organic farming
அங்கக வேளாண்மை :: அங்கக இடு பொருட்கள் மற்றும் உத்திகள்

ஜவிக் ஜபுத்ரா (பண்ணைத் தோட்டம்)

பயிர்ப்பாதுகாப்பு:

1.மாட்டு கோமியம்:

பழைய மாட்டு கோமியம் 1 பங்குடன், 20 பங்கு தண்ணீர் சேர்த்து, இலைவழியாகத் தெளிப்பதால், நோய்க்காரணிகள் மற்றும் பூச்சிகள் கட்டுப்படுவதுடன், ஒரு சிறந்த பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும் செயல்படுகின்றது.

2.புளித்த தயிர்:

இந்தியாவின் சில பகுதிகளில் புளித்த தயிர் (மோர்) வெள்ளை ஈ,  தத்துப்பூச்சி மற்றும் அசுவினி போன்ற பூச்சிகளின் மேலாண்மையில் பயன்படுத்தப்படுகிறது.

தாஸ்பரணி சாறு:

கீழே கொடுக்கப்பட்டுள்ள தாவர பாகங்களை ஒரு 500 லிட்டர் டிரம்மில் போட்டு நசுக்க வேண்டும். வேம்பு இலைகள் – 5 கிலோ, விட்டக்ஸ் நெகுண்டா இலைகள் – 2 கிலோ, அரிஸ்டோலோக்கியோ இலைகள் – 2 கிலோ, பப்பாளி இலைகள் -2 கிலோ, டினோஸ்பெரா கார்டிபோலியா இலைகள் – 2 கிலோ, பூண்டு பேஸ்ட் 250 கிராம், மாட்டு சாணம்–3 கிலோ, மாட்டு கோமியம்-5 லிட்டர், தண்ணீர் -200 லிட்டர். எல்லாப்பொருட்களையும் பொடியாக நசுக்கி, 1 மாதம் வரை நொதிக்க விட வேண்டும். இந்த டிரம்மை நிழலில் வைத்து ஒரு சாக்குப்பை கொண்டு மூடி வைக்க வேண்டும். ஒரு நாளைக்கு மூன்று முறை கலக்கி விட வேண்டும். நன்கு நசுக்கிய பின்னர், வடிகட்டி சாறு எடுக்க வேண்டும். இந்த சாற்றை 6 மாதங்கள் வரை சேமித்து வைத்து, ஒரு ஏக்கர் நிலத்திற்கு உபயோகிக்கலாம்.

சில பரந்த அளவிலான தாவர / இயற்கையான பூச்சிக்கொல்லிகள்:

நீமாஸ்த்ரா:

ஐந்து கிலோ வேம்பு இலைகளை, தண்ணீர் கொண்டு நசுக்கி, 5 லிட்டர் மாட்டு கோமியம் மற்றும் 2 கிலோ மாட்டுச்சாணம் சேர்த்து, இடைவெளி விட்டு கலக்கி 24 மணி நேரம் நொதிக்க விட வேண்டும். சாற்றைப்பிழிந்தெடுத்து, அதனுடன் 100 லிட்டர் தண்ணீர் கலந்து, இலை வழியாக ஒரு ஏக்கர் நிலத்திற்குத் தெளிக்கலாம். மாவுப்பூச்சி மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகளுக்கு எதிராக இந்த இயற்கையான பூச்சிக்கொல்லி செயல்படுகின்றது.

பிரம்மாஸ்த்ரா:

  • மாட்டு கோமியம் 10 லிட்டர் உடன், 3 கிலோ வேம்பு இலைகளைப் போட்டு நசுக்க வேண்டும்.
  • சீத்தாப்பழ இலை 2 கிலோ, பப்பாளி இலை 2 கிலோ, மாதுளை இலை 2 கிலோ, கொய்யா இலை 2 கிலோ இவற்றுடன் தண்ணீர் சேர்த்து நன்கு நசுக்க வேண்டும்.
  • மேலே கூறிய இரண்டையும் கலந்து, 5 முறை கொதிக்க வைத்து பின் பாதியாகக் குறைக்க வேண்டும்.
  • இதை அப்படியே 24 மணி நேரத்திற்கு வைத்திருந்து, பின் சாறு பிழிந்து எடுக்க வேண்டும். இதை பாட்டில்களில் அடைத்து 6 மாதங்கள் வரை சேமித்து வைக்கலாம்.
  • காய் மற்றும் பழத்துளைப்பான்கள், சாறு உறிஞ்சும் பூச்சிகளுக்கு எதிராகப் பயன்படுத்தலாம்.
  • 2 – 2.5 லிட்டர் சாறுடன், 100 லிட்டர் தண்ணீர் கலந்து நீர்த்து பின் 1 ஏக்கர் நிலத்திற்கு உபயோகிக்கலாம்.

 

 
முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016