organic farming
அங்கக வேளாண்மை :: மண்புழு உரம் : கேள்வி பதில்

மண்புழு உரம் 

புழுக்கள் எப்படி இனப்பெருக்கம் செய்கின்றன?

மட்க கூடிய செயலை செய்யும் புழுக்கள் இருபாலினம் கொண்டவை. ஒரு முதிர்ந்த புழு, ஆண் மற்றும் பெண் பாலியல் உறுப்புகளைக் கொண்டு இருக்கும். 55-நாட்களுக்குப்பிறகு, ஒவ்வொரு முதிர்ந்த புழுவும் பாலியல் முதிர்ச்சி அடையும். இனச்சேர்க்கைக்கு பிறகு, ஒவ்வொரு கூட்டு புழு கூட்டிலும் சுற்றுச் சூழ்நிலை மற்றும் உணவை பொறுத்து, மூன்று முதல் இருபது புழுக்கள் இருக்கும்.

மண் புழுக்கள் என்ன பொருட்களை உணவாக எடுத்து  கொள்கின்றன ?

புழுக்கள், ஈரமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மற்றும் கார்பன் குறைவாக உள்ள  பொருட்களை  உணவாக எடுத்து கொள்ளும். அழுகும் பழங்கள் அல்லது காய்கறிகள், சமையலறை கழிவுகள், சில விலங்குகளின்  எரு, தோட்ட கழிவு மற்றும் உரம், செதுக்கப்பட்ட அட்டைகள் ஆகியவை சிறந்த உணவுகளாகும் . அதிக அமோனியா அல்லது நைட்ரஜன் உள்ள பொருட்கள், கொழுப்பு மற்றும் எண்ணெய் அதிக அளவில் உள்ள பொருட்கள், வெங்காயம், பூண்டு போன்ற பொருட்களை புழுக்கள் விரும்பாது.

ஒரு மண் புழு எவ்வளவு சாப்பிட முடியும்?

புழுக்கள், நாள் ஒன்றுக்கு அதன் உடல் எடை அளவு சாப்பிட முடியும் மற்றும் அந்தப்புழுக்களின் வகையைப் பொறுத்தும், புழுக்கள் எடுத்து கொள்ளும் உணவின் தரத்தை பொருத்தும் மற்றும் அது இருக்கும் சூழ்நிலையைப் பொறுத்து உணவின் அளவு வேறுபடும். மண் புழுக்கள் நுண்ணிய மற்றும் அங்கக பொருட்களை சிதைப்பதற்கு முன்னர் பல பில்லியன் நுண்ணுயிர்களான பாக்டீரியா, பாசிகள், பூஞ்சை மற்றும் நூற்புழுக்கள் ஆகியவற்றின் உதவியுடன் அங்கக பொருட்களை மென்மையாக்கி அவற்றை துகள்கள் ஆக்குகின்றன.  புழுக்கள் மூலம் அங்கக பொருளைப் பதப்படுத்த 90 நாட்கள் எடுத்துக்கொண்டு, அறுவடைக்குத் தயாராக இருக்கும்.

மண்புழுக்களின்  முக்கியத்துவம் என்ன?

மண்புழுக்கள், சுற்றுச்சூழலுக்கு நண்பனாக விளங்கி நீண்ட காலத்திற்கு மண் பாங்குபடுத்தும் பொருட்களாக செயல்படுகின்றன. இவை தாவரங்களுக்கு உடனடியாக கிடைக்கும் சத்துக்களைகொண்டுள்ளன. இதனால் மண் செயல்திறனை பெருமளவு அதிகரித்து, பயிர் விளைச்சலை மேம்படுத்துகின்றன. அறிவியல் ஆராய்ச்சி நடத்திய விளைவுகளின் படி, வேர்மிகாஸ்ட் 30-50% நைட்ரஜன் எடுத்துக்கொள்ளும் அளவை அதிகரிக்கும், 100% பொட்டாசியம் மற்றும் பாஸ்பேட் எடுத்துக்கொள்ளும் அளவை அதிகரிக்கும். மேலும் வேர் நீளம், வேர் எண்ணிக்கை மற்றும் தண்டு நீளம் அதிகரிப்பு, வெள்ளரிக்காய் மற்றும் தக்காளியில் 40-60% விளைச்சலை அதிகரிக்கும் என்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. மேலும் இவை மண் புழு உரத்தின் நறுமணத்தையும்  (flavour) வாழ்நாளையும் அதிகரிக்கிறது.


ஆதாரம்:

http://www.icrisat.org/vasat/learning_resources/OrganicFAQs/organic_farming.htm    
www.mycorrhizae.com
www.hortsorb.com
http://kendujhar.nic.in/
http://www.greenpeace.org

 
முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016