organic farming
அங்கக வேளாண்மை :: மற்ற கேள்விகள் : கேள்வி பதில்

மற்ற கேள்விகள்  

இறக்குமதி செய்யப்படும் அங்கக உணவுகள் இங்கிலாந்து / ஐரோப்பிய ஒன்றியத்தின் தரத்தையே கொண்டிருக்குமா?

ஆமாம். விவசாயிகள் அல்லது இறக்குமதியாளர்களிடமிருந்து  பெறப்படும் அனைத்து அங்கக உணவுகளும் பதிவு செய்யப்பட்டு வழக்கமான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இறக்குமதியாளர்கள் கீழ்க்கண்டவற்றை நிரூபிக்க வேண்டும்: இறக்குமதி செய்ய விரும்பும் பொருட்கள் கட்டுரை 6 மற்றும் 7 கவுன்சில் விதிமுறை 2092/91 (திருத்தம்) படி இருக்க வேண்டும்; மற்றும் (திருத்தம்) கவுன்சில் விதிமுறை  2092/91 படி கட்டுரை 8 மற்றும் 9 ல் உள்ளபடி சமமான ஆய்வு முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டு, இந்த ஆய்வு முறைகள் நிரந்தரமாக திறம்பட பயன்படுத்தப்பட வேண்டும்.

நான், அவசரமாக ஒரு பொருளை இறக்குமதி செய்ய வேண்டும் எனில் நான் என் அங்கீகாரத்தை விரைவில் பெற முடியுமா?

நாங்கள் பெறப்பட்ட கட்டளைப் படி, விண்ணப்பத்தைக் கண்டிப்பாக செயல்படுத்துவோம். இதை செயல்படுத்த எந்த விதிவிலக்குகளும் இல்லை. உங்கள் விண்ணப்பத்தை முழுமையாக நிறைவு செய்த பின்னர், நாங்கள் வழங்கிய தகவல் திருப்தியளித்திருந்தால் நீங்கள் 10 நாட்களுக்குள் உங்கள் அனுமதியைப் பெற்றுக் கொள்ளலாம். எனினும், இந்த வழக்கில் நாங்கள் எந்த வித உத்தரவாதமும் அளிக்க முடியாது.

யார் சான்றிதழை முடித்து தர வேண்டும்?

சான்றிதழ் வழங்கும் நிறுவனம் மூலம் மூன்றாவது நாட்டில் இருக்கும் ஏற்றுமதியாளர் அல்லது அவர்களால் நியமனம் செய்யப்பட்ட பிரதிநிதிக்கு சான்றிதழ் வழங்கப்படும். இந்த சான்றிதழ் வழங்கும் நிறுவனம் 15 வது பெட்டியில் சான்றிதழ் ஒப்புதல் அளிக்கும்.

யார் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் மற்றும் எவ்வளவு காலம் வைத்திருக்க வேண்டும்?

இறக்குமதியாளர் குறைந்தது இரண்டு ஆண்டு கால ஆய்வுகள் நடந்து முடியும் வரை சான்றிதழைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

சான்றிதழைத் தவறாக நிறைவு செய்தல் அல்லது துறைமுகத்தில் நுழையும் போது சான்றிதழ் இல்லை என்றால் என்ன நடக்கும்?

ஒரு சரியாக பூர்த்தி செய்த சான்றிதழை அளிக்க தவறினால், சுங்க இசைவு மறுக்கப்படும். சான்றிதழ் வந்து சேரும் வரை அல்லது ஒரு சரியான சான்றிதழ் பெறப்படும் வரை, பொருட்கள் சுங்க கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்படும். அங்கக உற்பத்தி சார்ந்த  குறிப்புகலான பெயரிடல்,பெட்டியில் அடைத்தல் மற்றும் அதனை  சார்ந்த   அனைத்து  ஆவணங்களையும்  நீக்கி, வழக்கமான பொருட்களாக சந்தைப்படுத்த வேண்டும். மறு ஏற்றுமதி செய்ய வேண்டும். பொருட்களை அழிக்க வேண்டும்.

தொடர்ச்சி.....


ஆதாரம்:

http://www.icrisat.org/vasat/learning_resources/OrganicFAQs/organic_farming.htm    
www.mycorrhizae.com
www.hortsorb.com
http://kendujhar.nic.in/
http://www.greenpeace.org

 
முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016