organic farming
அங்கக வேளாண்மை :: மற்ற கேள்விகள் : கேள்வி பதில்

மற்ற கேள்விகள்  

அங்கக வேளாண்மையில் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்த ஏதேனும் கட்டுப்பாடுகள் உள்ளனவா?

பண்ணை இடுபொருட்களை யன்படுத்தும் போது, விவசாயிகள் தேசிய பட்டியலில் உள்ள அதனுடைய வரம்புகள் குறித்து தெரிந்து வைத்திருக்க வேண்டும். உற்பத்தியாளர்கள், பட்டியலில் பயிருக்கு எந்த உரம் பயன்படுத்த வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறதோ அந்த உரத்தை மட்டும் பயன்படுத்த வேண்டும். உதாரணமாக, பாஸ்பாரிக் அமிலம் கால்நடைகளின் சுகாதாரத்திற்கு பயன்படுத்தப்படும். ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டிற்காக பட்டியலிடப்படும் பொருள் அதற்கு மட்டும் பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக, சோப்பு பூச்சி கட்டுப்பாட்டிற்கு மட்டும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நோயைக் கட்டுப்படுத்த பயன்படுத்துவது இல்லை. சில பொருட்களைப் பயன்படுத்துவதற்கு, குறிப்பிட்ட கட்டுப்பாடுகள் உள்ளன. உதாரணமாக, காப்பர் மண்ணில் அதிகம் சேர்க்கப்படுவது குறைக்கப்பட வேண்டும். எனவே, அவற்றை அதற்கு தகுந்த முறையில் பயன்படுத்த வேண்டும்.

ஒரு விவசாயி ஒரு பொருளைப் பயன்படுத்துவதற்கு என்னென்ன பதிவு ஆவணங்கள் தேவைப்படுகின்றன?

பயிர் மற்றும் மண்ணுக்குப் பயன்படுத்தப்படும் அனைத்துப் பொருட்களையும் ஆவணப்படுத்த வேண்டும். இடு பொருட்களில்  தேவையான மூலப்பொருள்கள் உள்ளனவா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் பொருட்டு  அனைத்து பொருட்களையும்  ஆராய  வேண்டும். சான்றிதழ் வழங்குபவர் பொருட்களை பரிசீலிக்க வேண்டும் அல்லது வெளியே கொடுத்து பரிசீலித்திருக்க வேண்டும்.

ஒரு உரம் 'அங்கக, என பெயரிடப்பட்டு இருந்தால், அதை ஒரு விவசாயி சான்றளிக்கப்பட்ட அங்கக நிலத்தில் பயன்படுத்த முடியுமா?

பெரும்பாலும் அங்கக என பெயரிடப்பட்ட உரம் அங்கக தரத்திற்கு ஏற்றதாக இருப்பது  இல்லை. மேலும் உர அடையாளகுறியீடு, மாநில சட்டங்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. அங்கக உரம் என பெயரிடப்பட தடை  செய்யப்பட்ட  செயற்கை  உரங்களான  யூரியா  அல்லது சாக்கடை நீர் போன்றவற்றை மதிப்பீடு செய்வதில் எச்சரிக்கை தேவைப்படுகிறது.

பூச்சிக்கொல்லிகளை அங்கக விவசாயத்தில் பயன்படுத்த முடியுமா?

பெரும்பாலான பூச்சி கொல்லிகள், அங்கக உற்பத்தியில் பயன்படுத்தத் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் சிலவற்றைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. பயிர் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகள், வீரிய மூலக்கூறைக் கொண்டிருக்க வேண்டும். அவை செயற்கையானவையாக அல்லது தேசிய பட்டியலில் உள்ளபடி இருக்கும்.  மேலும், அனைத்து மந்த பொருட்களும் செயற்கையானவையாக இருக்க வேண்டும் அல்லது EPA பட்டியல் 4-ல் வகைப்படுத்தப் பட்டுள்ளதாக இருக்க வேண்டும்.

தொடர்ச்சி.....


ஆதாரம்:

http://www.icrisat.org/vasat/learning_resources/OrganicFAQs/organic_farming.htm    
www.mycorrhizae.com
www.hortsorb.com
http://kendujhar.nic.in/
http://www.greenpeace.org

 
முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016