organic farming
அங்கக வேளாண்மை :: அங்கக ஆவணங்கள்

பங்கேற்பு உத்தரவாத அமைப்பின், அங்கக உற்பத்திக்கான தேசிய தரநிலைகள்

கால்நடை உற்பத்திக்கான நிலையான தேவைகள் :

மாற்றுத்தேவைகள்:            

கால்நடைகள் உட்பட, முழு பண்ணையையும், அங்ககப் பண்ணையாக ஒரு குறிப்பிட்ட கால மாற்றத்திற்குள் மாற்ற வேண்டும். பகுதி மாற்றம் அல்லது இணையான மாற்றங்கள் பங்கேற்பு உத்தரவாத அமைப்பில் 24 மாதங்களுக்குப்பிறகு அனுமதிக்கப்பட வேண்டும். எல்லா விலங்குகளுக்கும், குறைந்த மாற்றுக்காலம் 12 மாதங்களுக்குக் குறைவாக அனுமதிக்கப்படாது. முட்டை உற்பத்தி கோழிகளுக்கான மாற்றுக்காலம் 30 நாட்கள் ஆகும். இறைச்சிக்காகப் பயன்படுத்தப்படும் கோழிக்குஞ்சுகளுக்கு, குஞ்சு பொரிக்கப்பட்ட இரண்டாவது நாளில் இருந்து அங்கக உணவை அளிக்க வேண்டும்.

வளர்ப்பு சூழ்நிலை:        

போதுமான இடவசதி, சுத்தமான காற்று, சூரிய வெளிச்சம், தண்ணீர், விலங்குகள் ஓய்வெடுக்கும் அறை, அதிக சூரிய ஒளி பாதிப்பிலிருந்து தகுந்த பாதுகாப்பு, மழை மற்றும் காற்று போன்றவற்றிலிருந்து பாதுகாக்கும் வண்ணம் விலங்குகளின் சுற்றுச்சூழல் மேலாண்மை இருக்க வேண்டும். விறை நீக்கம், வால் நறுக்குதல், கொம்பு சீவுதல் மற்றும் மூக்கு வளையமிடுதல் தவிர எந்த உறுப்புகளையும் நீக்கவோ, துன்புறுத்தவோ கூடாது.

இனங்கள் மற்றும் இனப்பெருக்கம் :

உள்ளூர் நிலைமைகளுக்கு தகவமைத்துக் கொள்ளக்கூடிய விலங்கு இனங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இனப்பெருக்க இலக்குகள், விலங்குகளின் இயற்கை நடத்தையைப் பொறுத்து வேறுபட்டு இருக்கக்கூடாது. ஆனால் நல்ல சுகாதாரத்தைப்பொறுத்து அமைய வேண்டும். செயற்கை முறையில் கருவூட்டல் அனுமதிக்கப்படுகிறது. ஹார்மோன் வெப்ப சிகிச்சை மற்றும் தூண்டப்பட்ட பிறப்புகள் அனுமதிக்கப்படுவதில்லை. மரபணு மாற்றம் செய்யப்பட்ட இனங்களுக்கு அனுமதி இல்லை.

கால் நடை உணவு:

அங்கக முறையில் வளர்க்கப்பட்ட  நல்ல தரமான  தீவனங்களை கால்நடைகளுக்குக் கொடுக்க வேண்டும். தீவன பதப்படுத்தும் தொழிற்சாலைகளிலிருந்து பெறப்படும் பொருட்களை உபயோகிக்கலாம். சாயப்பொருட்களை, அங்கக விலங்குகள் உற்பத்தியில் உபயோகப்படுத்தக்கூடாது.
கீழே கொடுக்கப்பட்ட பொருட்கள், விலங்குகளின் தீவனங்களில் சேர்க்கவோ, கொடுக்கவோ கூடாது.

  • செயற்கை / இரசாயன வளர்ச்சி ஊக்கிகள் (அ) தூண்டிகள்
  • செயற்கை பசியூட்டிகள்
  • பதப்படுத்திகள்
  • செயற்கை சாயப்பொருட்கள்
  • யூரியா
  • பண்ணை விலங்குகளின்  உப பொருட்கள் (எ.கா: இறைச்சிப்பொருட்களின் கழிவு)
  • எச்சங்கள், சாணம் மற்றும் மற்ற உரங்கள்
  • ஹெக்சேன் போன்ற கரைப்பான் மற்றும் சோயா மற்றும் கடுகு பிண்ணாக்கு பிரித்தெடுக்கும் பொருள் போன்றவற்றை தீவனங்களில் பயன்படுத்தக்கூடாது.
  • மற்ற இரசாயனப்பொருட்களைக்கொண்டு தீவனம் தயாரித்தல்
  • தூய அமினோ அமிலங்கள்
  • மரபணு மாற்றம் செய்யப்பட்ட பொருட்கள் / உயிரினங்கள், இயற்கைத் தோற்றத்தில் தேவையான அளவு மற்றும் தரங்களில் பயன்படுத்தும்பொழுது பயன்படுத்தலாம்.
கால்நடை மருத்துவம் :

விலங்குகளின் நலவாழ்வில் நோய் சிகிச்சை தேர்வு முதன்மையாகக் கருதப்படுகிறது. ஹோமியோபதி, ஆயுர்வேதம், யுனானி மருத்துவம் மற்றும் குத்தூசி மருத்துவம் உள்ளிட்ட இயற்கை மருந்துகள் மற்றும் முறைகள் வலியுறுத்தப்படுகின்றன. வேறு எந்த மாற்று மருந்துகளும் கிடைக்காத பொழுது வழக்கமான மருந்துகள் பயன்படுத்தியதிலிருந்து, நிறுத்தப்பட்ட காலம் குறைந்தது இரட்டை காலமாக இருக்க வேண்டும்.
பின்வரும் பொருட்கள் பயன்படுத்தத் தடை செய்யப்பட்டுள்ளது.

  • செயற்கை வளர்ச்சி ஊக்கி
  • உற்பத்தி, வளர்ச்சி தூண்டிகள் அல்லது வளர்ச்சியைக் குறைக்கும் செயற்கைப் பொருட்கள்
  • தனிப்பட்ட விலங்குகளின் இனப்பெருக்கக் குறைபாட்டை சரிசெய்ய, வெப்பத்தைத் தூண்டும் மற்றும் வெப்ப ஒருங்கிணைப்பு ஹார்மோன்கள் பயன்படுத்தப்படுகிறது.
  • நோய் அறியப்பட்ட அல்லது குறைபாடுள்ள பகுதிகளில் தடுப்பூசி மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. சட்டப்படி தேவைப்படும் தடுப்பூசிகள் அனுமதிக்கப்படுகிறது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட தடுப்பூசிகள் தடை செய்யப்பட்டுள்ளது.
 

முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2009-16