும் கோழிகள் இயற்கையான சூழலில் வளர்க்கப்பட வேண்டும். அவைகளுக்கு போதுமான இடம் அளித்து அசை மேய்ச்சலை மேம்படுத்த வேண்டும். நோய்த் தாக்கம் இல்லாத பொழுது அவைகளுக்கு நுண்ணுயிர்க்கொல்லிகள், ஹார்மோன்கள் அல்லது மருந்துகள் அளிப்பது அறவே தடுக்கப்படுகின்றது. எனினும் அவைகளுக்கு நோய்கள் பாதிப்பைத் தடுப்பதற்காக தடுப்பூசிகள் போடப்படுகின்றது. கால்நடைகளுக்கு வரும் நோய்கள் மற்றும் ஒட்டுண்ணிகள் போன்றவற்றைத் தடுக்க சுழற்சி முறை மேய்ச்சல், சரிவிகித உணவு, சுகாதார வீடமைப்பு மற்றும் மன அழுத்தம் குறைப்பு போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தொடர்ச்சி.....


ஆதாரம்:

http://www.icrisat.org/vasat/learning_resources/OrganicFAQs/organic_farming.htm    
www.mycorrhizae.com
www.hortsorb.com
http://kendujhar.nic.in/
http://www.greenpeace.org

 
முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016