organic farming
அங்கக வேளாண்மை :: மற்ற கேள்விகள் : கேள்வி பதில்

மற்ற கேள்விகள்  

அங்கக உணவு மிகவும் விலை உயர்ந்ததா?

பெட்டியில் அடைக்கப்பட்ட, பெயரிடப்பட்ட ரகங்களின் விலை அதிகமாக இருக்கும். உலகின் வளர்ந்த நாடுகளில், இயற்கை உரங்கள் மற்றும் தொழிலாளர்களின் செலவுகள் அதிகமாக இருப்பதால் இந்த விலை உயர்வு கிட்டத்தட்ட உலகளாவியது. ஆனால், இந்தியாவில் இன்னும் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தாமல் மலிவான விலையில் அங்கக உணவு கிடைக்க கூடிய இடங்கள் நிறைய உள்ளன. விவசாயிகள் பயிர் செய்யும் பாரம்பரிய  ரகப் பயிர்களுக்கு எந்த ரசாயனப் பூச்சிக்கொல்லிகள் அல்லது உரங்களின் தேவையும் இருக்காது. ஏனென்றால் பல இடங்களில் அங்கக உணவு இயல்பாகக் கிடைக்கிறது.

"இயற்கை" மற்றும் "அங்கக" உணவுகளுக்கு இடையே வித்தியாசம் இருக்கிறதா?

ஆமாம். "இயற்கை" கோட்பாடு என்பது மிகவும் பரந்ததாக இருக்கும். மேலும் அங்கக உணவுகளை இயற்கை கோட்பாட்டில் சேர்க்க முடியும். ஆனால் அனைத்து இயற்கை உணவுகளும் அங்கக உணவாக இருக்காது. இயற்கை உணவுகள் பொதுவாக பதப்படுத்தப்படாமல் மற்றும் செயற்கை பொருட்கள் கலக்காமல் இருக்க வேண்டும். ஆனால், அங்கக முறையில் வளர வேண்டும் என்பது அவசியம் இல்லை.

அங்கக முறையில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களைக் கழுவ வேண்டுமா?

சாப்பிடும் முன் அனைத்து பழங்கள் மற்றும் காய்கறிகளை சுத்தம் செய்வது, உணவு பாதுகாப்பு உறுதிக்கு உதவும் ஒரு நல்ல யோசனையாகும்.

நாங்கள் எப்படி ரசாயன உரம் பயன்படுத்தாமல் விவசாயம் செய்ய முடியும்?

இயற்கை அளிக்கும் நன்மைகளை, சேதம் இல்லாமல் பயன்படுத்தி கொள்ள வேண்டும். வைக்கோல், புல் மற்றும் விலங்கு கழிவுகளை மறுசுழற்சி செய்யும் போது பெரிய அளவில் மட்கு உரம் கிடைக்கிறது. பயிர்கள் அதனுடைய சொந்தப் பகுதியில் வளரும் போது, வழக்கமாக அந்தப் பயிர்கள் உள்ளூர் பூச்சிகளுக்கு எதிரான, உயர் எதிர்ப்பு சக்தியைக் கொண்டிருக்கின்றன. பல பயிர்கள் சாகுபடி மற்றும் தாவர பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்துவதன் மூலம் பூச்சிகள் கட்டுபடுத்தப்படுகின்றன. நன்மை பயக்கும் பூச்சிகளைப் பெருக்குவது, பூச்சி கட்டுப்பாட்டில் ஒரு உண்மையான மற்றும் சரியான முயற்சி முறையாகும். வரும் முன் காப்பது, அங்கக விவசாயிகளின் முதன்மை உத்தியாக இருக்கிறது.

சாதாரண விவசாயத்தில் என்ன தவறு இருக்கிறது?

இயல்பான, இரசாயன வேளாண்மையில் தவறு என்று நிறைய உள்ளது. ஐந்து அல்லது ஆறு தலைமுறைகளுக்கு முன்பு வரை அல்லது பசுமை புரட்சி வரும் வரை, அங்கக  வேளாண்மை, ஒரு சாதாரண விவசாயம் ஆகும். நவீன இரசாயனம் சார்ந்த வேளாண்மை, அதிக சுற்றுச் சூழல் செலவினங்களை உள்ளடக்கியுள்ளது. இது விவசாயி, அவரது குடும்பத்தினரின் சுகாதாரம் மற்றும் உணவு சாப்பிட்ட மக்களின் நலத்தையும் பாதிக்கும். ஒவ்வொரு ஆண்டும் பூச்சிகள், பூச்சிக்கொல்லிகளுக்கு எதிர்ப்பாகத் தான் வாழ்ந்து வருகின்றன மற்றும் மண் வளத்தை பாதிக்கின்றன.

தொடர்ச்சி.....


ஆதாரம்:

http://www.icrisat.org/vasat/learning_resources/OrganicFAQs/organic_farming.htm    
www.mycorrhizae.com
www.hortsorb.com
http://kendujhar.nic.in/
http://www.greenpeace.org

 
முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016