organic farming
அங்கக வேளாண்மை :: அங்கக ஆவணங்கள்

பங்கேற்பு உத்தரவாத அமைப்பின், அங்கக உற்பத்திக்கான தேசிய தரநிலைகள்

பயிர் உற்பத்திக்கான நிரந்தரமான தேவைகள் :

விதை மற்றும் விதை கரணை தேர்வு செய்தல் :
விதை மற்றும் விதைக்கரணைகள், மண், காலநிலை, அங்கக மேலாண்மை, பூச்சி மற்றும் நோய் எதிர்ப்பு மற்றும் அங்கக வம்சாவளிக்கு நன்கு பொருந்தும் வகையில் தேர்வு செய்ய வேண்டும். அங்கக முறையில் வளர்க்கப்பட்ட விதைகள் கிடைக்கவில்லையெனில், ரசாயனப்பொருட்களைக்கொண்டு விதை நேர்த்தி செய்யப்படாத, பாரம்பரிய / வழக்கமான விதைகளை உபயோகிக்கலாம். மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள், மரபணு மாற்று தாவரங்கள் (அல்லது) நடவுப்பயிர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

கருத்தரித்தல்:

  • கனிம உரங்களை, இயற்கையான தூள் வடிவத்தில் துணை ஆதாரமாகப் பயன்படுத்தலாம்.
  • செயற்கை உரங்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்த வடிவத்திலும் பயன்படுத்தக்கூடாது.
  • கருத்தரித்தல் கொள்கையில், தாவரங்கள் அல்லது விலங்குகளின் தோற்றம், எளிதில் மட்கக்கூடிய பண்ணை நுண்ணுயிர்களின் பொருட்கள் முக்கியப்பங்கு வகிக்கின்றன.
  • பசுந்தாள் உரம், ஊடு பயிர்கள் அல்லது பயறு வகைப்பயிர்களின் பயிர்த்திட்டம், திட்டமிடலில் ஒருங்கிணைந்த பகுதியாக செயல்படுகின்றன. இடுபொருட்கள் தயாரிப்பில்    எந்த வித தடை செய்யப்பட்ட பொருட்களையும் பயன்படுத்தக்கூடாது.
  • நுண்ணுயிர் தயாரிப்புகளான உயிர் உரங்கள், உயிராற்றல் தயாரிப்புகள், திறம் வாய்ந்த நுண்ணுயிர்க்கலவைகள் போன்றவற்றையும் உபயோகப்படுத்தலாம்.

பூச்சி, நோய் மற்றும் களை மேலாண்மை உட்பட வளர்ச்சி ஊக்கிகள்

  • பூச்சி எதிர்ப்பு ரகங்கள், தகுந்த பயிர் சுழற்சி, பசுந்தாள் உரங்கள், சமநிலை உரமளிப்பு, ஆரம்பப் பயிர் நடவு, மூடாக்கிடல், கலாச்சார, இயந்திர மற்றும் உயிரியல் கட்டுப்பாட்டு முறைகள், பூச்சி வாழ்க்கை சுழற்சியில் ஏற்படும் இடையூறுகள், பூச்சி எதிரிகள் நீடித்திருத்தல் போன்றவை பூச்சி மேலாண்மை திட்டத்தின் அடிப்படைக்காரணிகள். வெப்பம் சார்ந்த களைக்கட்டுப்பாடு (அல்லது) வெப்பத்தைக் கொண்டு மண்ணில் கிருமி நீக்கம் செய்தல் போன்றவை மிகவும் அவசியம்.
  • நுண்ணுயிர் பூச்சிக்கட்டுப்பாடு தயாரிப்புகளான உயிர் பூச்சிக்கொல்லிகள் உபயோகிக்கலாம். பண்ணை நொதித்தல் பொருட்கள் மற்றும் தாவரச்சாறுகளையும் பயன்படுத்தலாம். பண்ணைக்கு வெளியே பெறப்படும் நுண்ணுயிர் அல்லது தாவரத் தயாரிப்புகள், அங்கக இடுபொருட்களாகப் பயன்படுத்தப் படுகின்றன.
  • செயற்கைக் களைக்கொல்லிகள், பூஞ்சாணக்கொல்லி, பூச்சிக்கொல்லிகள் மற்றும் செயற்கைத் தயாரிப்புகளான, இரசாயன பயிர் வளர்ச்சி ஊக்கிகள் மற்றும் செயற்கை சாயங்கள் உள்ளிட்ட அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.

உபகரணங்கள் மற்றும் சேமிப்பு கொள்கலன்கள்:
              அங்ககப் பண்ணையில், உபகரணங்கள், இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பயன்படுத்துவதற்கு முன் நன்கு கழுவி சுத்தம் செய்து பின்பு உபயோகிக்க வேண்டும். அறுவடை, சேமிப்பு மற்றும் அங்ககப்பொருட்களின் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் பைகள் மற்றும் கொள்கலன்கள் நன்கு சுத்தம் செய்து எந்த இரசாயனத் தொற்றுகள், மாசுக்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும், இந்தப்பைகளை வழக்கமான பொருட்கள் சேமித்து வைக்கப் பயன்படுத்தியும் இருக்கக் கூடாது. எல்லா கொள்கலன்கள் மற்றும் பைகளை அங்ககப்பொருட்கள் என்று பெயரிட வேண்டும்.

சேமிப்பு மற்றும் போக்குவரத்து :
            அங்ககப் பொருட்களை, எந்த நேரங்களிலும், அங்ககப் பொருட்கள் அல்லாத பொருட்களுடன் கலக்காமல் பாதுகாக்கப்பட வேண்டும். செயற்கை அல்லது இரசாயன பூச்சிக்கொல்லிகள்/புகையான்கள் சேமிப்புக்கிடங்கில் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இயற்கையான அல்லது பாரம்பரிய முறைகளில் அங்ககப்பொருட்களை சேமித்து வைக்கலாம். கார்பன்-டை ஆக்ஸைடு, நைட்ரஜன் அல்லது மற்ற வாயுக்களை உபயோகப்படுத்தலாம்.

 

முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2009-16