அங்கக வேளாண்மை :: அங்கக வேளாண் நுட்பங்கள்

எண்ணெய் வித்துக்களுக்கான விதை நேர்த்தி தொழில்நுட்பங்கள்

நிலக்கடலை


  • முளைத்த நிலக்கடலை விதைகளை கொண்டு விதைப்பு செய்வதன் மூலம் சீரான பயிர் எண்ணிக்கையை பெறுவதால் அதிக மகசூல் காணலம்.
  • சாக்குப் பையில் விதைகளை கட்டி தண்ணீரில் 4-6 மணிநேரம் ஊற வைக்கவும்.
  • இதை ஈரமான மற்றொரு சாக்குபை கொண்டு 12-14 மணிநேரம் மூடி வைக்க வேண்டும்.
  • முளைத்த விதைகளை நிழலில் 3-4 மணிநேரம் உலர்த்தி பின் ரைசோபியம் (600 கிராம்/ 110-120 கிலோ விதை) கொண்டு விதை நேர்த்தி செய்து ஓரிரு நாட்களில் விதைக்க வேண்டும்.
  • விதைப்பதற்கு முன் விதைகளை கள்ளிப்பால் கொண்டு (100 கி கள்ளிப்பால் / 10 கிகி விதைகள்) பூச வேண்டும். இது பயிர்களை பூச்சி மற்றும் நோய் தாக்குதலிலிருந்து பாதுகாக்கிறது.
  • விதைப்பதற்கு 12 மணி நேரத்திற்கு முன்பு விதைகளை வெங்காயக் கரைசலில் (250 கிராம்/2 லி தண்ணீர்) ஊற வைத்து விதைப்பதால் இலைக்கருகல் நோயை தடுக்கலாம்.
  • விதைப்பதற்கு 24 மணிநேரத்திற்கு முன்பு விதைகளை டிரைகோடெர்மா விரிடி
    (4 கிராம்/ 1 கிலோ விதை) அல்லது சூடோமோனாஸ் ஃப்ளோரசன்ஸ் (10 கிராம்/1கிலோ விதை) உடன் கலந்து விதைக்க வேண்டும்.
  • விதைப்பதற்கு முன் விதைகளை ரைசோபியம் (5 கி/ 1 கிலோ விதை) மற்றும் ஆரிய அரிசிக் கஞ்சியுடன் கலந்து, 30 நிமிடங்கள் நிழலில் உலர்த்த வேண்டும். விதையுறை கிழிய வாய்ப்பு உள்ளதால், இந்த விதை நேர்த்தியை கவனமாக புரியவும்.
  • விதைப்பதற்கு முன் விதைகளை, ஜீவாமிர்தம் அல்லது அமிர்தக் கரைசல் அல்லது பஞ்சகாவ்யாவில் 4-6 மணிநேரம் ஊற வைத்து நிழலில் உலர்த்தவும்.
seed treatment in paddy

தேங்காய்


விதைப்பதற்கு எடுத்துக்கொள்ளப்படும் தேங்காய்களை பாசன நீர் மேற்பரப்பில் அல்லது நீரில் மிதக்க வைக்க வேண்டும். இதனால் முளைப்பு அதிகரிக்கும் மற்றும் விதைப்பு தேங்காய் 1 மாதத்திற்குள் தளிர் விடும். இந்த முறை கேரளாவில் பரவலாக பின்பற்றப்பட்டு வருகிறது.


Updated on : Feb 2015

 
முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2009-16