organic farming
அங்கக வேளாண்மை :: மற்ற கேள்விகள் : கேள்வி பதில்

மற்ற கேள்விகள்  

எல்லா விவசாய உற்பத்திப் பொருள்களும்   அங்ககப்பொருள் என சான்றிதழ் பெற முடியுமா?

ஆமாம். எந்த ஒரு விவசாய பொருட்களும், மூன்றாம் தரப்பினர் அல்லது மாநில அங்கக சான்றிதழ் தேவைகளைப் பூர்த்தி செய்தால், அது அங்ககப் பொருளாகக் கருதப்படுகிறது. அங்கக உணவுகள் பல்வேறு அலங்கரிக்கப்பட்ட வடிவங்களில் கிடைக்கிறது. அவைகளில் சில பாஸ்தா, சுவையூட்டிகள், உறைந்த சாறுகள், உறைந்த உணவு, பால், ஐஸ் கிரீம் மற்றும் தானியங்கள், இறைச்சி, கோழி, ரொட்டி, சூப்கள், சாக்லேட், குக்கீகள், பீர், ஒயின் மற்றும் ஓட்கா ஆகும். இந்த உணவுகள், அங்ககப் பொருள் என சான்றிதழ் பெற வேண்டுமானால், அனைத்து அங்கக தரத்திற்கு ஏற்ப வளர்த்து, பதப்படுத்தப்பட்டு மற்றும் தரமான ஒரு உயர் நிலையில் பராமரிக்க வேண்டும். அங்கக நார்ப் பொருட்களில் டி-ஷர்ட்டுகள், படுக்கை மற்றும் குளியல் போர்வைகள், மேசை விரிப்புகள், நாப்கின்கள், ஒப்பனை பஞ்சுகள், பெண்களுக்கான சுகாதாரமான பொருட்கள், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பல்வேறு வடிவங்களில் கிடைக்கும் ஆடைகள் அடங்கும்.

அனைத்து அங்கக பொருட்களிலும், பூச்சிக் கொல்லி நச்சுகள் இல்லாமல் இருக்குமா?

சான்றளிக்கப்படும் அங்ககப் பொருட்கள், நச்சுத்தன்மை இல்லாமல் மற்றும் இரசாயன உரங்களைப் பயன்படுத்தாமல் நல்ல தரத்திற்கு உட்படுத்தப்பட்டு வளர்க்கப்படுகிறது. எனினும் வட அமெரிக்காவில் கவனக்குறைவால், கடந்த ஐம்பது வருடங்களாக, அதிகமான மழை, காற்று மற்றும் நிலத்தடி நீர் வழியாக இரசாயன உரங்கள் அங்ககப் பயிர்களை சென்று அடைந்து அவற்றைப் பாதிப்படையச் செய்கின்றன.

அங்கக விவசாயிகள் எப்போதும் பூச்சி கொல்லிகளை பயன்படுத்தலாமா?

நோய், களை மற்றும் பூச்சிகளை வரும் முன் தடுப்பதே விவசாயத்தின் முதன்மை உத்தியாக இருக்கிறது. வளமான மண்ணை உருவாக்குதல் மூலம், ஆரோக்கியமான தாவரங்கள் நோய் மற்றும் பூச்சிகளின் பாதிப்பை எதிர்த்து வளர்கின்றன என்று அங்கக விவசாயிகள், கண்டு பிடித்து உள்ளனர். அங்கக உற்பத்தியாளர்கள் பெரும்பாலும் பருவநிலை, நோய் மற்றும் பூச்சிகளை எதிர்த்து வளரும் இனங்களைத் தேர்வு செய்கின்றனர். பூச்சிகளின் எண்ணிக்கை பெருகி சமநிலையைத் தாண்டும் போது, விவசாயிகள் பூச்சிகளை உண்ணும் விலங்குகள், பூச்சி இனச்சேர்க்கையை அழித்தல், பொறி வைத்தல் போன்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வர். இந்த முயற்சி தவறினால், சான்றிதழ் அளிப்பவரிடம் மூலிகைப் பூச்சி விரட்டி மற்றும் மண்ணுக்குத் தீங்கு விளைவிக்காத பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்த அனுமதி பெற வேண்டும். தாவர வகையிலிருந்து பெறப்பட்ட பூச்சிக்கொல்லிகள், ஆக்சிஜன் மற்றும் சூரிய ஒளி மூலம் விரைவில் உடைக்கப்படுகின்றன.

ஏன் அங்கக உணவுப்பொருள்களின் விலை சில நேரங்களில் அதிகரித்துக் காணப்படுகிறது?

சாகுபடி, அறுவடை, போக்குவரத்து மற்றும் சேமிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பார்க்கும்பொழுது அங்கக உணவுப்பொருட்களின் விலை வழக்கமான பொருட்களின் விலையையே பிரதிபலிக்கின்றன. அங்கக முறையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் கடுமையான விதிமுறைகளுக்கு உட்படுத்தப்படுவதால், தொழிலாளர் மற்றும் மேலாண்மை செலவு அதிகரிப்பதால் சிறிய அளவில் மட்டுமே செயல்படுத்த முடியும். மாசுபட்ட நீரை சுத்தப்படுத்துதல், சீரழிந்த மண்ணை சரி செய்தல், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் சுகாதார பராமரிப்பு போன்றவற்றிட்கு ஆகும் மறைமுக செலவுகளை வழக்கமான உணவு உற்பத்தி செலவுகளின் கீழ் கொண்டு வர வேண்டும். இதை கருத்தில் கொள்ளும் போது அங்கக உணவுகளின் உற்பத்திக்கு செய்யப்படும் செலவுகள் பெரும்பாலும் மலிவானது.

தொடர்ச்சி.....


ஆதாரம்:

http://www.icrisat.org/vasat/learning_resources/OrganicFAQs/organic_farming.htm    
www.mycorrhizae.com
www.hortsorb.com
http://kendujhar.nic.in/
http://www.greenpeace.org

 
முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016