அங்கக வேளாண்மை :: அங்கக வேளாண் நுட்பங்கள்

பயறுவகை பயிர்களுக்கான விதை நேர்த்தி தொழில்நுட்பங்கள்


  • விதைகளின் முளைப்புத்திறன் அதிகரிக்க விதைப்பதற்கு முன் விதைகளை நீரில் ஊற வைக்கவும்.
  • மஞ்சள் மற்றும் இனிப்புகொடி தூள் (50 கி மஞ்சள் தூள் + 15 கி இனிப்பு கொடி தூள் + 10 மிலி தண்ணீர்) இரண்டையும் கலந்து கொண்டு விதைகளை பூசி 10 நிமிடங்களுக்கு வைத்து பிறகு விதைக்க வேண்டும். இது பயிர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
  • கடுகு எண்ணெய் (100மிலி/40 கிலோ விதை) கொண்டு விதைகளை பூசி பின் விதைப்பு செய்வதால் வாடல் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.
  • துவரை மற்றும் கொண்டைக்கடலை விதைகளை தயிரில் 24-48 மணி நேரம் வரை ஊற வைத்து பின் விதைப்பு செய்வதால் வாடல் நோயை கட்டுப்படுத்தலாம்.
seed treatment in paddy

கடலை


நன்கு புளித்த மோரில் விதைகளை கலந்து நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும். இந்த அமிலத் தன்மை கொண்ட மோர் வாடல் மற்றும் வேர் அழுகல் நோயின் தாக்கத்தைக் குறைக்கிறது.

உளுந்து மற்றும் பச்சைப் பயறு


விதைகளை டிரைக்கோடெர்மா விரிடி (4 கிராம்/ 1 கிலோ விதை) அல்லது சூடோமோனாஸ் (10 கிராம் / 1கிலோ விதை) கொண்டு விதை நேர்த்தி செய்வதால் நோயை உண்டாக்கும் நுண்ணுயிர்களிலிருந்து பாதுகாக்கலாம்.

பச்சைப்பயறு விதைகளை சிற்றுருண்டையாக்கல்


பிளாஸ்டிக் தட்டில் விதைகளை எடுத்து அதில் சிறிய அளவு மைதா கலக்க வேண்டும். இதனை மெதுவாக குலுக்கி மைதா விதைகளின் மேல் ஒரு சீராக ஒட்டும்படி செய்ய வேண்டும். இதனுடன் அரப்புத்தூள் கலந்து மேற்கூறியபடி குலுக்க வேண்டும். இந்த விதை உருண்டைகளை நிழலில் உலர்த்தி பின் விதைக்க வேண்டும் . இந்த செயல்முறை சிறிய மற்றும் ஒழுங்கற்ற விதைகளை கையாள உதவுகிறது. இது துல்லிய விதைப்பு மற்றும் விதையின் தோற்றத்தை உறுதிபடுத்துகிறது.

 

Updated on : Feb 2015

 
முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2009-16