organic farming
அங்கக வேளாண்மை :: மட்கு எரு : கேள்வி பதில்

மட்கு எரு

உரமாக்குதல் எவ்வாறு தொடங்கப்பட வேண்டும்?

 படி 1: உரமாக்குதல் களம் அமைக்க இடம் தேர்வு செய்ய வேண்டும்.
படி 2: உரக்குவியலை பச்சை மற்றும் பழுப்புப் பொருட்களைக் கொண்டு உருவாக்கி, பின்னர் பச்சை மற்றும் பழுப்பு பொருட்களைச் சீராக சம்மான எடை            கொண்ட அளவு இருக்கும் படி செய்ய வேண்டும். மேலே உள்ள அடுக்கானது எப்பொழுதும் பழுப்புக் கழிவுகளைக் கொண்டுள்ளதாக இருக்க          வேண்டும்.
படி 3: தேவைப்பட்டால் தண்ணீர் தெளிக்க வேண்டும்.
படி 4: அதன் பின்னர் வெளியிலுள்ள மண்ணை இரண்டும் மம்பட்டி அளவு சேர்த்து நன்றாகக் கலவை செய்து ஒன்றாக்க வேண்டும்.
படி 5: உரமாக்க புதிய கழிவுப்பொருட்களை சேர்க்கும் பொழுது, உரக்குவியல் அடுக்குகளை திருப்பி விட்டு சேர்த்த புதிய பொருட்கள் நடுவில்          இருக்குமாறு செய்ய வேண்டும்.

உரமாக்குதல் செயல்பாடு எவ்வளவு காலம் நடைபெறும்?

உரமாக்குதல் செயல்பாடானது இரண்டு மாதங்கள் முதல் இரண்டு வருடங்கள் வரை நடைபெறும். இந்த காலமானது உரமாக்குதலில் போடப்பட்ட பொருட்கள், குவியலைக் கலைத்து அடுக்காக வைக்க எடுக்கப்படும் முயற்சிகளைப் பொறுத்து மாறுபடும். உரமாக்குதலில் இடப்பட்ட பொருட்கள் எப்பொழுது மக்கி அதன் தன்மை மாறி முற்றிலும் கருப்பாக மற்றும் நொறுங்கும் பருவத்தில் தெரிகிறதோ அப்பொழுது உரம் தயாரானவை என அறியப்படுகின்றது. உரமாதலை சோதிக்க குவியலில் இருந்து சிறு பகுதியை ஒரு பாலித்தீன் பையில் எடுத்துக்கொண்டு அதனை 24 மணி முதல் 48 மணி நேரம் வரை கட்டி வைத்திருந்த பின்னர் திறக்கும் பொழுது எந்த வகையான துர்நாற்றங்களும் வெளிவரவில்லையெனில் உரம் நன்றாக தயாரானது என அறியப்படுகின்றது.

குளிர்காலத்தில் உரமாக்குதல் செய்யப்படலாமா?

உரமாக்குதல் செயல்பாடுகள் குளிர் காலத்தில் நிறுத்தப்பட அவசியமில்லை. ஆனால் உரக்குவியலில் சேர்க்கப்பட்ட பொருட்களின் சிதைக்கும் நுண்ணுயிரிகள் குளிர் காலங்களில் செயலற்ற நிலையில் இருக்கும். இருப்பினும் உரக்குவியல் முற்றிலும் உறைந்த நிலையிலும், பச்சை மற்றும் பழுப்பு பொருட்களை அதில் சேர்க்கலாம். எப்பொழுது வெப்ப நிலை அதிகரிக்கின்றதோ உரக்குவியலில் நுண்ணுயிரிகளின் செயல்பாடு அதிகரித்து உரமாக்குதல் செயல்பாடு நடைபெறத் துவங்கும்.

தொடர்ச்சி.....


ஆதாரம்:

http://www.icrisat.org/vasat/learning_resources/OrganicFAQs/organic_farming.htm    
www.mycorrhizae.com
www.hortsorb.com
http://kendujhar.nic.in/
http://www.greenpeace.org

 
முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016