organic farming
அங்கக வேளாண்மை :: அங்கக ஆவணங்கள்

பங்கேற்பு உத்தரவாத அமைப்பின், அங்கக உற்பத்திக்கான தேசிய தரநிலைகள்

உணவு பதப்படுத்துதல், கையாளுதல் மற்றும் சேமிப்பு தேவைகளுக்கான பொதுவான தரநிலைகள் :

பண்ணையில், பண்ணைக்கு வெளியே அல்லது கூலிக்கு ஆட்கள் எடுத்து, அங்ககப்பொருட்களைப் பதப்படுத்துதல், கையாளுதல் மற்றும் சேமித்து வைக்கக்கூடிய முறைகளைக் கையாளுதல், பங்கேற்பு உத்தரவாத அமைப்பில் சான்றிதழ் பெற்ற பின்னர் மேற்கொள்ள வேண்டும். மேலும் முழு செயல்களும் பங்கேற்பு உத்தரவாத குழு உறுப்பினர்களின், பார்வையின் கீழ் மேற்கொள்ள வேண்டும். தேவையெனில், பல பங்கேற்ப உத்தரவாத அமைப்புகள் ஒன்றாக இணைந்து, ஒரு கூட்டமைப்பாகப் பதப்படுத்துதல், கையாளுதல் மற்றும் சேமிப்பு செயல்களில் ஈடுபடலாம்.

சேமிப்பு :

அங்ககப்பொருட்களை, இரசாயனப்பொருட்களுடன் சேர்த்து சேமித்தல், போக்குவரத்து செய்தல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். மேலும் சரியாக  பெட்டியில் அடைக்காமல் மற்றும் பெயரிடப்படாமல் போக்குவரத்து செய்யக்கூடாது.
மேலும், இந்த இரண்டு பொருட்களும், ஒன்று கலக்காமல் தனியாகப்பிரித்து வைக்க வேண்டும்.
செயற்கைப்பதப்படுத்திகள், இரசாயனங்கள், புகையான்கள் போன்றவற்றை சேமிப்பு அறைகளில் பயன்படுத்தக் கூடாது. குளிர் வெப்பம், உறைபனி, உலர்த்தி, ஈரப்பதம் கட்டுப்படுத்தி மற்றும் நைட்ரஜன், கார்பன்டைஆக்ஸைடு கொண்டு புகைமூட்டம் செய்தல் போன்றவற்றை அனுமதிக்கலாம். பழங்களைப்பழுக்க வைக்க எத்திலீன் வாயுவைப் பயன்படுத்தலாம்.

கலவைக்கூறு, சேர்க்கைப்பொருட்கள் மற்றும் பதப்படுத்தும் கூறுகள் :

  • வேளாண் வழி சார்ந்த எல்லா சேர்க்கைப்பொருட்கள் மற்றும் கலவைக்கூறுகள்  உத்தரவாத அமைப்பில் அங்ககப்பொருளாக இருக்க வேண்டும்.
  • தண்ணீர் மற்றும் உப்புகள் எந்தவித தடைகளும் இல்லாமல் உபயோகிக்க வேண்டும்.
  • நுண்ணுயிர் தயாரிக்கப் பயன்படுத்தும் கலவைக்கூறுகள் அங்ககப்பொருளாக இருக்க வேண்டும்.
  • அங்கக வேளாண்மை சார்ந்த பொருட்களைப் பயன்படுத்த வில்லையெனில்,

NPOP யின் கீழ் வழங்கப்படும் வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். மேலும், வேளாண் சாரா சேர்க்கைப் பொருட்கள் 5%-க்கும் அதிகமாகப் பயன்படுத்தக்கூடாது.

  • மரபணு மாற்றம் செய்யப்பட்ட பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது.
  • தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் இரசாயனம் சார்ந்த பொருட்களை உபயோகிக்கக் கூடாது.
  • பதப்படுத்துதல்:
                அனைத்து செயலாக்க உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள் நன்கு கழுவிய பின்னர் எந்த வித தொற்றுக்கிருமிகள் இல்லாமல் பதப்படுத்துதலில் பயன்படுத்த வேண்டும்.
  • உபகரணங்கள் மற்றும் வடிகட்டிகள், மாசு இல்லா வண்ணம் இருக்க வேண்டும்.
  • அங்ககப்பொருட்களை இரசாயனப்பொருட்களுடன் கலந்து பொருட்கள் மாசுபடுவதைத் தவிர்க்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
  • NPOP யின் கீழ் சான்றழிக்கப்பட்ட பதப்படுத்தும் கூடங்கள் செயலாக்கத்தில் கொண்டு வர வேண்டும்.
  • அங்ககப்பங்கேற்பு உத்தரவாத அமைப்பின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட செயல்முறைகள்: - இயந்திரவியல், இயற்பியல், உயிரியல், புகை பிரித்தெடுத்தல், படியச்செய்தல் மற்றும் வடிகட்டுதல், நீர், எத்தனால், தாவர மற்றும் விலங்கு எண்ணெய், வினிகர், கார்பன்டை ஆக்ஸைடு, நைட்ரஜன், கார்பாலிக் அமிலங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்திப் பிரித்தல் முறையை மேற்கொள்ளலாம். எல்லா கரைப்பான்கள்/ திரவ பிரித்தெடுத்தல் பொருட்கள் உணவு தர நிர்ணயத்தில் இருக்க வேண்டும்.
  • கதிர் வீச்சுகளுக்கு அனுமதி இல்லை.

பைகளில் அடைத்தல் மற்றும் குறியிடுதல் :

  • பேக்கிங் பொருட்கள் உயிரியல் ரீதியான தன்மையைப் பாதிக்கக்கூடாது.
  • பங்கேற்பு உத்தரவாத குழுக்களுக்கான, விளக்கம், அடையாளம் மற்றும் அடையாளக்குறியீடு தெளிவாக அச்சிடப்பட வேண்டும்.
  • ஒற்றை மூலப்பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட பொருட்கள் எல்லா தரநிலைகளையும் உள்ளடக்கி இருந்தால் அவற்றைப் பங்கேற்பு உத்தரவாத அமைப்பின் அங்ககப்பொருள் என குறியிட்டு அழைக்கலாம்.
  • கலக்கப்பட்ட பொருட்கள்/ பதப்படுத்தப்பட்ட பொருட்கள் குறைந்தது 95% என இருந்தால் அவற்றை  பங்கேற்பு உத்தரவாத அமைப்பின் அங்ககப்பொருள் என குறியிட்டு அழைக்கலாம்.
  • அங்ககப்பொருட்களின் கலவைக்கூறு 95 மற்றும் 70% என இருப்பின் அவற்றை  பங்கேற்பு உத்தரவாத அமைப்பின் அங்ககக் கலவைக்கூறு என குறியிடலாம்.
  •   பங்கேற்பு உத்தரவாத அமைப்பின் உள்ளூர் குழுக்கள் மற்றும் முறையாக அங்கீகரிக்கப்பட்ட கூட்டமைப்புகள் மட்டுமே உற்பத்தி பொருட்களைப், பதப்படுத்தி பைகளில் அடைக்கப்பட்ட பொருட்களின் மேல் பங்கேற்பு உத்தரவாத அமைப்பின் அடையாளக் குறியீட்டைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது.
 

முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2009-16